ஜேம்சு ஆப்வுட் ஜீன்சு

பிரித்தானியக் கணிதவியலாளரும் வானியலாளரும்

சர் ஜேம்சு ஆப்வுட் ஜீன்சு (Sir James Hopwood Jeans;[1] 11 செப்டம்பர் 1877 – 16 செப்டம்பர் 1946[2]) ஓர் ஆங்கிலேய இயற்பியலாளரும், வானியலாளரும், கணிதவியலாளரும் ஆவார்.

சர்
யேம்சு ஜீன்சு
James Jeans
பிறப்புஜேம்சு ஆப்வுட் ஜீன்சு
(1877-09-11)11 செப்டம்பர் 1877
ஓர்ம்சுக்கிர்க், லங்காசயர், இங்கிலாந்து
இறப்பு16 செப்டம்பர் 1946(1946-09-16) (அகவை 69)
டோர்க்கிங், சரே, இங்கிலாந்து
துறைவானியல், கணிதம், இயற்பியல்
பணியிடங்கள்திரித்துவக் கல்லூரி; பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்மெர்ச்சண்ட் டெய்லர் பள்ளி, கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம்
குறிப்பிடத்தக்க மாணவர்கள்ரொனால்டு பிசர்
அறியப்படுவதுஜீன்சு சமன்பாடு,
ஜீன்சு தப்பிப்பு
ஜீன்சு உறுதியின்மை
ஜீன்சு பொருண்மை
ஜீன்சு நீளம்
ஜீன்சின் தேற்றம்
ரேலி-ஜீன்சு விதி
அலை கருதுகோள்
விருதுகள்சிமித் பரிசு (1901)
ஆடம்சு பரிசு (1917)
ரோயல் பதக்கம் (1919)

இளமை

தொகு

இலங்காசயர் ஆர்ம்சுகிர்க்கில் பிறந்த இவர், ஒரு நாடாளுமன்ற செய்தித் தொடர்பாளரும் எழுத்தாளரும் ஆகிய வில்லியம் துல்லோச் ஜீன்சு என்பவரின் மகனாவார். இவர் நார்த்வுடில் உள்ள வணிகர் டெய்லர் பள்ளியிலும் வில்சன் இலக்கணப் பள்ளியிலும்[3][4] கேம்பர்வெல்லிலும் கேம்பிரிட்ஜ் டிரினிட்டி கல்லூரியிலும் கல்வி பெற்றார்.[5]

இவர் பள்ளியில் அறிவுசால் மாணவராக விளன்கினார். எனவே இவரைக் கேம்பிரிட்ஜ் கணிதவியல் முத்திறப் போட்டியில் முனைவாக பங்கேற்குமாறு அறிவுரைகள் வழங்கப்பட்டன:[6]

1896 இன் முற்பகுதியில், கில்பெர்ட் வாக்கர் ஜீன்சையும் ஆர்டியையும் கேம்பிரிட்ஜ் கணித முத்திறப் போட்டியில் இரண்டாண்டுக்குள் கலந்துகொள்ள அறிவுரை செய்து அனுப்பியிருந்தார். அவர் இவர்கள் போட்டிப் பட்டியலில் பதினைந்தாம் விராங்குலர் தகுதிக்கு மேல் வருவர் என உறுதி கூறவில்லை, என்றாலும் அவர்கள் இதற்காக வருந்தவேண்டியதில்லையெனக் கருதினார். வாக்கரின் அறிவுரையை ஏற்று இவர்கள் இருவரும் மிகவும் பெயர்பெற்ற அக்காலத்துச் சிறந்த தனியார் பயிற்றுநரான ஆர். ஆர். வெபுவிடம் சென்றனர். முதலாண்டின் இறுதியில், ஜீன்சு தன் பயிற்றுநரான வெபுவிடம் சண்டையிட்டு விட்டதாக வாக்கரிடம் கூறியுள்ளார். எனவே ஜீன்சுக்கு வாக்கரே பயிற்சியளித்துள்ளார். தன் விளைவு மாபெரும் வெற்றியில் முடிந்தது. ஜீன்சு காமரோனுடன் இரண்டாம் விராங்குலராக தேர்வாகினர். அடுசன் முதுநிலை விராங்குலராகவும் ஆர்டி நான்காம் நிலை விராங்குலர் ஆகவும் தேர்வகியுள்ளனர்.

