ஜூனியர் என்டிஆர்
நந்தமூரி தாரக ராமாராவ் (பிறப்பு 20, 1983), பெரும்பாலும் ஜூனியர் என்டிஆர், என்று அறியப்படும் இவர், தெலுங்கு திரைப்பட நடிகர், குச்சிப்புடி நடன கலைஞர், மற்றும் பின்னணிப் பாடகர். இவர் முன்னாள் ஆந்திரப் பிரதேச முதல்வர் என். டி. ராமாராவுடைய பேரன் ஆவார்.[1][2] தாரக் தன்னுடைய சிறுவயதில் நடித்த, பிரம்ம ரிஷி விஷ்வாமித்ரா (1991) மற்றும் இராமாயணம் (1997), திரைப்படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதை 1998 ஆம் ஆண்டு பெற்றார்.
நந்தமூரி தாரக ராமாராவ், ஜூனியர் | |
---|---|
பிறப்பு | நந்தமூரி தாரக ராமாராவ் 20 மே 1983 ஹைதராபாத், ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
இருப்பிடம் | ஹைதராபாத், ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
மற்ற பெயர்கள் | ஜூனியர். என்டிஆர், என்டிஆர் ஜூனியர், தாரக், நந்தமுரி தாரக ராமராவ், ஏஒன் ஸ்டார், யங் டைகர். |
பணி | நடிகர், பின்னணிப் பாடகர் |
செயற்பாட்டுக் காலம் | 1991-தற்போது வரை |
பெற்றோர் | நந்தமூரி ஹரிகிருஷ்ணா நந்தமூரி ஷாலினி |
வாழ்க்கைத் துணை | லட்சுமி பிரானாதி |
உறவினர்கள் | மாண்டவ சாய் குமார் |
ஐந்து வருடங்களுக்குப் பின்னர், இவர் நின்னு சூடாலனி (2001) திரைப்படத்தில் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்தார். அதன்பிறகு பல திரைப்படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். இவர் தாத்தா ஆரம்பித்த தெலுங்கு தேசக் கட்சிக்காக தேர்தலில் ஆதரவு திரட்டினார்.
குறிப்புகளும் மேற்கோள்களும்
தொகு- ↑ IndiaGlitz – NTR's Kuchipudi dance in 'Kantri' – Telugu Movie News
- ↑ "SET MAX | Bollywood Movies Extra Shots Sony Max Television | popular Hindi Movie Channel | IPL cricket live". Archived from the original on 2012-09-05. பார்க்கப்பட்ட நாள் 2012-09-30.