ஜெய்ராம் ரமேஷ்

இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதி

ஜெய்ராம் ரமேஷ் 2004 ஜூன் முதல் ஆந்திர பிரதேச பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு இந்தியப் நாடாளுமன்றத்தின் மாநிலங்கள் அவை உறுப்பினராக உள்ளார். அவர் 2009 மே முதல் இந்திய சுற்றுப்புற சூழல் மற்றும் வனத்துறை இணை அமைச்சராக (தற்சார்பு பொறுப்பு) உள்ளார். தேசிய ஆலோசனை குழுமத்தில் உறுப்பினராகவும் உள்ளார் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தில் ஜனவரி 2006 முதல் பிப்ரவரி 2009 வரை, வர்த்தகம் மற்றும் தொழில் துறை இணை அமைச்சராக இருந்த அவர், ஏப்ரல் 2008 முதல் பிப்ரவரி 2009 மின்சார இணை அமைச்சராகவும் இருந்துள்ளார்.[2][3].

ஜெய்ராம் ரமேஷ்
Jairam ramesh.jpg
Jairam Ramesh at ITC Green Centre in Gurgaon, July 9, 2009
Member of Parliment (Rajya Sabha), Minister of State (Independent Charge) for Environment and Forests
பதவியில்
2004 - Incumbent
முன்னவர் மன்மோகன் சிங்
தொகுதி அதிலாபாத், ஆந்திரப்பிரதேசம்
தனிநபர் தகவல்
பிறப்பு 9 ஏப்ரல் 1954 (1954-04-09) (அகவை 68)
சிக்மகளூர், கர்நாடகம்
அரசியல் கட்சி இந்திய தேசியக் காங்கிரஸ்
வாழ்க்கை துணைவர்(கள்) Jayashree Jairam
பிள்ளைகள் sons: Anirudh and Pradyumna
இருப்பிடம் புது தில்லி
சமயம் Hindu (Iyengar Brahmin) [1]
இணையம் Jairam Ramesh
As of January 25, 2007
Source: [1]

குடும்பம்தொகு

ஜெய்ராம் ரமேஷ், ஐஐடி மும்பை, பொதுப் பொறியியல் பிரிவின் முன்னாள் தலைவரான, காலம் சென்ற பேராசிரியர் சி.கே.ரமேஷின் மகன் ஆவார். அவரது தாயார் ஸ்ரீமதி ஸ்ரீதேவி ரமேஷ், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கே.வி.ராமனாதனின் மகளாவார். 1954 ஏப்ரல் 9, கர்நாடகா சிக்மகளூரில், பத்ரா வன விலங்கு சரணாலயம் மற்றும் புலி பாதுகாப்பு திட்டம் அருகில் உள்ள தனது பாட்டனாரின் காபித் தோட்டத்தில் பிறந்தார். அவருடைய தாய் மொழி தெலுங்கு ஆகும்.

அவருக்கு எட்வர்ட் பிரிச்சர்ட் கீ என்பவரின் தி வைல்ட்லைப் ஆப் இந்தியா என்ற புத்தகம் பரிசாக கிடைத்தபோது இயற்கையின் பரிச்சியம் ஆரம்பமானது.' ஜவஹர்லால் நேருவின் அழகான முன்னுரையுடன் கூடிய அந்த தரமான புத்தகம் இப்போதும் அவரிடம் இருக்கிறது. அவர் மும்பையில் வளர்ந்தார். அவரது விதவைத் தாயார் தற்சமயம் பெங்களூரில் வசிக்கிறார்.[4]

1981 ஜனவரி 26, கே.ஆர்.ஜெயஸ்ரீ என்ற தமிழ்ப் பெண்ணை மணந்தார். அவர்களுக்கு அனிருத் மற்றும் பிரத்யும்னா என்ற இரு மகன்கள் உள்ளனர். இருவரும் சட்டம் பயில்கிறார்கள். ஒருவர் ஆக்ஸ்போர்டிலும் மற்றவர் ஹைதராபாத்திலும் பயில்கிறார்கள். அவரும் அவரது துணைவியாரும் தற்சமயம் நியூ டெல்லி, ராஜேஷ் பைலட் மார்கில் உள்ள லோதி கார்டனில் வசிக்கிறார்கள். அவர்களுடைய நிரந்தர இருப்பிடம் ஆந்திர பிரதேஷ், ஹைதராபாத், கைரடாபாதில் உள்ளது.[4][5]

கல்விதொகு

1961-1963 ஆம் ஆண்டுகளில் தனது மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ராஞ்சியில் உள்ள செயின்ட் சேவியர் பள்ளியில் பயின்றார். 1970ஆம் ஆண்டு பாம்பே இந்திய தொழில்நுட்ப கழகம், மும்பை(ஐஐடி-பி)யில் சேர்ந்தார். ஆரம்பத்தில் அக்கல்வியை அவர் வெறுத்தார். ஆனால் இரண்டாம் ஆண்டு, அமெரிக்க பொருளாதார நிபுணர் பால் சாமுவேல்சன் என்பவர் ஸ்வீடிஷ் பொருளாதார நிபுணர் குன்னார் மயர்டாலுக்கு எழுதிய கடிதம் ஒன்றை படிக்க நேர்ந்தது. அக்கடிதத்தில் அவர், இயற்பியல் வல்லுனரும், ஏவுகணை விஞ்ஞானியுமான விக்ரம் சாராபாயை மிகப் புகழ்ந்து எழுதி இருந்தார். எப்படி அவர் சமுதாய அறைகூவலை விட அறிவியலில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார் என்பதை பற்றி குறிப்பிட்டிருந்தார். அது அவர் சிந்தனையை தூண்டியது. 1975 ஆம் ஆண்டில் ஐஐடி-பியில் எந்திரப் பொறியியலில் இளங்கலை தொழில் நுட்ப வல்லுநர் பட்டம் பெற்றார். 2001 ஆம் ஆண்டில் ஐஐடி-பி அவருக்கு புகழ் பெற்ற முன்னாள் மாணவர் விருதை வழங்கியது.

1975-77 ஆம் ஆண்டுகளில் கார்னகி மெல்லோன் பல்கலைகழகத்தின் ஹைன்ஸ் கல்லூரியில் பயின்று, மேலாண்மை மற்றும் பொதுக் கொள்கையில் முதுகலை பட்டம் பெற்றார். 1977-78 ஆம் ஆண்டில், மாசசுசெட்ட்ஸ் தொழில் நுட்ப கல்லூரியின் புதிதாக நிறுவிய பல்துறை தொழில்நுட்ப கொள்கை திட்டப்படி தொழில்நுட்ப கொள்கை, பொருளாதாரம், பொறியியல் மற்றும் மேலாண்மை பயின்றார்.[2][4] ஆனால் அங்கு பெற்ற பட்டங்களைப் பற்றி அவர் குறிப்பிடவில்லை.