இவர் 1901 அக்தோபரில் டிரினிட்டி கல்லூரி ஆய்வுறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[7][8] மேலும் கேம்பிரிட்ஜில் கல்வி பயிற்றுவித்துள்ளார். இவர் 1904 இல் பிரின்சுட்டன் பல்கலைக்கழகத்துக்குப் பயன்முறைக் கணிதவியல் பேராசிரியாராகச் சென்று சேர்ந்துள்ளார். பின்னர் இவர் கேம்பிரிட்ஜுக்கு 1910 இல் திரும்பி வந்துள்ளார்.

இவர் குவையக் கோட்பாடு, கதிவீச்சுக் கோட்பாடு, உடுக்கணப் படிமலர்ச்சி என இய்ற்பியலின் பல புலங்களில் முதன்மையான பணிகளை ஆற்றியுள்ளார். செழல் பொருள்களின் இவரது ஆய்வு ஒற்றை வளிம முகிலில் இருந்து சூரியக் குடும்பம் தோன்றியது என்ற பியேர் சைமன் இலாப்புலாசின் கோட்பாடு சரியானதன்று என்ற முடிவுக்கு இட்டு சென்றது. இவர் இதற்கு மாற்றாக, சூரியனை கடந்த விண்மீன் ஒன்றின் உடனான நெருங்கிய மோதலால் சிதறிய பொருள்களை ஈர்த்துக் கோள்கள் உருவாகின எனும் கோட்பாட்டை முன்மொழிந்தார். இன்று இக்கோட்பாடு ஏற்கப்படவில்லை.

ஜீன்சும் ஆர்த்தர் எடிங்டனும் பிரித்தானிய அண்டவியலை உருவாக்கினர். இவர் 1928 இல் புடவியில் தொடர்ந்து பொருண்மம் படைக்கப்படுவதான கருதுகோளை முன்வைத்து, முதன்முதலாக ஒரு நிலைத்த நிலை அண்டவியலைக் கற்பிதம் செய்தார்.[9] வானியலும் அண்டவியலும் எனும் தன் 1928 ஆம் ஆண்டு வெளியிட்ட நூலில் இவர் பின்வருமாறு கூறுகிறார்: "ஒண்முகில்களின் மையங்கள் இயற்கையின் தனிமைப் புள்ளிகளாக(சுழி வழுநிலைகளாக) அமைதலே அடிக்கடி முன்னிறுத்தப்படும் கருதுகோள் வகைகளாகின்றன. இப்புள்ளியில் நம் அண்டத்துக்குள் முற்றிலும் வேறான வெளியில் இருந்து பொருண்மம் கொட்டுகிறது அல்லது பொழிகிறது. எனவே அண்டத்தின் இப்புள்ளி பொருள் தொடர்ந்து உருவாகிறது."[10] இக்கோட்பாடு 1965 இல் அண்ட நுண்ணலைப் பின்னணி கண்டறிந்ததும் வழக்கிறந்து விட்டது. இப்பின்னணி பெருவெடிப்பின் அடையளத்தைக் காட்டும் சான்றாகப் பரவலாகக் கொள்ளப்பட்டது.

வளிமங்களின் இயங்கியல் கோட்பாடு எனும் 1904 இல் வெளியிட்ட தனிவரைவு நூலும் மின்சாரமும் காந்தமும் பற்றிய கணிதவியல் கோட்பாடு எனும் 1908 இல் வெளியிட்ட தனிவரைவு நூலும் இவரது அறிவியல் புகழ் பரவ காரணமாயின. இவர் 1929 இல் ஓய்வு பெற்றதும், பொதுமக்களுக்கான பல நூல்களை எழுதினார். இவற்றில் விண்மீன் தடங்கள் (1931), நம்மைச் சுற்றியுள்ள அண்டம், கால, வெளி ஊடாக (1934), அறிவியலின் புதிய பின்னணி (1933), விளங்கிக் கொள்ளமுடியாத புடவி ஆகியன அடங்கும். இந்த நூல்கள் இவருக்குத் தன் சமகால புரட்சிகர அறிவியல் கண்டுபிடிப்புகளை, குறிப்பாக சார்பியல் கோட்பாடு, அண்டக் கட்டமைப்பியல் புலங்களில் பெரும்புகழ் ஈட்டித் தந்தது.

