ஜெய்ஹிந்த் 2

அர்ஜுன் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

ஜெய்ஹிந்த் 2 என்ற பெயரில் 2014 ஆம் ஆண்டு தமிழ் மற்றும் தெலுங்கிலும், அபிமன்யு என்ற பெயரில் கன்னடத்திலும் வெளியான பன்மொழித் திரைப்படம். இப்படத்தை அர்ஜுன் இயக்கி , நடித்துத் தயாரித்தார்.[1] இப்படம் 1994 ஆம் ஆண்டு அர்ஜுன் நடிப்பில் வெளியான ஜெய்ஹிந்த் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ஆகும்.[2][3] இப்படம் "கர்நாடக மாநில விருது - சிறந்த திரைப்படத்திற்கான இரண்டாம் பரிசு" பெற்றது.[4]

ஜெய்ஹிந்த் 2 (தமிழ் மற்றும் தெலுங்கு)
அபிமன்யு (கன்னடம்)
சுரொட்டி
இயக்கம்அர்ஜுன்
தயாரிப்புஅர்ஜுன்
ஐஸ்வரியா அர்ஜூன் (இணைத் தயாரிப்பு)
கதைஜி. கே. கோபிநாத் (வசனம்)
இசைஅர்ஜுன் ஜன்யா
நடிப்புஅர்ஜுன்
சுர்வின் சாவ்லா
ராகுல்தேவ்
சிம்ரன் கபூர்
பிரம்மானந்தம்
யோகி பாபு
மனோபாலா
மயில்சாமி
ஒளிப்பதிவுஎச். சி. வேணுகோபால்
படத்தொகுப்புகே கே
கலையகம்ஸ்ரீ ராம் பிலிம் இண்டர்நேசனல்
வெளியீடு7 நவம்பர் 2014 (2014-11-07)
ஓட்டம்155 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
கன்னடம்
தெலுங்கு

கதைச்சுருக்கம்

தொகு

ஐந்து நபர்களின் கதையைக் கூறுகிறது. குழந்தைகளின் கல்விக்காகப் பாடுபடக்கூடிய ஒருவனின் போராட்டமே படத்தின் கதை. ஏழைப்பெண்ணான பார்வதி (யுவினா பர்தாவி) நகரத்தின் சிறந்த பள்ளியில் சேர்க்கை கிடைக்கப் பெறுகிறாள். அவளுடைய கல்விச்செலவுக்காக அவள் தந்தை தன் சிறுநீரகத்தை விற்கிறார். ஆனாலும் அவள் பள்ளிக்கட்டணத்திற்குத் தேவையான பணத்தை செலுத்த இயலாததால் தற்கொலை செய்துகொள்கின்றனர். இந்த நிகழ்வு அபிமன்யுவின் (அர்ஜுன்) மனதை வெகுவாகப் பாதிக்கிறது. கல்வி கட்டணங்கள் உயர்வின் காரணமாக ஏழைகள் பாதிக்கப்படுவதைத் தடுப்பதற்கான வழிமுறையை சிந்திக்கிறார். தனியார் பள்ளிகளை முறைப்படுத்துவதற்கான விதிகளை அரசிற்குப் பரிந்துரைக்கிறார்.

அந்த விதிகளாவது: அனைத்துத் தனியார் பள்ளிகளையும் அரசுடைமையாக்க வேண்டும். மிகக் குறைவான கல்விக்கட்டணத்தையே நிர்ணயம் செய்ய வேண்டும். கல்வியை சேவையாகக் கருதவேண்டும் தவிர அதை தொழிலாகக் கருதக்கூடாது. தரமான கல்வியை நாட்டிலுள்ள அனைத்து மாணவர்களுக்கும் உறுதிசெய்ய வேண்டும்.

அபிமன்யுவின் செயல்திட்டங்கள் தனியார் பள்ளிகளுக்கு பாதகமானதாக இருப்பதால் தனியார் பள்ளி உரிமையாளர்கள் அபிமன்யுவிற்கு எதிரான சதியைத் தொடங்குகின்றனர். அவர்களின் சாதியை முறியடித்து அபிமன்யு எப்படி வெற்றிபெறுகிறார் என்பதே மீதிக்கதை.

நடிகர்கள்

தொகு
  • அர்ஜுன் - அபிமன்யு
  • சுர்வீன் சாவ்லா - நந்தினி
  • அதுல் மதுர் - விக்ரம் தாகூர்
  • ராகுல் தேவ்
  • சார்லோட்டே கிளாரே - சிம்ரன்
  • யுவினா பர்தாவி - பார்வதி
  • பிரம்மானந்தம் - ஏழுமலை
  • மயில்சாமி - குல்பி கோபாலன்
  • மனோபாலா - நந்தினியின் தந்தை
  • வினயா பிரசாத் - நந்தினியின் தாய்
  • ஷாபி - சந்துரு
  • வைஜனத் பிரடர்
  • யோகி பாபு
  • கவுதம் சுந்தர்ராஜன்
  • போஸ் வெங்கட்
  • ரவி காலே
  • அபிஜித்
  • கானா பாலா
  • டி. சசிகுமார்
  • அமித் குமார் திவாரி
  • சிவ நாராயண மூர்த்தி
  • சக்திவேல்
  • அம்ஜத்
  • சம்பத் ராம்
  • சிசர் மனோகர்

அனைத்துப் பாடல்களையும் இசையமைத்தவர் அர்ஜுன் ஜன்யா. 

கன்னட மொழி
# பாடல்பாடகர்கள் நீளம்
1. "ரிவ நின்ன நகுவா"  கார்த்திக், சைந்தவி 4:00
2. "இவன் யாரிவனோ"  கார்த்திக், பிரியா 4:01
3. "காத்தால மன்யோலகே"  எல். என். சாஸ்திரி, ராஜேஷ் கிருஷ்ணன் 5:13
4. "நகுவே மனசார"  ரவி வர்மா 1:20
மொத்த நீளம்:
14:34
வ.எண் பாடல் பாடலாசிரியர் பாடகர்கள் காலநீளம்
1 அய்யா படிச்சவரே வைரமுத்து கானா பாலா, ராஜேஷ் கிருஷ்ணன் 5:14
2 மழையே இலக்கியன் ரவிவர்மா 1:20
3 இவன் யாரிவன் பா. விஜய் கார்த்திக், பிரியா 4:02
4 அடடா நெஞ்சில் பா. விஜய் கார்த்திக், சைந்தவி 4:00

வெளியீடு

தொகு

தமிழ்ப் பதிப்பின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமம் ஜீ தமிழ் தொலைக்காட்சியும், தெலுங்கு உரிமம் ஜெமினி தொலைக்காட்சியும், கன்னட உரிமம் கலர்ஸ் கன்னடா தொலைக்காட்சியும் பெற்றன.

மேற்கோள்கள்

தொகு
  1. "ஜெயஹிந்த் 2". Archived from the original on 2013-06-27. பார்க்கப்பட்ட நாள் 2019-03-17.
  2. "ஜெயஹிந்த் 2". Archived from the original on 2013-07-15. பார்க்கப்பட்ட நாள் 2019-03-17.
  3. "ஜெயஹிந்த் 2". Archived from the original on 2013-06-13. பார்க்கப்பட்ட நாள் 2019-03-17.
  4. "ஜெயஹிந்த் 2".

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெய்ஹிந்த்_2&oldid=4117241" இலிருந்து மீள்விக்கப்பட்டது