ஜெகத்பதி ஜோஷி

முன்னாள் இந்தியத் தொல்லியல் ஆய்வகத் தலைமை இயக்குநர்

ஜெகத்பதி ஜோஷி (Jagat Pati Joshi) (பிறப்பு: 14 சூலை 1932 - இறப்பு:28 சூன் 2008) இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் தலைமை இயக்குநராக 1987 முதல் 1990-ஆம் ஆண்டு வரை பதவியில் இருந்தவர். இவர் குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள தோலாவிரா மற்றும் சுர்கோட்டா ஆகிய சிந்துவெளி நாகரித்தின் தொல்லியல் களங்களான அகழாய்வு செய்தவர்.

இளமை வாழ்கை தொகு

ஜெகத்பதி ஜோஷி பிரித்தானிய இந்தியாவின் அல்மோரா நகரத்தில் 14 சூலை 1932-இல் பிறந்தவர். இவர் 1954-இல் லக்னோ பல்கலைகழகத்தில் பண்டைய வரலாறு மற்றும் பண்பாட்டுப் படிப்பில் முதுநிலை பட்டம் பெற்றார். 1961-இல் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தில் பணியில் சேர்ந்து அதன் தொல்லியல் பயிற்சி நிறுவனத்தில் தொல்லியல் துறையில் பட்டயப் படிப்பு முடித்தார்.

பணி தொகு

ஜெகத்பதி ஜோஷி 1966-இல் சிந்துவெளி நாகரித்தின் தொல்லியல் களங்களான தோலாவிரா, சுர்கோட்டா மற்றும் மால்வான் தொல்லியற்களங்களை, எப்.ரேமாண்ட் ஆல்சின்னுடன் இணைந்து அகழாய்வு செய்தார். இவர் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் தலைமை இயக்குநராக 1987 முதல் 1990-ஆம் ஆண்டு வரை பதவியில் இருந்தார்.

படைப்புகள் தொகு

ஜெகத் பதி ஜோஷி சிந்துவெளி நாகரிகத் தொல்லியல் களங்களான அரப்பா, சுர்கோட்டா, தோலாவிரா குறித்து பல நூல்களை வெளியிட்டுள்ளார்.[1][2]அவைகள்:

  • Harappan Architecture and Civil Engineering (History of Indian Science and Technology
  • Excavation at Surkotada and Exploration in Kutch
  • Corpus of Indus Seals and Inscriptions, Vol. 1
  • Facets of Indian Civilization: Recent Perspectives

மேற்கோள்கள் தொகு

  • "C. V.:Sri Jagat Pati Joshi". Infinity Foundation.


முன்னர்
எம். எஸ். நாகராஜ ராவ்
தலைமை இயக்குநர்
இந்தியத் தொல்லியல் ஆய்வகம்

1987-1989
பின்னர்
முனீஸ் சந்திர ஜோஷி
  1. Books on the Indus Valley Civilization by Jagat Pati Joshi
  2. Books of Jagat Pati Joshi
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெகத்பதி_ஜோஷி&oldid=3350031" இலிருந்து மீள்விக்கப்பட்டது