பிரித்தானிய வானியல் கழக இதழ் 1939 இல் ஜீன்சு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத் தொகுதியில் நாடாளுமன்ற வேட்பாளராக நிற்கப்போவதாக அறிவித்தது. இந்தத் தேர்தல் 1939 அல்லது 1940 இல் நடக்கவிருந்தது. ஆனால் 1945 வரை தேர்தல் நடக்கவில்லை. இவரும் பிறகு இதில் ஈடுபாடேதும் காட்ட வில்லை.

இவர் "இயற்பியலும் மெய்யியலும் " எனும் நூலை 1943 இல் எழுதியுள்ளார். இநூலில் இவர் அறிவியல், மேய்யியல் ஆகிய இருவேறு நோக்குகளில் நிலவலைப் பற்றிய வேறுபடும் பார்வைகளின் தேடலை நிகழ்த்துகிறார். சமயம் சார்ந்த பார்வைகளில், பிரீமேனைப் போல அறியொணாவாதி ஆவார்.[11][12]

சொந்த வாழ்க்கை

தொகு

ஜீன்சு இருதடவை திருமணம் செய்துகொண்டார்; முதலில் அமெரிக்கக் கவிஞரான சார்லட்டி திபானி மிட்செலை 1907 இல் மணந்தார்.[13] பின்னர், இவர் ஆத்திரிய கருவி இசைஞரும் வில்நாண் இசைஞரும் ஆகிய சுசான்னி காக்கை (சுசி ஜீன்சு எனப்பெயரால் பரவலாக அறியப்பட்டவரை) 1935 இல் மணந்தார். இவர் சுரேவில் உள்ள தோர்க்கிங்கில் இறந்தார்.

நார்த்வுடு வணிகர் டெய்லர் பள்ளியில் ஜேம்சு ஜீன்சு நினைவாக கல்வி நல்கைத்தொகை வழஙப்படுகிறது. இது நுழைவுத் தேர்வில் பலதுறைகளில், குறிப்பாக கணிதத்திலும் அறிவியல் புலங்களிலும் தன்னிகரற்ற திறமையைக் காட்டும் மாணவருக்கு வழங்கப்படுகிறது.

முதன்மையான கொடைகள்

தொகு

ஜீன்சின் கண்டுபிடிப்புகளில் ஒன்று ஜீன்சு நீளம் ஆகும். இது விண்வெளியின் உடுக்கண வெளியில் நிலவும் வளிம முகிலின் உய்யநிலை ஆரமாகும். இது அந்த முகிலின் வெப்பநிலையையும் அடர்த்தியையும் அதன் உட்கூற்று துகள்களின் பொருண்மையையும் சார்ந்துள்ளது. ஜீன்சு நீளத்தை விட சிறிய முகில், விண்மீன் உருவாக்கத்துக்கான, வளிம விலக்கு விசையை எதிகொள்ள வேண்டிய, ஈர்ப்பு விசையைப் பெற்றிருக்காது, இதேபோல, ஜீன்சு நீளத்தை விட பெரிய முகில் குலைந்துவிடும்.

 

இவர் ஜீன்சு பொருண்மை அல்லது ஜீன்சுக் குலைவு (நிலைப்பின்மை) எனப்படும் மற்றொரு வகைச் சமன்பாட்டை மேற்கூறிய சமன்பாட்டுக்கு நிகராக கொணர்ந்தார். இது குலைவதற்கு முன்பு ஒரு முகிலில் திரளவேண்டிய உய்யநிலை பொருண்மைக்கான தீர்வை வழங்குகிறது.

இவர் இராலே-ஜீன்சு விதியைக் கண்டறிய உதவினார். இவ்விதி கரும்பொருளின் கதிர்வீச்சு ஆற்றலை உமிழ்வு வாயிலின் வெப்பநிலையோடு உறவுபடுத்துகிறது.

 

இவர் ஒரு கோளில் இருந்து வளிம மூலக்கூறுகள் தம் இயக்க ஆற்றலால் வெளியேறும் வளிமண்டலத் தப்பிப்பு வீதத்தை கணக்கிடும் முறையை வகுத்தளித்தார் இந்த வளிமண்டல வளிமத் தப்பிப்பு நிகழ்வு ஜீன்சு தப்பிப்பு என வழங்கப்படுகிறது.

