ஜூலியஸ் ரிச்சர்டு பெட்ரி

Julius Richard Petri

ஜூலியஸ் ரிச்சர்டு பெட்ரி (Julius Richard Petri, மே 31, 1852 – திசம்பர் 20, 1921) ஓர் செருமானிய நுண்ணுயிரியலாளர் ஆவார். இவர் புகழ்பெற்ற பாக்டீரியா அறிவியலாளரான ராபர்ட் கோக்கின் உதவியாளராகப் பணியாற்றியபோது உயிரணுக்களை வளர்க்கப் பயன்படுத்தப்படும், பெட்ரி டிஷ் என அறியப்படும், கண்ணாடி கலனை முதன்முதலில் வடிவமைத்ததாகக் கருதப்படுகிறது.

ஜூலியஸ் ரிச்சர்டு பெட்ரி
Julius Richard Petri
பிறப்புமே 31, 1852(1852-05-31)
பார்மென், செருமானிய கூட்டமைப்பு
இறப்புதிசம்பர் 20, 1921(1921-12-20) (அகவை 69)
சீயிட்சு, வெயிமார், செருமனி
வாழிடம்பெர்லின்
குடியுரிமைசெருமானியர்
தேசியம்பிரசியர்
துறைநுண்ணுயிரியலாளர், படைத்துறை மருத்துவர், அறுவை சிகிச்சை நிபுணர்
அகார்-அடிப்படையாக அமைந்த வளர்ப்பூடகமொன்றில் பாக்டீரிய கூட்டத்துடன் உள்ள ஓர் பெட்ரி கலன்.

வாழ்க்கை வரலாறுதொகு

பெட்ரி முதலில் கைசர்-வில்ஹெம் படைத்துறை மருத்துவர்களுக்கான கழகத்தில் (1871–1875) மருத்துவம் கற்று 1876இல் பட்டம் பெற்றார். தமது படிப்பை பெர்லினில் உள்ள சாரிட்டீ மருத்துவமனையில் தொடர்ந்தார். 1882ஆம் ஆண்டுவரை படைத்துறை மருத்துவராகப் பணியாற்றினார். 1877 முதல் 1879 வரை பெர்லினின் இம்பீரியல் உடல்நல அலுவலகத்திற்கு (இடாய்ச்சு மொழி: Kaiserliches Gesundheitsamt) அனுப்பப்பட்டார். அங்கு நோபல் பரிசு பெற்ற இராபர்ட் கோக்கிற்கு உதவியாளராகப் பணியாற்றினார். தமது சக ஆய்வாளர் வால்த்தர் ஹெஸ்ஸின் நியூயார்க் நகரத்தில் பிறந்த மனைவி ஆஞ்செலினா ஹெஸ்ஸின் வழிகாட்டுதலில் அகார் தட்டுக்களில் கோக் ஆய்வகம் பாக்டீரியாக்களை வளர்க்கத் தொடங்கியது. அப்போது பெட்ரி கலனை உயிரணு வளர்ப்புக்கு உருவாக்கினார். இவரது மேம்படுத்தல்களால் நோய்களுக்கு காரணமான நுண்ணுயிரிகளை அடையாளம் காண்பது இயலக்கூடியதாயிற்று.

வெளி இணைப்புகள்தொகு