ஹைதரபாத், இந்திய வணிக கல்லூரியின் நிறுவன உறுப்பினர்களில் அவரும் ஒருவர். நியூயார்கைச் சேர்ந்த ஆசியா சொசைட்டியின் சர்வதேச குழுமத்தில் உறுப்பினராக உள்ளார். சீனா மீது ரமேஷுக்கு சிறப்பு ஆர்வம் உள்ளது. 2002 ஆம் ஆண்டு முதல் நியூ டெல்லி, இன்ஸ்டிட்யூட் ஆப் சைனீஸ் ஸ்டடீஸ் நிறுவனத்தின் மதிப்புறு ஆய்வாளராக உள்ளார். புத்த மதத்தின் மாணக்கராக தன்னைக் கருதுகிறார். கர்நாடக சங்கீதத்தையும், பரத நாட்டிய நடனத்தையும் விரும்புகிறார்.[6]

தொழில் / வாழ்க்கைதொகு

1978 ஆம் ஆண்டில், ஜெய்ராம் ரமேஷ், உலக வங்கியில் ஒரு சிறிய நல்குபணியில் சேர்ந்தார். 1979 டிசம்பர் இந்தியா திரும்பிய அவர், தொழில் சார்ந்த செலவு மற்றும் விலைகள் செயலகத்தைச் சேர்ந்த பொருளாதார வல்லுநர் லோவ்ராஜ் குமார் என்பவரிடம் உதவியாளராக சேர்ந்தார். மிக விரைவாக அவருக்கு திட்டக் குழுமம், (அபிட் ஹுசைன் ஆலோசகர்), தொழில் துறை அமைச்சகம் மற்றும் மத்திய அரசாங்கத்தின் இதர பொருளாதாரத் துறைகளில் உயர்மட்ட அமைச்சக ரீதியில் நல்குபணிகள் வந்து சேர்ந்தன. அவற்றுள் சில: 1983-85 ஆண்டுகளில், எரி சக்தி கொள்கையை ஆராய்வது, 1986 ஆம் ஆண்டில் சிஎஸ்ஐஆர் நிறுவனத்தின் மறுமதிப்பீடு செய்வது மற்றும் 1987-89 ஆண்டுகளில் தொழில் நுட்ப இயக்கத்தினை நடைமுறைப்படுத்துதல்.

1990 ஆம் ஆண்டில் வி.பி.சிங்கின் தேசிய முன்னணி அரசாங்கத்தில் ஐஏஎஸ் தகுதி உடைய "சிறப்பு பணி அதிகாரி"யாக பணியாற்றினார். 1990 ஆம் ஆண்டில் இந்தியாவின் சர்வதேச வர்த்தக முகவாண்மைகளை சீர்படுத்தினார். 1991ஆம் ஆண்டு பிரதம மந்திரியின் ஆலோசகராக இருந்தார். 1991 ஆம் ஆண்டில், நரசிம்ம ராவின் நிர்வாகத்தில், மன்மோகன் சிங்கின் நிதி அமைச்சகத்தில் அவர் ஒரு முக்கிய புள்ளியாக விளங்கினார்.

1989 ஆம் ஆண்டு தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தோல்வியுற்றதால், தனது காலத்தை கடத்திய ரமேஷ், 1991 ஆம் ஆண்டில் மீண்டு வந்து, ராஜீவ் காந்தியின் தேர்தல் பிரசாரத்தில் அறிவார்ந்த உள்ளீடுகளை அளித்தார். கடந்த சில வருடங்களில், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு ஆலோசனை வழங்கி உள்ளார்.

1991 மற்றும் 1997 ஆம் ஆண்டுகளில் இந்திய பொருளாதார சீர்திருத்த கொள்கைகளை வடிவமைத்து நடைமுறைப்படுத்துவதில் ரமேஷ் பெரும் பங்கு ஆற்றினார். 1992-94 ஆம் ஆண்டுகளில் திட்ட குழுமத்தின் உப தலைவருக்கு ஆலோசகராக இருந்தார். 1993-95 ஆம் ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு இயக்கத்தில் பணியாற்றினார். 1996-98 ஆம் ஆண்டுகளில் நிதி அமைச்சர் பழனியப்பன் சிதம்பரத்திற்கு ஆலோசகராகவும், காப்பாளராகவும் பணியாற்றினார். 1999 ஆம் ஆண்டில் சீயாடிலில் நடக்க இருந்த உலக வர்த்தக கழகத்தின் கூட்டத்திற்கு செல்லவிருந்த அதிகாரபூர்வ குழுவில் சேரும்படி மத்திய அரசாங்கம் அழைப்பு விடுத்தது.[2]

முன்னேற்றதிற்கு அவர் ஆற்றிய பங்கினை நினைவு கூறும் வகையில், 2000 ஆண்டு முதல் 2002 வரை, கர்நாடக அரசாங்கம், மாநில திட்டக் குழுமத்தில், உப தலைவராகவும், ஆந்திர பிரதேச பொருளாதார ஆலோசனை குழுமத்திலும் பணியாற்றினார். மத்திய மின்துறை அமைச்சகத்தில் சிறப்புக் குழுவின் உறுப்பினராகவும் மற்றும் முக்கிய அரசாங்கக் குழுக்களிலும் பணியாற்றினார்.

ரமேஷ், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலர், உப தலைவர், கர்நாடகா திட்டக் குழு (2000-2002), உறுப்பினர், ராஜஸ்தான் வளர்ச்சிக் குழுமம் (1999-2003) மற்றும் சத்திஸ்கர் மாநில அரசாங்க பொருளாதார ஆலோசகர் (2001-03) போன்ற[7] பொறுப்புகளை வகித்தார்.[2] 2004 லோக் சபா தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வினை முறைதிறன் குழுவில் அவர் பங்காற்றினார்.

ஜூன் 2004 ஆம் ஆண்டில், ஆந்திர பிரதேசத்திலுள்ள அடிலாபாத் மாவட்டத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2004 ஆம் ஆண்டில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் உருவானபோது, தேசிய ஆலோசனைக் குழுமத்தில் அவர் சேர்ந்தார். அதன் மூலம் யுபிஏ-வின் தேசிய குறைந்த பட்ச திட்டம் உருவாக்குவதில் உதவி புரிந்தார். ஆகஸ்ட் 2004 முதல் ஜனவரி 2006 வரை மூன்று நாடாளுமன்ற குழுக்களில் உறுப்பினராக இருந்தார்: பொதுக் கணக்கு குழு, நிதி நிலைக் குழு மற்றும் அரசாங்க காப்பீடுக் குழு. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மன்ற உறுப்பினராகவும் இருந்தார்.

 
ஜெய்ராம் ரமேஷ் பிரதம மந்திரி மன்மோகன் சிங்குடன், யு.எஸ். ஜனாதிபதி பராக் ஒபாமா நடத்திய பேசிக் குழு நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்றார். சைனீஸ் தலைவர் வென் ஜியாபோ, பிரேசிலின் ஜனாதிபதி லூல டா சில்வா மற்றும் தென் ஆப்ரிக்கா ஜனாதிபதி யாகோப் ஜுமா, டிசம்பர் 18, 2009 ஐக்கிய நாடுகள் தட்பவெட்ப நிலை மாற்ற மாநாட்டில் பங்கேற்றார்

பிப்ரவரி 2009 ஆம் ஆண்டில், 15வது லோக்சபாவிற்கான தேர்தல்கள் நெருங்கிய போது, தேர்தல் சிறப்புச் செயல் திட்ட குழுவிற்கு தலைமை தாங்க அழைக்கப்பெற்றார். அச்சமயம், மத்திய வர்த்தக மற்றும் மின்துறை இணை அமைச்சர் பதவியையும், மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை இணை அமைச்சர் பதவியையும் அவர் ராஜினாமா செய்தார்.