கருத்துமுதலியம்

தொகு

அறிவின் ஓடை எந்திரஞ்சாராத நிலவலை நோக்கிப் பாய்கிறது; புடவிப் பேரெந்திரம் போலின்றிப் பெருஞ்சிந்தனை போன்று தோன்றத் தொடங்கி வருகிறது. மனம் தற்செயலாக பொருளில் ஊடுருவுவதாகத் தோன்றவில்லை... உண்மையில் நாம் அதைப் படைப்பாளியாகவும் பொருள்நிலவலை ஆளுநராகவும் துணியவேண்டியுள்ளது.

— ஜேம்சு ழீன்சு, மாயப் புடவி, [14]

இலண்டன் அப்சர்வரில் வெளியான ஒரு நேர்காணலில், " கோளில் நிலவும் உயிர் தற்செயலான விளைவால் தன் தோன்றியதாக நம்புகிறீர்களா அல்லது இது ஒரு பெருந்திட்டத்தின் பகுதியாக நம்புகிறீர்களா?",எனும் கேள்வியைக் கேட்டபோது பினவருமாறு பதிலிறுத்துள்ளார்:

நான் உணர்வு தான அடிப்படையானது; பொருளால் ஆய புடவி உணர்வில் இருந்து தோன்றியுள்ளதே தவிர, பொருளில் இருந்து உணர்வு தோன்றவில்லை என்ற கருத்து முதனமைக் கோட்பாட்டையே நம்புகிறேன்... பொதுவாக புடவி பேரெந்திரமாகவன்றிப் பெருஞ்சிந்தனைக்கு அணுக்கமானதாகவே எனக்குத் தோன்றுகிறது. ஒவ்வொரு தனி உணர்வும் பேராழ்மனத்தின் ஒரு மூளைக் கலமாகவே ஒப்பிட எனக்குத் தோன்றுகிறது .

என்ன நிலவுகிறதோ அது, விக்டோரிய அறிவியலாளனின் தவிர்க்கவியலாத ஆழ்நிலைப் பொருள் நிலவலுக்கும் அவரது பொருள்முதலியத்துக்கும் முற்றிலும் மிகவும் வேறுபட்டதாகும். இவரது புறநிலையான பொருளார்ந்த புடவி நம் சொந்த மனங்களினால் ஆன கட்டமைப்புகளின் உயர்நிலைக் கூட்டாகும். இந்த அளவுக்கு புத்தியற்பியல் கருத்து முதன்மை மெய்யியலின் பக்கம் நகர்ந்துவிட்டது. மனமும் பொருளும் ஒத்த தன்மையினவாக நிறுவப்படாவிட்டாலும் ஒருதனி அமைப்பின் உட்கூறுகள் ஆகிவிட்டன. தெ கார்த்தே காலத்தில் இருந்து மேய்யியலை அச்சுறுத்தி வந்த இருமைவாத வகை மெய்யியலுக்குச் சற்றும் இடமின்றிப் போய்விட்டது.

— ஜேம்சு ழீன்சு, 1934 பிரித்தானியக் கழக உரை, மெய்யியலும் இயற்பியலும் எனும் நூலில் பதிவாகியது, [15]

வெளியின் அளவுகளைப் பற்றிய வரம்புள்ள காட்சியும் கால வெளிப் பின்னணியில் வரியறுக்கப்படும் முன்மிகள்( protons) மின்னன்களின்(electrons) காட்சியும் திரைச்சீலை ஓவியக் கீற்றுகளாகி விட்டன. முடிந்தவரைப் பின் நோக்கிய காலப்பயணம், காட்சி உருவாக்கத்துக்கு கொண்டுசெல்லாமல் மாறாக, அதன் விளிம்புக்கே அழைத்து செல்கின்றன; ஒரு கலைஞனின் ஆக்கம் எப்படி திரைச்சீலைக்கு வெளியில் உள்ளது போல இத்தகைய புறநிலைக் காட்சி உருவாக்கமும் வெளியே குவிகிறது. இந்தப் பார்வையின்படி, காலவெளியில் புடவி தோன்றியதக விவாதிப்பது, கலைஞனையும் அவனது ஓவியச் செயல்பாட்டையும் கண்டுபிடிக்க முயல்வது, திரைச்சீலை விளிம்புக்கே அழைத்து செல்லும். இது நம்மை மிக அணுக்கமாக, புடவியைப் படைப்பாளரின் மனச் சிந்தனை வடிவமாகக் கருதும் மெய்யியல் அமைப்புகளுக்கு அழைத்து செல்லும். எனவே அனைத்து பொருள் உருவாக்க விவாதங்களயும் இப்பார்வை பொருளற்றதாக்கிவிடும்.

