ஜேடர்பாளையம்

சேடர்பாளையம் (Jedarpalayam) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் மற்றும் ஊராட்சி ஆகும்.

காவிரியாற்றில் பரிசல்
முனீசுவரர்

நிலவியல் தொகு

சேடர்பாளையம், மாவட்டத் தலைநகரான நாமக்கல்லிலிருந்து 33 கிலோமீட்டர்கள் (21 mi) தொலைவிலும் பரமத்தி வேலூரிலிருந்து 16 கிலோமீட்டர்கள் (9.9 mi) தொலைவில் அமைந்துள்ளது. இந்த கிராமம் காவிரி ஆற்றுக்கு மிக அருகில் அமைந்துள்ளது. ஈரோடு, திருச்செங்கோடு, பரமத்தி-வேலூர், கோவை மற்றும் சேலம் போன்ற நகரங்கள் இந்த கிராமம் வழியாகச் செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 4000 குடும்பங்கள் உள்ளன.[1][2]

பொருளாதாரம் தொகு

கிராமத்தின் பொருளாதாரம் முதன்மையாக விவசாயத்தினை சார்ந்து உள்ளது. முக்கிய பயிர்களாகக் கரும்பு, மஞ்சள் மற்றும் தென்னை பயிரிடப்படுகின்றன. பட்டு சேலை கைத்தறி நெசவு தொழிலுடன் மற்றும் பட்டுப் புடவை விற்பனை நிலையங்களும் உள்ளன. சேடர்பாளையம் காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை, குழந்தைகள் பூங்கா மற்றும் படகு இல்லம் ஆகியவை முக்கிய சுற்றுலாத் தலங்களாகக் கிராமப் பொருளாதாரத்தை அதிகரிக்கவும் உதவுகிறது [3]

கோவில்கள் தொகு

  • அருள்மிகு ஸ்ரீ முனீசுவரர் கோவில், முனீசுவரர் மகாமுனி என்று அழைக்கப்படுகிறார். அதாவது செயந்தமுனி, இது பச்சையம்மன் கோவிலின் ஒரு பகுதியாகும்
  • கபிலர்மலை அருள்மிகு ஸ்ரீ முருகன் கோவில்
  • சேடர்பாளையம் அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் கோவில்
  • அருள்மிகு ஸ்ரீ சுவாமி அய்யப்பன் கோவில்
  • அருள்மிகு ஸ்ரீ இராமலிங்க செளடேசுவரி அம்மன் கோவில்
  • அருள்மிகு ஸ்ரீ பொன்காளியம்மன் திருக்கோவில், வடகரையாத்தூர்
  • அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில், வடகரையாத்தூர்

முக்கிய விழாக்கள் தொகு

வங்கிகளின் பட்டியல் தொகு

இங்கு அமைந்துள்ள வங்கிகள்.

கல்வி தொகு

அருகிலுள்ள கிராமங்களின் ஆரம்ப மற்றும் மேல்நிலைப் பள்ளித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக சேடர்பாளையத்தில் நல்ல எண்ணிக்கையிலான அரசு மற்றும் தனியார்ப் பள்ளிகள் உள்ளன. அவை:

  • அரசு ஊராட்சி தொடக்கப்பள்ளி - சேடர்பாளையம்
  • அரசு மேல்நிலைப் பள்ளி - சேடர்பாளையம்
  • ஆர்.கே.வி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
  • சன் சுடார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி

மேற்கோள்கள் தொகு

  1. "Jedarpalayam".
  2. "Poll Plank".
  3. "Illegal Water Tapping in Jedarpalayam".

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேடர்பாளையம்&oldid=3643019" இலிருந்து மீள்விக்கப்பட்டது