2009 ஆம் ஆண்டில் நடந்த மறு தேர்தலில் இந்திய நாடாளுமன்றத்துக்கு அவர் தேர்ந்தெடுத்ததும், மே 28, 2009 அன்று காங்கிரஸ் தலைமையிலான நிர்வாகத்தில், சுற்றுபுறச்சூழல் மற்றும் வனத்துறை மத்திய இணை அமைச்சராக தனிச் சார்பு பொறுப்புடன் ரமேஷ் பதவியேற்றார். டென்மார்க், கொபென்ஹேகனில் 2009 ஆம் ஆண்டில் டிசம்பர் 7 முதல் 18 வரை நடைபெற்ற 2009 ஐக்கிய நாடுகள் அவை தட்பவெட்ப நிலை மாற்ற மாநாட்டில் இந்தியா சார்பாக தலைமை பேச்சு வார்த்தை நடத்தினார்.[8]

கட்சித் தலைவி சோனியா காந்தியின் நிர்வாகப் பொறுப்பின் கீழ் அமைந்த அனைத்து இந்திய காங்கிரஸ் குழுவின் (ஏஐசிசி) 'நிறுவன நாள் குழுவின்' 19 உறுப்பினர்களில் ரமேஷும் ஒருவர். அக்குழு காங்கிரஸ் கட்சியின் 125 வருட ஆண்டு நிறைவு விழாவை 2010 ஆம் ஆண்டு முழுவதும் கொண்டாட திட்டமிட்டது.[9]

1980 ஆம் ஆண்டுகளில் அவரது அறிவுத்திறனையும், பொறுப்பையும் கண்டு வியந்த அபிட் ஹுசைன், 1990 ஆம் ஆண்டுகளில் பழனியப்பன் சிதம்பரமும் மற்றவர்களும் கண்டு வியந்தது, தற்போது 50 வயதுகளில் இருக்கும் ரமேஷின் திறமை மற்றும் செயல் திறன் இந்திய சுற்றுப்புறச்சூழலுக்கு மிகவும் உகந்ததாக இருக்கிறது.[6]

கொள்கைதொகு

2009 ஆம் ஆண்டில் மே 29 அன்று, ரமேஷ் சுற்றுபுறசூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக பொறுப்பேற்றபோது, பிரதம மந்திரி அவருக்கு இட்ட கட்டளைகள்:

“India has not caused the problem of global warming. But try and make sure that India is part of the solution. Be constructive; be proactive.”[10]

அது முதல், தமது துறை சம்பந்தப்பட்ட கொள்கை முடிவுகளில் பொதுக் கருத்தை ஆதரிப்பதிலோ அல்லது எதிர்ப்பதிலோ வெளிப்படையாக பேசி வருகிறார்.

அவர் தனது தற்போதைய பணியை துவக்கும்போது திருமதி சோனியா காந்தி, அவரிடம் 1980 வனத் துறை பாதுகாப்பு சட்டம்[11] மீற முடியாதது என்று மட்டும் கூறினார். அச்சட்டம் அவருக்கு கீதை போன்ற புனித நூலாக மாறியது. இச்சட்டம் ஏராளமான வனப்பகுதிகளைப் பாதுகாத்துள்ளது. இச் சட்டம் வருவதற்கு முன்னால் ஆண்டுதோறும் 1.40 லட்சம் ஹெக்டர் வனப்பகுதி வேறு பயன்பாட்டிற்கு மாற்றப்பட்டு வந்தது. இச் சட்டம் வந்த பின் அது ஆண்டிற்கு 31,000 ஹெக்டராக குறைந்தது. பல காரணங்களை சுட்டிக் காட்டி இச்சட்டத்தின் கடுமையை குறைக்க பல குழுக்கள் முயன்று வருகின்றன. குறிப்படத்தக்க வன நிலங்களை வேறு உபயோகத்திற்கு மாற்ற முயற்சிக்கும் எந்தவொரு முடிவிற்கும் தான் உடன்படப் போவதில்லை என்று ரமேஷ் திட்ட வட்டமாக கூறியுள்ளார்.[12]

ஆசிய சரணாலயம் என்ற நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் ஜெய்ராம் ரமேஷ் தனது முன்னுரிமைகளை பின்வருமாறு பட்டியலிடுகிறார்:

 1. இந்தியாவின் இயற்கை வனப் பரப்பை குறிப்பிடத்தக்க வகையில் அதிகரிப்பது.
 2. நற்பலனளிக்கதக்க,விரைவான மற்றும் நியாயமாக செயல்படும், சுற்றுபுறசூழல் குறைகளை நிவர்த்தி செய்யும் ஒரு நற்பலனுள்ள அமைப்பை ஏற்படுத்துவது.
 3. தட்ப வெட்ப நிலை மாற்றத்திற்கு பயனளிக்ககூடிய, விடாப்பிடியான, தன்னை தானே ஈடுபடுத்தக்கூடிய வகையில் ஒரு செயல் திட்டத்தை உருவாக்குவது.[13]

ஊடகங்கள் கவனத்தை அவர் கவரும் வண்ணம் தற்சமயம் நடந்த நிகழ்ச்சிகள்:

காடு வளர்ப்புதொகு

காடு வளர்ப்பில் தற்போதைய அரசாங்கத்தின் கொள்கையை பற்றி ரமேஷ் கூறுகையில், காடு வளர்ப்பு ஒரு பயிர் தோட்டங்களை விட பயனுள்ளது என்று நம்புகிறார். ஏனென்றால் முந்தையது பல சுற்றுப்புற அடுக்குகளைக் கொண்டது. முதன்மை சவால் தற்போதுள்ள வனப் பரப்பை பாதுகாத்து அதிகரிக்க முயல்வது. (நாட்டின் நிலப் பரப்பில் 24%) அவற்றில் ஏறக்குறைய 60 விழுக்காடு அடர்த்தி குறைந்த வனங்கள். அவற்றை காடு வளர்ப்பு திட்டம் மூலம் மிக அடர்ந்த காடுகளாக மாற்றுவது. இது கரியமிலத்தை தனியாக்குவதில் மிகவும் வியக்கத்தக்க விளைவை ஏற்படுத்தும். இந்திய இலக்கான 33% பசுமை திட்டத்தை, காடு வளர்ப்பின் மூலமே அடைய முடியும்.[12]

தனது அமைச்சகம் காடு வளர்ப்ப்பு திட்டத்தில் குறிப்பிடத்தக்க துவக்கம் செய்துள்ளதாக குறிப்பிட்டுளார். காடு வளர்ப்பு மேலாண்மை மற்றும் திட்ட ஈடு முகவாண்மையகம் பரணிடப்பட்டது 2010-12-14 at the வந்தவழி இயந்திரம் (காம்பா) மூலம் நிதி உதவி பெற முடிந்தது என்றார். இதன் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 5,000 கோடி ரூபாய் (வருடம் 1,000 கோடி ரூபாய் வீதம்) நாட்டின் தற்போதைய இயற்கை வனங்களை மறுபடி சீரமைப்பதற்கு மட்டும் பயனாகும். இந்த காம்பா நிதி ஆதாரங்களைத் தவிர, அந்த அமைச்சகம் தனது சொந்த திட்டமான காடு அழிப்பில் இருந்து வெளியேறும் மாசுப் பொருள்களைக் குறைப்பது மற்றும் காடு வளங்கள் குறைவதை தடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதற்கு ரெட் பிளஸ் என்ற திட்டத்தை தயாரித்துள்ளது. இத்திட்டங்கள் காடுகள் மூலம் கரியமிலத்தை பிரித்து தனியாக்குவதில் ஒரு குறிப்பிடத்தக்க, நன்கு விளக்கிய இலக்கை அடைய உதவும்.