— ஜேம்சு ழீன்சு, நம்மைச் சூழ்ந்துள்ள புடவி, [16]

தகைமைகளும் விருதுகளும்

தொகு
  • அரசு கழக உறுப்பினர், மே, 1906
  • பேக்கர் விரிவுரை, அரசு கழகம், 1917.
  • அரசு பதக்கம் அரசு கழகம், 1919.
  • ஆப்கின்சு பரிசு, கேம்பிரிட்ஜ் மெய்யியல் கழகம் 1921–1924.
  • அரசு வானியல் கழகப் பொற்பதக்கம்]], 1922.
  • இவர் 1928 இல் சர் பட்டம் பெற்றார்.
  • பிராங்ளின் பதக்கம், பிராங்ளின் நிறுவனம், 1931.
  • இவர் காலமும் வெளியும் ஊடே (Through Space and Time) எனும் தலைப்பில் அரசு நிறுவனக் கிறித்தவ விரிவுரை ஆற்ர 1933 இல் இவர் அழைக்கப்பட்டார்.
  • முகர்ஜி பதக்கம், இந்திய அறிவியல் வளர்ச்சிக் கழகம், 1937.
  • தலைவர், இந்திய அறிவியல் பேராயம், 25 ஆம் கருத்தரங்கு, 1938.
  • கொல்கத்தா பதக்கம், இந்திய அறிவியல் பேராயக் கழகம் 1938.
  • தகைமை ஆணை உறுப்பினர், 1939.
  • நிலாவின் ஜீன்சு குழிப்பள்ளமும் செவாயின் ஜீன்சு குழிப்பள்லமும் இவரது நினைவாகப் பெயர் இடப்பட்டுள்ளன.
  • 1977 இல் இவரது நூற்றாண்டு விழாவுக்காக இசைவகுப்பாளர் இராபெர்ட் சிம்சன் காற்சரம் எண் 7 எனும் பண் இயற்றப்பட்டது, 1977.

நூல்தொகை

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Milne, E. A. (1947). "James Hopwood Jeans. 1877-1946". Obituary Notices of Fellows of the Royal Society 5 (15): 573–570. doi:10.1098/rsbm.1947.0019. 
  2. "England & Wales deaths 1837-2007 Transcription". Findmypast. பார்க்கப்பட்ட நாள் 2016-06-27. SEP 1946 5g 607 SURREY SE
  3. Milne 2013, ப. 1.
  4. Allport & Friskney 1987, ப. 234.
  5. "Jeans, James Hopwood (JNS896JH)". A Cambridge Alumni Database. University of Cambridge. 
  6. Milne 2013, ப. 4-5.
  7. "University intelligence - Cambridge". The Times (London) (36583): p. 4. 11 October 1901.  template uses deprecated parameter(s) (help)
  8. "University Intelligence - The New Trinity Fellows Cambridge". London Daily News: p. 3 col E. 11 October 1901. http://www.britishnewspaperarchive.co.uk/viewer/bl/0000051/19011011/080/0003. பார்த்த நாள்: 2016-06-27. 
  9. Jeans 1928, ப. 360.
  10. Reynosa, Peter (16 March 2016). "Why Isn't Edward P. Tryon A World-famous Physicist?". The Huffington Post. பார்க்கப்பட்ட நாள் 2016-06-27.
  11. De Chardin 2004, ப. 212.
  12. Bell 1986, ப. xvii.
  13. O'Connor, John J.; Robertson, Edmund F., "James Hopwood Jeans", MacTutor History of Mathematics archive, புனித ஆண்ட்ரூசு பல்கலைக்கழகம்.
  14. Jeans 1944, ப. 137.
  15. Jeans 1981, ப. 216.
  16. Jeans 1929, ப. 317.

வெளி இணைப்புகள்

தொகு

இணைய ஆவணத்தில் கிடைக்கும் ஜீன்சுவின் பணிகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேம்சு_ஆப்வுட்_ஜீன்சு&oldid=3617154" இலிருந்து மீள்விக்கப்பட்டது