ஜோதையா பாய் பைகா

ஜோதையா பாய் பைகா (Jodhaiya Bai Baiga)(பிறப்பு 1939) என்பவர் இந்தியாவின் மென்கலை கலைஞர் ஆவார். பைகா வம்சத்தினை சார்ந்த இவர், மத்தியப் பிரதேசத்தின் உமரியா மாவட்டத்தில் உள்ள லோர்ஹா கிராமத்தில் வசிக்கிறார். இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் என மூன்று குழந்தைகள் உள்ளனர்.[1] இவர் காட்டிலிருந்து உரம், விறகு, காய்களை விற்று பணம் சம்பாதித்தார்.

ஜோதையா பாய் பைகா
Jodhaiya Bai Baiga
பிறப்பு1930
தேசியம்இந்தியா
பணிகலைஞர்

பைகா நாற்பது வயதில், கணவன் இறந்துவிட்ட நிலையில், ஓவியம் வரைய ஆரம்பித்தார்.[2] இவரது கலைநயம் கோண்டு சமூக ஜங்கர் சிங் ஷியாமுடன் ஒப்பிடப்பட்டது.[1] ஓவியம் தீட்ட பயன்படும் துணி மற்றும் காகிதத்தில் ஓவியம் வரைந்த இவர், இப்போது களிமண், உலோகம் மற்றும் மரம் போன்ற பிற ஊடகங்களைப் பயன்படுத்துகிறார். இவர் வர்ணம் பூசுகிற முகமூடிகளை இவருடைய பேரன் செய்கிறான். இலுப்பை மரம் போன்ற உள்ளூர் பைகா உருவங்களால் இவள் ஈர்க்கப்பட்டாள்.[1][3] போபால், தில்லி, மிலன் மற்றும் பாரிஸ் ஆகிய இடங்களில் இவரது ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன.[4][2][1]

விருதுகள்

தொகு

2022-ல், பைகாவின் சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் இந்திய அரசு இவருக்கு நாரி சக்தி விருது வழங்கியது.[4] பின்னர், 2023-ல் இந்திய அரசால் கலைத்துறையில் பத்மசிறீ விருது இவருக்கு வழங்கப்பட்டது.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 "What makes Jodhaiya Bai such an exciting new talent at 82". https://lifestyle.livemint.com/how-to-lounge/art-culture/what-makes-jodhaiya-bai-such-an-exciting-new-talent-at-82-111651461575282.html. 
  2. 2.0 2.1 "Paintings of 80-year-old Madhya Pradesh woman on exhibit in Italy". https://www.hindustantimes.com/it-s-viral/paintings-of-80-year-old-madhya-pradesh-woman-on-exhibit-in-italy/story-ujxCAOZoSuQiLhR9rlowUJ.html. 
  3. "From the heart of India". https://indiaartfair.in/from-the-heart-of-india-jodhaiya-bai-baiga. 
  4. 4.0 4.1 "President Presents Nari Shakti Puraskar for the Years 2020, 2021". https://tatsatchronicle.com/president-presents-nari-shakti-puraskar-for-the-years-2020-2021/. 
  5. "Padma Awards 2023 announced". Press Information Buereau. Ministry of Home Affairs, Govt of India. பார்க்கப்பட்ட நாள் 26 January 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோதையா_பாய்_பைகா&oldid=3687397" இலிருந்து மீள்விக்கப்பட்டது