ரமேஷின் வற்புறுத்தலினால் காம்பா தனது கொள்கைகளை மாற்றி, இயற்கை வனங்களை மீட்டு சீரமைக்கவும், உயிரி பல்வகைமை பாதுகாப்பதிற்கும் மேலான முக்கியத்துவம் கொடுத்தது. அவர் அமைச்சரவையில் சேர்ந்த பின் "தோட்டங்கள் வேண்டாம்" என்பதே அறைகூவலாக இருந்தது.[13]

அவர் மேலும் கூறினார்,

The principle function of the Forest Rights Act is to protect the rights of tribals vis-à-vis the forests which for them are their homes as well as their principle source of livelihood. In point of fact, the Ministry has issued an advisory to all states requiring full compliance with the provisions of the act failing which any request for diversion will stand rejected. Local communities could become the foot soldiers in the forest regeneration movement if the FRA is used creatively in conjunction with the Forest Conservation Act 1980.[13]

எரிபொருள் செயல்திறன்தொகு

நவம்பர் 2009 ஆம் ஆண்டில், ரமேஷ், வாகன உற்பத்தியாளர்கள் 2011 ஆம் ஆண்டு முதல் வாகனங்களை விற்கும்போது கடைபிடிக்க வேண்டிய கட்டாயமான ஆற்றல் எரிதிறன் படிவங்கள் பற்றி வலியுறுத்தினார். அப்படிவங்களில் உள்ள தகவல்களுக்கு ஆற்றல் செயல்திறன் செயலகத்தின் (பிஈஈ) சான்றிதழ் அளிக்க வேண்டும். எரிபொருள் செயல்திறன் நியமங்களுக்கு இறுதி வடிவம் கொடுக்கும் நிலையில் அரசாங்கம் உள்ளது. இத்தகைய நியமங்களை ஆற்றல் பாதுகாப்பு சட்டம் அல்லது மோட்டார் வாகன சட்டம் மூலமாகவோ வெளியிட திட்டமிட்டுள்ளது".[14]

 
1880-2009 புவி சராசரி புறப்பரப்பு வெப்பநிலை வித்தியாசம், 1961-1990 சராசரியுடன் தொடர்பானது

புவி வெப்பமடைதல்தொகு

கொபேன்ஹேகன் செல்வதற்கு முன்னால். உலகிலேயே தட்ப வெட்ப நிலை மாற்றத்தின் விளைவுகளில் இந்தியா "மிகவும் பலவீனமான" நிலையில் இருப்பதாக ரமேஷ் கூறினார் பின்னர் மாநிலங்கள் அவையில் தட்ப வெட்ப உச்சி மாநாட்டின் முடிவுகளைப் பற்றி கூறும்போது "அரசாங்கம் தனது கொபென்ஹேகன் உச்சி மாநாட்டிற்கு முன் எடுத்த, உள்ளூர் சாந்தப்படுத்தும் திட்டங்களைப் பற்றி யுஎன்எப்சிசிசி-க்கு அறிவித்தால் மட்டும் போதுமானது என்ற நிலைப்பாட்டில் இருந்து விலகி, சர்வதேச அளவில் கலந்துரையாடி ஆராய வழி ஏற்படச் செய்வதற்கு அனுமதித்தோம்" என்று ஜெய்ராம் ரமேஷ் ஒப்புக் கொண்டார்.[8] டிசம்பர் 23, 2009 அன்று திரு ரமேஷ் கூறினார்:

“We must soon unveil a detailed road map for a low-carbon strategy.”

இந்தியா தனது கரியமில வெளியேற்றத்தை 2020 ஆம் ஆண்டில் 2005 ஆம் ஆண்டின் அளவிலிருந்து 20-25 விழுக்காடு குறைத்துக் கொள்ள தனக்குத்தானே உறுதி கொண்டுள்ளது[15]

இந்தியா சார்ந்த நியூட்ரினோ ஆய்வகம்தொகு

2009 நவம்பர் 20 அன்று, நீலகிரி மலைத்தொடரில் உள்ள சிங்காரா என்னும் இடத்தில், அணு சக்தித் துறையின் இந்தியா சார்ந்த நியூட்ரினோ ஆய்வகம் திட்டத்திற்கு அனுமதி மறுத்து திரு ரமேஷ் கூறுகிறார்,

"it falls in the buffer zone of the Mudumalai Tiger Reserve (MTR) and is in close proximity to the critical core tiger habitats of Bandipur and Mudumalai Tiger reserves. It is also an elephant corridor, facilitating elephant movement between the Western Ghats and the Eastern Ghats. The area is already disturbed by human settlements and resorts and the construction phase of the project would involve further disruption by highway transport of building materials through the core area of the Bandipur and Mudmulai Tiger Reserves.[16]

அதற்கு மாற்றாக தமிழ் நாட்டின் தேனி மாவட்டத்தில் உள்ள சுருளி நீர்வீழ்ச்சி இடத்தை பரிந்துரை செய்தார். சிங்காராவில் உள்ளது போல் இந்த இடத்தில டிஏஈ துறைக்கு பிரச்சினைகள் இருக்காது என்றும், சுற்றுப்புறச்சூழல் மற்றும் வனத்துறை அனுமதி ஒரு பெரிய விஷயமாக இருக்காது என்றும் அமைச்சர் கூறினார். மேலும் "தனது அமைச்சகம் இந்த மாற்று இடத்திற்கு வேண்டிய அனுமதிகளை பெற்றுத் தர ஒத்துழைக்கும்" என்று டிஏஈ-க்கு உறுதி அளித்தார். ஐஎன்ஒ திட்டத்தின் பிரதிநிதியான டாடா இன்ஸ்டிட்யூட் ஆப் பன்டமெண்டல் ரிசர்ச் நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர் நாபா கே. மோண்டல், தனது கருத்துக்களை கூறும்போது, சுருளியார் பகுதி அடர்ந்த காடுகளை கொண்டது என்றும், ஏராளமான மரங்களை வெட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்றும், அத்தகைய நிலை சிங்காராவில் இல்லை என்றும் கூறினார். அரசாங்கத்தின் சார்பில் வனத்துறை அனுமதி இந்த இடத்திற்கு கிடைப்பது கேள்விக்குரியதாக இருக்கும் என்று அவர் சந்தேகப்பட்டார். மாற்றாக, ஐஎன்ஒ திட்டத்தை சுருளியார் நீர்வீழ்ச்சியிலிருந்து 20-30 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரம் பகுதிக்கு மாற்ற முடியுமா என்று அவர் வினவினார். அந்த வன பகுதி புதர்ச் செடிகளை கொண்டது. ஆனால் நீர் ஆதாரம் கிடையாது. 30 கி.மீ. தொலைவுள்ள சுருளியாறிலிருந்து தண்ணீரைக் கொண்டு வர வேண்டும்.[16][17]

தொழில்துறை சுகாதாரக் கேடுதொகு

டிசம்பர் 24, 2009 அன்று, நாட்டின் மிகவும் அதிகமாக சுகாதாரக் கேடடைந்த 43 தொழில் பகுதிகளில் புதிய நிறுவனங்கள் ஆரம்பிக்க தடை விதிக்குமாறு பரிந்துரை செய்தார். அவர் கூறினார்.

“We need to take some tough decisions and we should put on hold new approvals in these areas until the situation is brought under control. I will approach the Finance Minister so that a separate fund is announced in the next budget for reducing pollution."[18]

 
போபாலில் யூனியன் கார்பைடு மெதில் ஐசோசயநேட் (எம்ஐசி) டாங்குகள்

2009, செப்டம்பர் 12, போபால் விஷ வாயு சம்பவம் நடந்த இடத்திற்கு வருகை தந்த போது, திரு ரமேஷ், உண்மை (போபால் விஷ வாயு சம்பவம் பற்றிய) ஆறுதலில்லாதது. இத்தகைய சம்பவங்கள் கற்று கொடுத்த பாடங்களை வைத்து முன் செல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது என்று கருதுவதாகத் தெரிவித்தார்.

தற்போது கைவிட்ட தொழில்கூடத்தில் இருக்கும் 350 டன்கள் மதிப்புள்ள விஷக் கழிவுகள் பற்றி குறிப்பிடும்போது, சில விரும்பத்தகாத, தேவையற்ற உணர்ச்சிகளைத் தூண்டும் கருத்துக்களை வெளியிட்டார்.

