ஜெசி ஓவென்ஸ்

ஜேம்ஸ் கிளீவ்லன்ட் "ஜெசி" ஓவென்ஸ் (James Cleveland "Jesse" Owens, செப்டம்பர் 12, 1913-மார்ச் 31, 1980) ஓர் அமெரிக்க தட கள ஆட்டக்காரர் ஆவார். ஓவென்சு விரைவோட்டங்களிலும் நீளம் தாண்டுதலிலும் சிறப்புப் பயிற்சி மேற்கொண்டார்; தன் வாழ்நாளில் "தடகள விளையாட்டுக்களின் வரலாற்றில் மிகச் சிறந்தவராகவும், மிகப் புகழ்பெற்றவருமாக" விளங்கினார்.[2]

ஜெசி ஓவென்ஸ்
Jesse Owens 1936.jpg
1936இல் ஜெசி ஓவென்ஸ்
தனித் தகவல்கள்
முழுப் பெயர்ஜேம்ஸ் கிளீவ்லன்ட் ஓவென்ஸ்
தேசியம்அமெரிக்கர்
பிறந்த நாள்செப்டம்பர் 12, 1913(1913-09-12)
பிறந்த இடம்ஓக்வில், அலபாமா, ஐக்கிய அமெரிக்கா
இறந்த நாள்மார்ச்சு 31, 1980(1980-03-31) (அகவை 66)
இறந்த இடம்துஸ்கான், அரிசோனா, ஐக்கிய அமெரிக்கா
உயரம்5 ft 10 34 in (180 cm)[1]
எடை165 lb (75 kg)
விளையாட்டு
நாடுஅமெரிக்கா
விளையாட்டுதட கள விளையாட்டுக்கள்
நிகழ்வு(கள்)விரைவோட்டம், நீளம் தாண்டுதல்
 
பதக்கங்கள்
ஆண்கள் பிரிவு
 ஐக்கிய அமெரிக்கா
ஒலிம்பிக் விளையாட்டுக்கள்
தங்கம் 1936 பெர்லின் 100 மீ
தங்கம் 1936 பெர்லின் 200 மீ
தங்கம் 1936 பெர்லின் 4x100 மீ ரிலே
தங்கம் 1936 பெர்லின் நீளம் பாய்தல்

தொழில் முறை வாழ்க்கைதொகு

ஒகைய்யோ மாநிலப் பல்கலைக்கழகம்தொகு

அலபாமாவில் வறுமை நிலையில் வளந்த ஜெசி ஓவென்ஸ் சிறுவராக இருக்கும்பொழுது ஓட ஆரம்பித்தார். 1933இல் தேசிய உயர்பள்ளிப் போட்டிகளில் உலகச் சாதனையுக்கு சமமாக நேரத்தில் 100 யார்ட் விரையோட்டத்தை ஓடியுள்ளார். ஒகையோ மாநிலப் பல்கலைக்கழகத்தை சேர்ந்து 1935இலும் 1936இலும் மொத்தத்தில் எட்டு தனி என்.சி.ஏ.ஏ. (கல்லூரிப் போட்டி) பட்டங்களை வென்றுள்ளார்.

1936 பெர்லின் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்தொகு

பெர்லின், ஜெர்மனியில் நடந்த 1936 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் 100 மீ விரையோட்டம், 200 மீ விரையோட்டம், நீளம் பாய்தல், மற்றும் தொடர் ஓட்டம் ஆகிய தடகள போட்டிகளில் தங்கப் பதக்கத்தை வென்று அனைத்துலகில் புகழுக்கு வந்தார். இந்த காலத்தில் ஜெர்மனியின் தலைவர் இட்லரால் பிரபலப்படுத்திய வெள்ளை இன மேன்மை நம்பிக்கையை ஜெசி ஓவென்ஸ் வெற்றியால் ஓர் அளவு மறுத்துவிட்டது. ஆனாலும், அமெரிக்காவில் கருப்பின மக்களும் வெள்ளை இன மக்களும் ஒரே விடுதியில் தங்கமுடியாத, ஒரே உணவகத்தில் சாப்பிடமுடியாத காலத்தில் ஜெசி ஓவென்ஸ் ஜெர்மனியில் வெள்ளை இன மக்கள் உடன் தங்கி சாப்பிட்டார்.


ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் பின்தொகு

நிற வெறி காரணமாக , அவர் வாழ்ந்த காலத்தில் அரசின் உதவியோ , தனியார் உதவியோ பெரிய அளவில் கிடைக்கவில்லை .கால்பந்து போட்டிகளுக்கு நடுவே ஆடுகளத்தில் குதிரை, மோட்டார் சைக்கிள், நாய்களுடன் போட்டிப்போட்டு ஓடினார். அதில் கிடைத்த சொற்ப காசுதான் குடும்பத்தை காப்பாற்றியது. ஒலிம்பிக் சாம்பியனாக இருந்துகொண்டு குதிரைகளோடு போட்டி போடுவதை பலரும் அவமானம் என்றனர்.அதற்க்கு அவர்

"தங்கப்பதக்கங்களை உண்ண முடியாது. நேர்மையான வழியில் சாப்பிட இதுதான் எனக்கு சிறந்த வழியாகும்"

என பதிலடி கொடுத்தார்.[3]

சிறப்புகள்தொகு

இன்று பெர்லின் நகரில் ஜெசி ஓவென்ஸ் பெயர்வைக்கப்பட்டு ஒரு தெரு உள்ளது. 1976இல் குடியரசுத் தலைவரின் சுதந்திர விருது பெற்றார். 1970இல் அலபாமா விளையாட்டுப் புகழவையில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேற்சான்றுகள்தொகு

  1. Edmondson, Jacqueline (2007). Jesse Owens: A Biography. USA: Greenwood Publishing Group. பக். 29. https://books.google.com/books?id=ngxJ7XqMqTEC&printsec=frontcover#v=onepage&q&f=true. பார்த்த நாள்: September 6, 2014. 
  2. Litsky, Frank (1980), Jesse Owens Dies Of Cancer at 66, New York Times, retrieved March 23, 2014
  3. Schwartz, Larry. "Owens Pierced a Myth". ESPN.

வெளி இணைப்புகள்தொகு

ஜெசி ஓவென்ஸ் பற்றிய மேலதிக தகவல்களைப் பார்க்க தொடர்புடையத் திட்டங்கள்:

  விக்சனரி விக்சனரி
  நூல்கள் விக்கிநூல்
  மேற்கோள் விக்கிமேற்கோள்
  மூலங்கள் விக்கிமூலம்
  விக்கிபொது
  செய்திகள் விக்கிசெய்தி


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெசி_ஓவென்ஸ்&oldid=2806189" இருந்து மீள்விக்கப்பட்டது