ஜீன் கம்பாண்டா

ஜீன் கம்பாண்டா (Jean Kambanda, பிறப்பு: அக்டோபர் 19, 1955) என்பவர் 1994 ஆம் ஆண்டில் ருவாண்டா இனப்படுகொலை இடம்பெற்ற தொடக்கத்தில் ருவாண்டாவின் இடைக்கால அரசின் பிரதமராக பதவியில் இருந்தவர். 1951 இல் இனப்படுகொலை குற்றத்தை தடுப்பது, தண்டிப்பது தொடர்பான உடன்படிக்கை நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர் இனப்படுகொலைக் குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட முதலாவது அரசுத் தலைவர் இவராவார்[2]

ஜீன் கம்பாண்டா
Jean Kambanda
ருவாண்டாவின் 5வது பிரதமர்
பதவியில்
ஏப்ரல்l 9, 1994[1] – சூலை 19, 1994
குடியரசுத் தலைவர்தியோடோர் சிந்திக்குப்வாபோ
முன்னையவர்அகாத்தி உவிலிங்கியிமானா
பின்னவர்பாஸ்டின் துவாகிரமுங்கு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஅக்டோபர் 19, 1955 (1955-10-19) (அகவை 68)
அரசியல் கட்சிகுடியரசு சனநாயக இயக்கம்
தொழில்வங்கியாளர்
ஜீன் கம்பாண்டா
பிறப்புஅக்டோபர் 19, 1955 (1955-10-19) (அகவை 68)
குற்றம்இனப்படுகொலை, மானுடத்துக்கு எதிரான குற்றங்கள்
தண்டனைஆயுள் தண்டனை
தற்போதைய நிலைமாலியில் சிறை
தொழில்அரசியல்வாதி, முன்னாள் பிரதமர்

கம்பாண்டா வணிகப் பொறியியலில் பட்டம் பெற்றவர். வங்கி உயர் அதிகாரியாகப் பணியாற்றியவர். 1994 ஏப்ரல் குழப்பக் காலப்பகுதியில் எதிர்க்கட்சியாக இருந்த குடியரசு சனநாயக இயக்கத்தின் முக்கிய தலைவராக இருந்தார்.

அரசுத்தலைவர் யுவெனால் அபியாரிமானா, பிரதமர் அகாத்தி உவிலிங்கியிமானா ஆகியோர் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து கம்பண்டா 1994 ஏப்ரல் 9 இல் புரதமராகப் பதவியேற்றார். இனப்படுகொலை நடைபெற்ற காலப்பகுதியில் நூறு நாட்கள் 1994 சூலை 19 வரை இவர் பதவியில் இருந்தார். அதன் பின்னர் நாட்டை விட்டு வெளியேறினார்.

குற்றங்கள் தொகு

  • இனப்படுகொலை மற்றும் இனப்படுகொலைக்கு ஒப்புதல் அளித்தமை
  • இனப்படுகொலை செய்ய பொதுவாகவும் மற்றும் நேரடியாகவும் தூண்டியமை
  • இனப்படுகொலை உதவியாகவும், உடந்தையாகவும் இருந்தமை

மேற்கோள்கள் தொகு

  1. Prunier, Gérard (1995). The Rwanda Crisis, 1959–1994: History of a Genocide (Hardcover ). London: C. Hurst & Co. Publishers. பக். 232. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-85065-243-0. https://books.google.com/books?id=XYIJcrgzgQ0C&pg=PA1&dq#v=onepage&q=&f=false. 
  2. Rwandan Ex-Premier Gets Life Term, Ann M. Simmons, 5 September 1998, LA Times, Retrieved 29 March 2016
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜீன்_கம்பாண்டா&oldid=2714837" இலிருந்து மீள்விக்கப்பட்டது