"I have held that waste in my hand, I am still alive and not coughing”[6]


மிக அதிகமாக பேச விரும்பாத அவர், அரசு சாரா நிறுவனங்களின் (என்ஜிஒ) கவனத்தை ஈர்க்கும் வண்ணம் அந்த தொழில் கூடத்தை சுற்றியுள்ள பசுமை மற்ற இடங்களைக் காட்டிலும் நன்றாக உள்ளது என்ற பொருள்படும்படி கூறினார். இத்தகைய கழிவுகளுக்கு மத்தியில் எப்படி இப்படி (மிக்க பசுமை) உள்ளது என்று வினவினார்?[19] இந்த பேரிடர் சம்பவம் நடந்து 25 ஆண்டுகள் கடந்ததை நினைவுகூறும் வகையில் ஒரு நினைவகம் உருவாக்க மாநில அரசாங்கத்திற்கு ரூ. 116 கோடி (ரூ.1,160,000,000.) நிதி உதவி மத்திய அரசாங்கம் வழங்கும் என்றார். "இந்தப் பேரிடர் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் நினைவாகவும், இத்தகைய தவறுகளை நினைவு கூர்ந்து மேலும் இது போன்ற சம்பவங்கள் திரும்ப நடக்காத வண்ணம் பார்த்துக் கொள்ளவும், ஒரு தேசிய நினைவகம் உருவாக்கப்படும்"[20]

சுரங்கத் திட்டங்கள்தொகு

ஒரிசாவில் அலுமினிய மூல தாதுப் பொருள் சுரங்கத்தைப் பற்றி குறிப்பிடும் போது திரு ரமேஷ் ஒரிசா நிர்வாகத்தினரை கேட்டுக் கொண்டது:

"Explain how the violation of Bauxite mining guidelines was permitted when it was clear that “in-principle” approval granted for bauxite mining projects in Kalahandi and ராயகடா மாவட்டம்s on February 26, 2009 under the Forest Conservation) Act 1980 should be converted into final approval, only after fulfilment of stipulations, before any activity was undertaken."

வேதாந்தா ரிசொர்செஸ் பிஎல்சி நிறுவனம் இறுதி அனுமதி பெறாமல் சுரங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக இந்த வருடம் ஆகஸ்ட் வரை அமைச்சகத்திற்கு வந்த முறையீடுகளை பற்றி, புவனேஸ்வரில் உள்ள வனங்கள் பாதுகாப்பு அலுவலரை விசாரிக்கச் சொன்ன திரு.ரமேஷ் அம்முறையீடுகள் உண்மையாக இருக்கக் கண்டார். ஒரிசாவில் உள்ள இரு மாவட்டத்தில், வன பகுதியில் இருந்து மாற்ற முடிவு செய்த 660.749 ஹெக்டர் பரப்பில், 353.14 ஹெக்டர் பரப்பு நியம்கிரி வனப் பகுதிக்குள் உள்ளது. இத்திட்டம் கோந்தா பழங்குடியினர் வாழ்க்கைமுறையில் ஏற்படும் விளைவுகளைப் பற்றி கவலை அடைந்தார்.[21]

மகாராஷ்டிர நிலக்கரி சுரங்கத் திட்டமான, தி அதானி சுரங்கத் திட்டம், தடோபா அந்தாரி புலிகள் காப்பகத்தில் இருந்து 12 கி.மீ. தொலைவுக்குள் இருந்தது. மற்றொரு மகாராஷ்டிரா நிலக்கரி நிறுவனத் திட்டமும் அந்த காப்பகத்தின் 10 கி.மீ. தொலைவிற்குள் இருந்தது. அவை இரண்டும் சந்திராபூர் மாவட்டத்தில் உள்ள காப்பகத்தின் இடைப்படு எல்லைக்குள் இருந்தன. நிபந்தனை குறிப்புகள் (டிஒஆர்) அந்நிறுவனங்களுக்கு 2008 அன்றே வழங்கப்பட்டன.[22]

இத்தகைய ஆட்சேபகரமான திட்ட மதிப்பீடு மத்திய அரசாங்கத்துக்கு அனுப்பியதற்கு எதிராக பாண்டு தோத்ரே தலைமையில் பசுமை ஆர்வலர்கள் போராட்டத்தை துவக்கினர். ஜூலை 19, 2009 அன்று, லோஹார வனபகுதியில் துவங்க இருந்த சுரங்கத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கினார் தோத்ரே.

ஆகஸ்ட் 1 அன்று, சமூக நல விரும்பிகள் மற்றும் சுற்றுப்புற சூழல் பாதுகாவலர்களை கொண்ட குழு ஒன்று, டெல்லியில் ரமேஷை சந்தித்து, அந்த சுரங்கத் திட்டம் அடர்ந்த வனவிலங்கு சமூக வசிப்பிடத்திற்கு ஏற்படுத்தப் போகும் தீமைகளை பற்றி விளக்கினர். தோத்ரே கூறினார்,

"It was during this meeting that the minister called me up. He assured that the issue concerned his ministry as well, but as it had received no proposal for clearing the coal project, he could not assure anything in writing. However, once the proposal comes, he would take a decision keeping in view the relevant laws and regulation so that the environment as well as Tadoba Andhari tiger reserve sustains no harm.

அந்த உரையாடலுக்குப் பின் அத்தகைய கருத்துக்களைக் கொண்ட ஒரு அதிகாரபூர்வ கடிதத்தை ரமேஷ் உடனடியாக தொலைநகலி செய்தார். அந்தக் கோரிக்கையை கனிவாக மறுத்த தோத்ரே, மத்திய நிலக்கரி அமைச்சகம் லோஹாரா நிலக்கரி பகுதி ஒதுக்கீட்டை ரத்து செய்யும் வரையோ அல்லது மாநில அரசாங்கம் லோஹாரா வனபகுதிகளில் சுரங்கத் தொழிலில் ஈடுபடாது என்று எழுதி கொடுக்கும் வரை தான் இறங்கி வர மாட்டேன் என்று கூறினார்.[23]

லோஹாரா சுரங்கத் திட்டம் தன் பார்வைக்கு வரும்போது, தடோபா அந்தாரி புலிகள் காப்பகத்தை பாதுகாப்பதாக ஜெய்ராம் ரமேஷ் கடிதம் மூலம் உறுதி அளித்தவுடன், ஆகஸ்ட் 2, திரு தோத்ரே தனது 14 நாள் உண்ணாவிரத போராட்டத்தை முடித்தார்.

ஒரு அரசு ஆஸ்பத்திரியில், மோசமான உடல் நிலை காரணமாக, தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த திரு. தோத்ரே, சந்திராபூர் மற்றும் நாக்பூரைச் சேர்ந்த சுற்றுப்புறசூழல் ஆர்வலர்கள் முன்னிலையில், தனது தந்தை கொடுத்த கனிச்சாற்றை பருகினார். தனது உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக் கொண்டபின், திரு. தோத்ரே கூறினார்,[14]

"I have given up my hunger strike to honour the request of my fellow protesters and that of minister Jairam Ramesh."

இந்த போராட்டத்தினால், தனது அமைச்சகம் எந்தவொரு திட்டத்தையும் முழுமையாக படித்து பார்க்காமல், எந்த திட்டத்திற்கும் அனுமதி வழங்காது என்று ஜெய்ராம் ரமேஷ் உள்ளூர் மக்களுக்கு உறுதி கூறினார். மேலும், மாநில வனத்துறை, இத்தகைய திட்டத்தினால் வனங்கள் மற்றும் வனவிலங்குகளுக்கு ஏற்படும் சீர்கேட்டைப் பற்றி ஒரு விரிவான அறிக்கையை சமர்ப்பித்தது.[22]

நவம்பர் 24,2009 அன்று, சுற்றுபுறசூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் அமைத்த உயர் மட்ட மதிப்பீட்டுக் குழு, தடோபா அந்தாரி புலிகள் காப்பகத்திற்கு அருகில் நிறுவ இருந்த நிலக்கரி சுரங்கத் திட்டத்தை நிராகரித்தது. அக்குழு நிறுவனங்களுக்கு வழங்கி இருந்த நிபந்தனை குறிப்புகளை திரும்பப் பெற்றது. இதன் மூலம் அத்திட்டத்திற்கு சுற்றுபுறசூழல் அனுமதி பெறும் முயற்சி இறுதியாக கைவிட்டது.[22]

தேசிய நெடுஞ்சாலைகள்தொகு

செப்டம்பர் 12,2009 மத்திய பிரதேஷ் சென்றிருந்தபோது, அம்மாநிலத்தில் நடைபெற்றுகொண்டிருந்த தேசிய நெடுஞ்சாலை திட்டங்களின் வளர்ச்சியை பற்றி அமைச்சர் எச்சரிக்கை செய்தார்.

