ஜி. வி. பிரகாஷ் குமார்
ஜி. வி. பிரகாஷ் குமார் (G. V. Prakash Kumar, பிறப்பு:13 சூன் 1987) இந்திய இசையமைப்பாளரும், பின்னணிப் பாடகரும், நடிகரும், திரைப்படத் தயாரிப்பாளருமாவார். இவர் தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் பணியாற்றியதற்காக அறியப்படுகிறார். இவரது முதல் திரைப்படம் எஸ் பிக்சர்சின் வெயில் என்பதாகும். இவர் 2010 களின் முற்பகுதியில் தமிழ்த் திரைப்படங்களில் புகழ் பெற்றார்.[1][2] இவர் 2015 இல் டார்லிங் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.[3] இவர் தனது திரைப்பட வாழ்க்கையில் தேசிய விருது ஒன்றையும், மூன்று பிலிம்பேர் விருதுகளையும் வென்றுள்ளார்.
ஜி. வி. பிரகாஷ் குமார் | |
---|---|
பிறப்பு | சூன் 13, 1987 சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
மற்ற பெயர்கள் | ஜி. வி. பி |
பணி | திரைப்பட நடிகர், திரைப்பட இசையமைப்பாளர், தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர் |
செயற்பாட்டுக் காலம் | 2006 முதல் தற்போது வரை |
வாழ்க்கைத் துணை | சைந்தவி |
ஆரம்கால வாழ்க்கை
தொகுபிரகாஷ் குமார் ஜி. வெங்கடேஷ், பின்னணிப் பாடகி ஏ. ஆர். ரைஹானா ஆகியோரின் ஒரே மகனாவார். ஏ. ஆர். ரைஹானா இசையமைப்பாளர் ஏ. ஆர் ரகுமானின் மூத்த சகோதரியாவார்.[4] இவருக்கு பவானி ஸ்ரீ என்ற இளைய சகோதரியும் உள்ளார். அவர் ஒரு நடிகையும் விடுதலை பகுதி 1, க/பெ ரணசிங்கம், பாவக் கதைகள் போன்ற திரைப்படங்கள்/தொடர்களில் தோன்றயவருமாவார்.
தனிப்பட்ட வாழ்க்கை
தொகு2013 இல் பிரகாஷ் தனது பள்ளித் தோழியான பாடகி சைந்தவியை மணந்தார்.[5] 2020 இல் இவர்கள் ஒரு மகளுக்குப் பெற்றோரானார்கள்.[6] 2024 மே 13 அன்று சைந்தவியும் பிரகாசும் பிரிந்ததாக அறிவித்தனர்.[7]
தொழில் வாழ்க்கை
தொகுஇசையமைப்பாளராக
தொகுஇயக்குனர் எஸ். சங்கரின் தமிழ்த் திரைப்படமான ஜென்டில்மேன் என்ற திரைப்படத்தின் ஒலிப்பதிவில் இவர் முதன்முதலில் ஒரு பாடகரானார். ரகுமானின் மற்ற திட்டங்களுக்கும் இவர் பங்களித்துள்ளார்.[8] இவர் ஹாரிஸ் ஜெயராஜுடன் இணைந்து அந்நியன், உன்னாலே உன்னாலே (2007) ஆகிய திரைப்படங்களில் இரண்டு பாடல்களைப் பாடியுள்ளார்.
வசந்தபாலன் இயக்கி இயக்குநர் எஸ். சங்கர் தயாரித்த விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட தமிழ்த் திரைப்படமான வெயிலில் ஜி. வி. பிரகாஷ் ஒரு திரைப்பட இசையமைப்பாளராக அறிமுகமானார். ஏ. எல். விஜய் இயக்கிய மதராசபட்டினம் திரைப்படத்தில் இவரது இசை பாராட்டப்பட்டது. குறிப்பாக இவரது பாடல் "பூக்கள் பூக்கும் தருணம்".