"I don’t think these projects should be rushed. There are a lot of serious environmental issues involved which need to be dealt with caution and sensitivity.”

தேசிய நெடுஞ்சாலை-7 விரைவாக முடிக்க மாநில அரசாங்கம் அனுமதி கோருவதை பற்றி அவர் கவலை தெரிவித்தார். தேசிய நெடுஞ்சாலையில் சீயோநிக்குப் பதில் சிந்த்வாரவுக்கு மாற்றுபாதையாக அமைப்பதை அது கருதவும் மறுக்கிறது. அத்தகைய நெடுஞ்சாலை அமைப்பதால், பென்ச் புலிகள் காப்பகத்திற்கு ஏற்பட போகும் சுற்றுபுறசூழல் சீர்கேட்டை கருத்தில்கொண்டு உச்ச நீதி மன்றம், அதற்கு தடை விதித்துள்ளது.[20]

வனங்கள் பாதுகாப்பு சட்டம் 1980,-ஐ தான் கடுமையாக பின்பற்றுவது பற்றி அவர் கூறினார்,

"The widening of NH-7, which will cut across the tiger corridor between Pench and Kanha National Park, is definitely not going to pass me.[12]

பாதுகாக்கப்பட்ட பகுதிதொகு

வனங்கள் பாதுகாப்பு சட்டம் 1980,-ஐ தான் கடுமையாக பின்பற்றுவது பற்றி திரு. ரமேஷ் கூறும்போது, இந்திய பாதுகாக்கப்பட்ட பகுதிகள் பற்றி கூறுகிறார்,

"I look upon any proposal for diversion of forest area of over 50 acres with a great deal of scrutiny. I have been turning down proposals for water supply projects and highways cutting through forests."[12]

 
கர்நாடகா, மேற்கு தொடர்ச்சி மலையில், குத்ரேமுக் தேசிய பூங்காவில், ஷோலா வகை புல்தரைகள்.

மேற்கு தொடர்ச்சி மலைகளை பற்றி ரமேஷ் கூறுகிறார்,

"The Western Ghats has to be made an "ecologically sensitive zone". It is as important as the ecological system of the Himalayas for protection of the environment and climate of the country. The Central government will not give sanction for mining and hydroelectric projects proposed by the State Governments of Maharashtra, Karnataka and Goa that will destroy the Western Ghats eco-system.’’[24]

ஜூன் 20, 2009 எழுதிய கடிதத்தில், கர்நாடகா மின் கழகம் ஹாசன் மாவட்டத்தில் உருவாக்க நினைக்கும் 200 மெகா வாட் குண்டியா நீர் மின் திட்டத்தினால் ஏறக்குறைய 1900 ஏக்கர் அடர்ந்த வனப்பகுதி தண்ணீரில் மூழ்கிவிடும் என்று திரு. ரமேஷ் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், ஏற்கனவே பலவீனமாகவுள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் விலங்கு எண்ணிக்கையை மேலும் பாதிக்கும் என்று கூறினார். இத்தகைய நிலையை கர்நாடகாவும், இந்தியாவும் ஏற்று கொள்ள முடியாது. "சுற்றுபுறசூழல் பாதுகாப்பிற்கு எதிராக மின் உற்பத்தி இருக்கக் கூடாது" மத்திய அரசாங்கம் அமைத்த நிபுணர் மதிப்பீடு குழு இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டாம் என்று பரிந்துரை செய்தது.[25]

நதி இணைப்புதொகு

 
பெத்வா நதி

மத்திய பிரதேசத்தில் கேன்-பெத்வா நதிகளை இணைக்கும் திட்டத்தினால் ஏற்பட போகும் சுற்றுபுறசூழல் விளைவுகளை பற்றி ஆராயுமாறு மத்திய அரசாங்கத்தை திரு. ரமேஷ் கேட்டுக்கொண்டார். அத்திட்டத்தை பற்றிக் கூறினார்,

"may be revised to exclude the tiger reserve area falling within its purview.

இந்த நதி இணைப்பு திட்டத்தினால், மத்திய பிரதேஷ் பண்ணா புலிகள் காப்பகம் உள்ள எச்சரிக்கை செய்யப்பட்ட உள்ளகம் மற்றும் ஆபத்தான புலிகள் வசிக்குமிடம் அமைந்த ஏராளமான வனப்பகுதி வருகிறது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், 1.5 கி.மீ பரப்புள்ள ஒரு அணை கட்டப்படும். மேலும் அதற்கு தேவையான சாலைகளும், மின் நிலையங்களும் உருவாக்கப் படவேண்டும். "வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் 1972"இன் படி புலிகள் மற்றும் இதர வன விலங்குகளுக்கு வேண்டிய ஆக்கிரமிப்பு செய்ய முடியாத இடம் தரப் பட வேண்டும். அப்படி முடியாவிட்டால் புலிகள் இருப்பிடத்திற்கு தேவையான உள்ளகம் மற்றும் வசிக்கும் பகுதிக்கு குறிப்பிடத்தக்க தொந்தரவுகள் ஏற்படும்.[26]

புலிகள் பாதுகாப்புதொகு

ஜூன் 27,2009இல் டேஹெல்காவுடன் ஒரு பேட்டியில் திரு. ரமேஷ் கூறினார்,

"We are totally committed to saving the Tiger and India’s bio-diversity. I would stop using the label ‘Project Tiger’ and call it ‘Project Eco- System’. We need to communicate effectively that saving the tiger is not some middleclass obsession. It is an ecological imperative — by saving the tiger, you are saving the forests. The tiger is merely the symbol. By saving it, we ensure our water security. Similarily, by saving the Snow Leopard, we save our mountains; when we protect the River Dolphin, we save our river systems.[12]"

 
ஜிம் கொர்பெட் தேசிய பூங்காவின் உட்புற தோற்றம்

இந்தியாவில் உள்ள 38 புலிகள் காப்பகத்தில் பதினேழு மிகவும் மோசமான நிலைமையில் இருப்பதாக திரு ரமேஷ் டிசம்பர் 8, 2009 அன்று கூறினார். அவற்றை மேம்படுத்த திட்டம் அமைக்க ஒரு செயல் குழு அமைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். சட்ட விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வகை செய்யும் ஒரு வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் மேலாண்மை திருத்த மசோதா அடுத்த பட்ஜெட் தொடரில் அறிமுகப்படுத்தப்படும். அம்மசோதாவில் பணம் கடத்துவோர் மற்றும் அந்நிய செலாவணி சட்ட மீறல்களுக்கு தரப்படும் தண்டனைகள் போன்ற கடுமையான விதிமுறைகள் இருக்கும்.[27]

குறுகி வரும் புலிகள் தொகைக்கு அமைச்சர் கவலை தெரிவித்தார்.

“Community participation on the lines of the Social Tiger Protection Force developed in the Jim Corbett National Park needs to be followed. Certain communities have a tendency towards poaching, as seen in Sariska Tiger Reserve and Panna National Park. Community participation will prevent that,”[20]

தேசிய புலிகள் பாதுகாப்பு அமைப்பு பற்றி திரு. ரமேஷ் கூறுகையில், என்டிசிஏ-வுக்கு தற்சமயம் அமைச்சகம் அளித்து வரும் ஆதரவு நிலை, அதன் காலத்தில் பெற்ற நிலையை விட பெரிதாக இல்லையென்றாலும், அதற்கு சமமானதாக உள்ளதாக குறிப்பிட்டார். அதன் இயக்குனர் டாக்டர். ராஜேஷ் கோபால், ரமேஷுடன் தினமும் தொடர்பு கொண்டு என்டிசிஏ-வை வலிமைப்படுத்த முயல்கிறார். அரசியல் ஆதரவைத் தவிர, தகுதி வாய்ந்த மற்றும் குறிக்கோளுடைய ஆட்பலம் அவருக்கு தேவைப்படுகிறது. சாதாரண முறையில் இல்லாமல், வித்தியாசமாக (வேலை செய்யும் விதமாக!) சிந்தித்து புலிகள் பாதுகாப்பில் தீர்வு காணும் நபர்களை என்டிசிஏ-வில் பணியில் அமர்த்த தற்போது அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.[13]

மரபணு மாற்றப்பட்ட (பிடி)கத்திரிக்காய்தொகு

இந்தியாவின் முதல் மரபணு மாற்றப்பட்ட காய்கறியான [28] பிடி கத்திரிக்காயை வியாபார நோக்கில் உற்பத்தி செய்வது தொடர்பாக ஏழு நகரங்களில் பொது விவாதங்களை 2010இல், மத்திய சுற்றுபுறசூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் திரு. ஜெய்ராம் ரமேஷ் நடத்தினார். இந்தப் பொது விவாதத்தில் 8000திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர். ஒரு மாத நிகழ்வின் முடிவில், வேறு தனிசார்பு ஆராய்ச்சிகள் இது சரியானது என்று நிரூபிக்கும் வரை,[29] பிடி கத்திரிக்காய் மனித மற்றும் சுற்றுப்புறசூழலுக்கு எதிரானது என்று திரு. ரமேஷ் அறிவித்தார்.

“My decision is both responsible to science and responsive to society... I don’t believe India should be dependent on the private sector seed industry...I believe seeds are as strategic to India as space and nuclear issues."

பத்திரிகை துறைதொகு

திரு. ரமேஷ் "கெளடில்யா" என்ற புனை பெயரில் பிசினஸ் ஸ்டான்டார்ட், பிசினஸ் டுடே, தி டெலிகிராப், டைம்ஸ் ஆப் இந்தியா மற்றும் இந்தியா டுடே போன்ற பத்திரிகைகளில் எழுதி வந்தார்.

அவர் எழுதிய நூல்கள்:

 • மேகிங் சென்ஸ் ஆப் சிண்டியா: ரெப்லக்சன்ஸ் ஆன் சைனா அண்ட் இந்தியா {2005}, போர்வார்ட் பை ஸ்டோர்பே டால்போட்.[30]

இரு நாடுகளும் இச்சமய சந்தர்ப்பத்தில் ஒன்று சேர்ந்து வியாபாரம், கலாசாரம் மற்றும் மக்கள் தொடர்பு போன்றவற்றை வலுப்படுத்த வேண்டும் என்று ஜெய்ராம் ரமேஷ், இந்நூலில் கூறுகிறார். சைனாவுடன் சேர்ந்து இந்தியா உலக அரங்கில் முக்கிய பங்காற்ற இதுவே சிறந்த தருணம் என்று அவர் கூறுகிறார்.[31]

2009 புவி வெப்பமடைதல் பேச்சு வார்த்தைகளுக்கு பிறகு வெளியான தீர்மானங்களிலும் திரு. ரமேஷின் செயல்களிலும் இது வெளிப்படுகிறது. இம்மாநாட்டில் பேசிக் நாடுகள் குழு (பிரேசில், தென் ஆப்ரிக்கா, இந்தியா மற்றும் சைனா) தங்கள் கருத்தை வலியுறுத்த எவ்வாறு ஒன்று சேர்ந்தன என்பதை ரமேஷ் சுட்டிக்காட்டுகிறார். மாநாடு முழுவதும், பேசிக் அமைச்சர்கள் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை சந்தித்து பேசினர். இந்தியாவும் சைனாவும் மிக மிக நெருக்கமாக பணியாற்றின. பேசிக் குழு தட்ப வெட்ப பேச்சு வார்த்தைகளில் மிக சக்தி வாய்ந்ததாக விளங்கியதாக அவர் நம்பினார். அந்த ஒற்றுமையின் மூலம் பாலி செயல் திட்டம் மற்றும் க்யோடோ தீர்மானம்படி தீர்வு ஏற்பட முடிந்தது. இந்தியா, 77 நாடுகள் குழு "ஜி77"-வுடன் தொடர்ந்து பணியாற்றி, சைனாவுடன் சேர்ந்து தட்பவெட்ப பேச்சு வார்த்தைகளில் ஒரு குழுவாக செயல்படும். பேசிக் நாடுகள் தலைவர்களுடன் யுஎஸ் ஜனாதிபதி பராக் ஒபாமா நடத்திய கூட்டத்தில், அனைத்து தரப்பினருக்கும் திருப்தி ஏற்படும் வகையில் கொபேன்ஹேகன் தீர்மானம் உருவானதாக அவர் சுட்டிக்காட்டுகிறார். அந்த மாநாட்டில், இந்தியாவின் தேசிய நலன் பாதுகாக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டது.[32]

சுபிமல் பாட்டசார்ஜி சுட்டிக் காட்டுகிறார்,

"The best that comes out of Copenhagen for India is the close cooperation with China."[33]

 • கெளடில்யா டுடே - ஜெய்ராம் ரமேஷ் ஆன் எ க்லோபளைசிங் இந்தியா [34]{2002)

அபினவ் அகர்வால் இந்த நூலானது என்று சுட்டிக் காட்டுகிறார்,

..."is surprisingly well informed, well-researched, and offers a wealth of information to someone wanting to understand the Indian economy beyond the sound bites that the commercial rags (most Indian newspapers) carry. You get to read about such varied topics as Bose-Einstein condensates, John Nash, and more mundane topics as disinvestment, rupee fluctuations, etc... Mr Ramesh is relatively unbiased and appreciates Yashwant Sinha's efforts to open up the Indian economy."[35]

 • மொபிலைசிங் டெக்னாலஜி பார் வேர்ல்ட் டெவலப்மென்ட் {கோ-எடிட்டர், 1979}[36]

வணிகம் மற்றும் பொருளாதாரம் பற்றி விவாதிக்கும் பிசினஸ் ப்ரேக்பாஸ்ட் மற்றும் கிராஸ்பயர் போன்ற பிரபல தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு தலைமை தாங்கியுள்ளார்.