செல்வராகவனின் கற்பனை, அதிரடி சாகசத் திரைப்படமான ஆயிரத்தில் ஒருவன் தேசிய விருது வென்ற ஆடுகளம், நாடகத் திரைப்படமான மயக்கம் என்னஆகியவற்றில் தனது இசைக்காக விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றார். மயக்கம் என்ன திரைப்படப் பாடல்களில் ஐந்து பாடல்களை செல்வராகவனும் தனுசும் எழுதியுள்ளனர். மேலும் இவர்கள் இருவரும் "காதல் என் காதல்" என்ற பாடலைப் பாடினர். இப்படத்தில் "பிறை தேடும்" பாடலும் இருந்தது. இப்பாடலை பிரகாஷ் தனது வருங்கால மனைவி சைந்தவியுடன் இணைந்து பாடினார். அதே நேரத்தில் தனுஷ் எழுதிப் பாடிய "ஓட ஓட ஓட தூரம்" எனற மற்றொரு பாடல் வெறும் 5 நிமிடங்களில் இசையமைக்கப்பட்டு ஒரு மணி நேரத்திற்குள் பதிவு செய்யப்பட்டது. ரெடிப்.காம் ஒலிப்பதிவை மதிப்பாய்வு செய்து பிரகாஷ், "தனது சாதாரண பாடல்களிலிருந்து விலகி செல்வராகவன் கோரும் வகையில் எரிச்சலூட்டும் பாடல்களை வழங்க மிகவும் கடினமாக முயற்சித்து சவாலை ஏற்றார்" என்றும் கூறினார்.[9] பொழுதுபோக்கு இணையதளம் பிகைண்ட்வுட்சு.காம் விமர்சகர்கள் பிரகாஷ் "தனது திறமையை மீண்டும் வலியுறுத்துகிறார்" என்று மேற்கோள் காட்டி, இத்திரைப்படப் பாடல்களில் "போதுமான அளவு போதை உள்ளது" என்று கூறியது.[10] 2011 செப்டம்பர் பிற்பகுதியில், ஆர். எஸ். இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனத்தின் முப்பொழுதும் உன் கற்பனைகள் திரைப்படத்தில் தாமரை எழுதி பிரகாஷ் இசையமைத்து பாடிய "ஒரு முறை" என்ற ஒற்றைப் பாடல் வெளியிடப்பட்டது. இவரது அடுத்தடுத்த வெளியீடுகளில் அரசியல் நையாண்டித் திரைப்படமான சகுனி, இந்திக் குற்றத் திரைப்படமான கேங்க்ஸ் ஆஃப் வாஸேபூரின் பின்னணி இசை, சன்ரைசர்சு ஹைதராபாத்தின் முதற்பாடல் ஆகியவை அடங்கும். டார்லிங் திரைப்படத்தின் பாடல்கள் வெற்றி பெற்றன. குறிப்பாக "வந்தா மல", "அன்பே அன்பே" "சட்டுனு இடி மழை".இத்திரைப்படம் பிரகாசுக்கு நடிகராக அறிமுகமான திரைப்படமாகும். காக்க முட்டை திரைப்படத்தில் பிரகாசின் பாடல்கள் மாபெரும் வெற்றியைப் பெற்றன. "கருப்பு கருப்பு" பாடல் சில மாதங்களாக தரவரிசையில் இருந்தது. "கருப்பு நெறத்தழகி" பாடல் கொம்பன் திரைப்படத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ஜி. வி. பிரகாஷ் தனது 50 வது படத்திற்கு அட்லீயுடன் கையெழுத்திட்டார். இப்படம் விஜயின் 59 வது படமாகும், இத்திரைப்படம் தெறி என்று பெயரிடப்பட்டது.[11]
வெற்றிமாறன்-தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன்சுதா கொங்கரா- சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று ஆகிய இரண்டு திரைப்படங்கள் ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்த கடைசி இரண்டு திரைப்படங்கள் ஆகும்.[12]
திரைப்படத் தயாரிப்பு
தொகு2013 இல், பிரகாஷ் குமார் "ஜி. வி. பிரகாஷ் குமார் புரொடக்சன்ஸ்" என்ற பெயரில் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். இவரது முதற் படமான மத யானைக் கூட்டம், பாலு மகேந்திராவின் முன்னாள் உதவியாளரான விக்ரம் சுகுமாரன் இயக்கியுள்ளார்.[13]
நடிகராக
தொகு2012 இல், இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் ஒரு நடிப்பு முயற்சி குறித்து ஜி. வி. பிரகாஷ் குமாரை அணுகினார். பிரகாஷ் இத்திட்டத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். இருப்பினும், படம் பின்னர் தொடங்கத் தவறிவிட்டது. பின்னர் இவர் மூன்று படங்களில் விரைவாக அடுத்தடுத்து நடிக்க ஒப்பந்தம் செய்தார். மூன்று படங்களும் ஒரே நேரத்தில் தயாரிப்பிற்குவந்தன. தனது நடிப்புத் திறனை மேலும் மேம்படுத்துவதற்காக, நடிகர் ஆடுகளம் நரேனிடமிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்ட இவர், ஒரு நடிகராக நடித்ததில் ஒரு பாடகராக தனது மேடை நிகழ்ச்சிகளில் தனது திறனை நிரூபிக்க உதவியது என்று குறிப்பிட்டுள்ளார்.[14]
2021 இல், இவரது படம் வணக்கம் டா மாப்பிளே ஓடிடி வெளியீட்டிற்கு நேரடியாக வந்தது.[15] 2016 இன் கடவுள் இருக்கான் குமாருவுக்குப் பிறகு ஜி. வி. பிரகாஷ், ராஜேஷ் இணைந்து நடித்த இரண்டாவது படம் இதுவாகும்.[16] பேச்சலர், ஜெயில் ஆகிய திரைப்படங்கள் திசம்பர் மாதம் வெளியிடப்பட்டன.