பார்வைக் குறிப்புகள்தொகு

 1. Hindu Pundamentalist
 2. 2.0 2.1 2.2 2.3 Ramesh, Jairam (2001). "Profile". Website of Jairam Ramesh. 28 December 2009 அன்று பார்க்கப்பட்டது.
 3. ஜெய்ராம் ரமேஷ் அமைச்சர் பதவி விலகினார், முழு நேரம் தேர்தல் பணியில் ஈடுபட முடிவு
 4. 4.0 4.1 4.2 Churumuri (7-19-2009). "18 things you might like to know about Jairam". Wordpress.com. 29 December 2009 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
 5. "WebPage of Shri Jairam Ramesh". Members of Rajya Sabha. New Delhi: Rajya Sabha Secretariat. 2009. 27 மார்ச் 2019 அன்று மூலம் பரணிடப்பட்டது. 28 December 2009 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 6. 6.0 6.1 6.2 Elliot, John (12-9-2009). "Jairam Ramesh sets the pace on India's climate change and environment policies". Riding the Elephant. New Delhi: WordPress.com. 30 December 2009 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
 7. http://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D&action=edit&section=3
 8. 8.0 8.1 "Copenhagen Accord does not affect sovereignty: Govt". Indian Express.com (New Delhi: The Indian Express Limited.). 12-22-2009. http://www.indianexpress.com/news/copenhagen-accord-does-not-affect-sovereignty-govt/557776/. பார்த்த நாள்: 28 December 2009. 
 9. PTI (12-27-2009). "PM, Sonia to lay foundation for Cong HQ tomorrow". The Hindu (Kasturi & Sons Ltd). http://beta.thehindu.com/news/national/article71297.ece. பார்த்த நாள்: 29 December 2009. 
 10. Ramesh, Jairam (12-3-2009). transcript of the Minister’s Response in the Lok Sabha. New Delhi. பக். 6436. http://moef.nic.in/downloads/public-information/LokSabha_trnscript.pdf. பார்த்த நாள்: 2010-03-24. 
 11. "1980 வனத் துறை பாதுகாப்பு சட்டம்" (PDF). 2011-07-21 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2010-03-24 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 12. 12.0 12.1 12.2 12.3 12.4 Bindra, Prerna Singh (6-27-2009). "Jairam Ramesh Interview - The Forest Conservation Act Is Sacrosanct". Tehelka Magazine (Anant Media Pvt. Ltd) 6 (25). http://www.tehelka.com/story_main42.asp?filename=hub270609the_forest.asp. பார்த்த நாள்: 2010-03-24. 
 13. 13.0 13.1 13.2 13.3 Sahgal, Bittu (October 2009). "Meet Jairam Ramesh – India's Minister for Environment and Forests". New Delhi: Sanctuary Asia. 30 December 2009 அன்று பார்க்கப்பட்டது.
 14. 14.0 14.1 PTI. "Auto industry unhappy over plan to rate mileage". The Hindu (Chennai: Kasturi & Sons Ltd). http://beta.thehindu.com/business/article71911.ece. பார்த்த நாள்: 29 December 2009.  பிழை காட்டு: Invalid <ref> tag; name "pti" defined multiple times with different content
 15. Dharr, Aarti (12-23-2009). "India to draw road map for low-carbon growth". The Hindu (Chennai: Kasturi & Sons Ltd). http://beta.thehindu.com/news/national/article69056.ece. பார்த்த நாள்: 29 December 2009. 
 16. 16.0 16.1 Ramachandran, R. (11-21-2009). "Ministry’s ‘no’ to Neutrino Observatory project in Nilgiris". The Hindu (Chennai: Kasturi and Sons Ltd): pp. Front Page. Archived from the original on 24 நவம்பர் 2009. https://web.archive.org/web/20091124103828/http://www.hindu.com/2009/11/21/stories/2009112154952000.htm. பார்த்த நாள்: 9 December 2009. 
 17. Madhusudan, M. (11-22-2009). "Centre no to neutrino observatory in Nilgiris". Sunday Pioneer (New Delhi: Pioneer Syndication Services). http://www.dailypioneer.com/217536/Centre-no-to-neutrino-observatory-in-Nilgiris.html. பார்த்த நாள்: 9 December 2009. 
 18. Dharr, Aarti (12-24-2009). "Ramesh for moratorium on new units at highly polluted areas". The Hindu (Chennai: Kasturi & Sons Ltd). http://beta.thehindu.com/news/national/article70000.ece. பார்த்த நாள்: 29 December 2009. 
 19. Ghatwai, Milind (9-13-2009). "Truth about Bhopal gas leak tragedy uncomfortable, says Jairam". Indian Express.com (Bhopal: Indian Express Ltd.). http://www.indianexpress.com/news/truth-about-bhopal-gas-leak-tragedy-uncomfortable-says-jairam/516435/. பார்த்த நாள்: 29 December 2009. 
 20. 20.0 20.1 20.2 Singh, Mahim Pratap (9-13-2009). "Jairam Ramesh favours community participation in forest management". The Hindu, National (New Delhi: Kasturi & Sons Ltd). http://www.hindu.com/2009/09/13/stories/2009091360201000.htm. பார்த்த நாள்: 30 December 2009. [தொடர்பிழந்த இணைப்பு]
 21. Dhall, Aarti (11-28-2009). "Centre orders enquiry into violation of mining norms". The Hindu, NEWS » STATES (New Delhi: Kasturi & Sons Ltd). http://beta.thehindu.com/news/states/article56068.ece. பார்த்த நாள்: 29 December 2009. 
 22. 22.0 22.1 22.2 "Panel ‘no’ to Adani mine near Tadoba". The Times of India (Nagpur: Bennett, Coleman & Co. Ltd.). 12-4-2009. http://timesofindia.indiatimes.com/india/Panel-no-to-Adani-mine-near-Tadoba/articleshow/5298255.cms. பார்த்த நாள்: 9 January 2010. 
 23. "Dhotre stir rocks power corridors". The Times of India (Chandrapur: Bennett, Coleman & Co. Ltd.). 8-2-2009. http://timesofindia.indiatimes.com/articleshow/msid-4846817,prtpage-1.cms. பார்த்த நாள்: 9 January 2010. 
 24. staff (11-21-2009). "No clearance for mining, hydel projects that destroy Western Ghat: Ramesh". The Hindu, NEWS » STATES » KERALA (Palakkad: Kasturi & Sons Ltd). Archived from the original on 27 December 2009. https://web.archive.org/web/20091227220732/http://beta.thehindu.com/news/states/kerala/article52465.ece. பார்த்த நாள்: 29 December 2009. 
 25. staff. "Gundia project has not got Centre’s nod". The hindu (Chennai: Kasturi & Sons Ltd). Archived from the original on 8 ஆகஸ்ட் 2009. https://web.archive.org/web/20090808123705/http://www.hindu.com/2009/08/04/stories/2009080456210300.htm. பார்த்த நாள்: 29 December 2009. 
 26. IANS. "Tiger reserves in poor condition: Jairam Ramesh". The Hindu, S & T - ENERGY & ENVIRONMENT (New Delhi: Kasturi & Sons Ltd). http://beta.thehindu.com/sci-tech/energy-and-environment/article62335.ece. பார்த்த நாள்: 29 December 2009. 
 27. "Test Tube Brinjal". 2010-04-18 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-03-24 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 28. "Moratorium on Bt. Brinjal".
 29. ஜெய்ராம் ரமேஷ். மேகிங் சென்ஸ் ஆப் சின்டியா: ரெப்லக்ஷான்ஸ் ஆன் சைனா அண்ட் இந்தியா நியூ டெல்லி, இந்தியா ரிசர்ச் பிரஸ், 2005. ISBN 81-87943-95-5
 30. Ghooi, Peter (2005). "Making Sense of Chindia, Jairam Ramesh: A book review". Bangalore: Chillibreeze Solutions Pvt. Ltd. 31 December 2009 அன்று மூலம் பரணிடப்பட்டது. 1 January 2010 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 31. Ramesh, Jairam (12-22-2009). "India has come out quite well in Copenhagen: Jairam Ramesh". New Delhi: Bennett Coleman & Co. Ltd.. http://economictimes.indiatimes.com/News/Politics/Nation/India-has-come-out-quite-well-in-Copenhagen-Jairam-Ramesh/articleshow/5365934.cms?curpg=2. பார்த்த நாள்: 1 January 2010. [தொடர்பிழந்த இணைப்பு]
 32. Bhattacharjee, Subimal (12-25-2009). "Copenhagen was good for Chindia". Yahoo India Pvt. Ltd. 1 January 2010 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
 33. Ramesh, Jairam (2002). Kautilya today Jairam Ramesh on a globalizing India.. New Delhi: India Research Press. பக். 490. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8187943378. http://openlibrary.org/b/OL3591448M/Kautilya_today. 
 34. Agarwal, Abhinav (4-27-2003). "A Pleasant surprise of a book, coming from a politician!". Bangalore: Amazon.com, Inc. 1 January 2010 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
 35. சி. வைஸ் அண்ட் ஆர். ஜெய்ராம்,Mobilising technology for world development பரணிடப்பட்டது 2011-07-06 at Archive-It , ப்ரேகேர், நியூ யார்க் {1979)

வெளிப்புற இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெய்ராம்_ரமேஷ்&oldid=3513788" இருந்து மீள்விக்கப்பட்டது