திரைப்பட விவரம்
தொகுஇசையமைத்துள்ள திரைப்படங்கள்
தொகு- வெயில் (2006)
- கிரீடம் (2007)
- பொல்லாதவன் (2007)
- நான் அவள் அது (2008)
- சேவல் (2008)
- அங்காடி தெரு (2009)
- ஆயிரத்தில் ஓருவன் (2009)
- இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் (2009)
- மதராசபட்டினம் (2010)
- ஆடுகளம் (2011)
- தெய்வத்திருமகள் (2011)
- மயக்கம் என்ன (2011)
- முப்பொழுதும் உன் கற்பனைகள் (2012)
- ஓரம் போ (2007)
- எவனோ ஒருவன் (2007)
- காளை (2007)
- குசேலன் (2008)
- சகுனி ( 2012 )
- தாண்டவம் (2012 )
- ஏன் என்றால் காதல் என்பேன் (2012)
- பென்சில்(2013)
- அசுரன் (2019)
- சூரரைப் போற்று (திரைப்படம்)
நடித்த திரைப்படங்கள்
தொகுஆண்டு | திரைப்படம் | கதாபாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
2008 | குசேலன் | அவராகவே | "சினிமா சினிமா" பாடலில் சிறப்புத் தோற்றம் |
2013 | நான் ராஜாவாகப் போகிறேன் | அவராகவே | "காலேஜ் பாடம்" பாடலில் சிறப்புத் தோற்றம் |
2013 | ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை | அவராகவே | |
2013 | தலைவா | நடனம் ஆடுபவர் | "வாங்கண்ணா" பாடலில் சிறப்புத் தோற்றம் |
2015 | டார்லிங் | கதிர் | |
2015 | திரிஷா இல்லனா நயன்தாரா | ||
2016 | பென்சில் | பின்தயாரிப்பு | |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Exclusive biography of @gvprakash and on his life". FilmiBeat. Archived from the original on 2 August 2021. பார்க்கப்பட்ட நாள் 2 March 2021.
- ↑ "G.V. Prakash Kumar". IMDb. Archived from the original on 16 March 2021. பார்க்கப்பட்ட நாள் 2 April 2021.
- ↑ "Response to 'Darling' makes G.V. Prakash Kumar 'responsible'". 17 January 2015. Archived from the original on 20 September 2021. பார்க்கப்பட்ட நாள் 1 April 2021.
- ↑ "Reihana Interview". Behindwoods. Archived from the original on 4 April 2023. பார்க்கப்பட்ட நாள் 13 May 2013.
- ↑ "GV Prakash-Saindhavi wedding on June 27!". Sify. 17 April 2013. Archived from the original on 21 November 2018. பார்க்கப்பட்ட நாள் 18 April 2013.
- ↑ "GV Prakash and Saindhavi welcome their first child, a baby girl". India Today. 21 April 2020. Archived from the original on 5 May 2020. பார்க்கப்பட்ட நாள் 9 May 2020.
- ↑ "Tamil composer-actor GV Prakash, singer Saindhavi announce separation". India Today (in ஆங்கிலம்). 2024-05-14. பார்க்கப்பட்ட நாள் 2024-05-14.
- ↑ "A passion for music". தி இந்து (Chennai, India). 28 January 2008 இம் மூலத்தில் இருந்து 29 January 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080129232112/http://www.hindu.com/2008/01/28/stories/2008012859311100.htm.
- ↑ "Review: Mayakkam Enna songs are entertaining". Rediff. 22 September 2011. Archived from the original on 25 September 2011. பார்க்கப்பட்ட நாள் 23 September 2011.
- ↑ "MAYAKKAM ENNA MUSIC REVIEW – MAYAKKAM ENNA MUSIC REVIEW". www.behindwoods.com. Archived from the original on 19 October 2011. பார்க்கப்பட்ட நாள் 23 September 2011.
- ↑ Team, DNA Web (10 April 2016). "'Theri': 5 reasons why you shouldn't miss this Vijay film". DNA India. Archived from the original on 20 May 2022. பார்க்கப்பட்ட நாள் 29 March 2021.
- ↑ "If directors can wait, I would gladly compose for them: GV Prakash Kumar". Archived from the original on 6 December 2021. பார்க்கப்பட்ட நாள் 6 December 2021.
- ↑ "GV Prakash Kumar turns producer". Indian Express. 6 February 2013. Archived from the original on 13 February 2013. பார்க்கப்பட்ட நாள் 15 February 2013.
- ↑ Sudhir Srinivasan (November 2014). "On a different note". The Hindu இம் மூலத்தில் இருந்து 4 April 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230404232406/https://www.thehindu.com/features/cinema/on-a-different-note/article6555457.ece?secpage=true&secname=entertainment.
- ↑ "GV Prakash to collaborate with debutant director for Rebel". சினிமா எக்ஸ்பிரஸ். Archived from the original on 25 January 2022. பார்க்கப்பட்ட நாள் 19 January 2022.
- ↑ "GV Prakash-Rajesh film titled Vanakkam da Mappilei". சினிமா எக்ஸ்பிரஸ். Archived from the original on 16 April 2021. பார்க்கப்பட்ட நாள் 19 January 2022.