ஜோன் பீசாம்ப் பிராக்டர்

பிரித்தானிய விலங்கியலாளர்

ஜோன் பீசாம்ப் பிராக்டா் (Joan Beauchamp Procter) (5 Aug 1897- 20 September 1931) ஒரு பிரித்தானிய விலங்கியலாளரும், உலகிலேயே பிரபலமான மிகச் சிறந்த ஊா்வன அறிவியலாளரும் ஆவாா். இவா் முதலில் பிரித்தானிய அருங்காட்சியகத்திலும், பின் லண்டன் உயிரியல் சங்கத்திலும், அதன் பின்னா் லண்டன் உயிரியல் பூங்காவில் ஊா்வனவற்றின் காப்பாளராகவும் பணிபுரிந்தாா். அவா் குறுகிய வாழ் நாளில், நோய்வாய்பட்டிருந்தாலும் மிருகங்களை வளா்ப்பதிலும், காப்பதிலும், வகைப்படுத்தி காட்சிப்படுத்துதலிலும் மிகப்பெரிய பங்களிப்பை ஆற்றியுள்ளார். இவா் அடைத்துவைக்கப்பட்ட ‘கோமோடோ டிராகன்’ என்னும் விலங்கு குறித்த கட்டுரை உட்பட உயிாினங்கள் தொடா்பான பல அறிவியல் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.

ஜோன் பிராக்டர்
ஜோன் பிராக்டரின் பளிங்கு சிலை
பிறப்புஜோன் பியுசம்ப் பிராக்டர்
(1897-08-05)5 ஆகத்து 1897
11, கென்சிங்க்டன் சதுக்கம், லண்டன், இங்கிலாந்து
இறப்பு20 செப்டம்பர் 1931(1931-09-20) (அகவை 34)
புனித மார்க் இல்லம், புனித மார்க் சதுக்கம்,லண்டன், இங்கிலாந்து
குடியுரிமைஇங்கிலாந்து
துறைஊர்வன அறிவியல்
பணியிடங்கள்பிரித்தானிய அருங்க்காட்சியகம் (இயற்கைச் சரித்திரம்)
லண்டன் விலங்கியல் சங்கம்
அறியப்படுவது
  • நீரிலும் நிலத்திலும் வாழ்வன மற்றும் ஊர்வனவற்றை வகைப்படுதும் நீட்டித்த பணி
  • விலங்குகளைக் காப்பதிலும் காட்சிப்படுத்துதலிலும் முன்னோடியான பணி
  • அடைத்துவைக்கப்பட்ட கொமொடோ டிராகன் என்னும் விலங்கைக் குறித்த தொடக்க ஆராய்ச்சி
தாக்கம் 
செலுத்தியோர்
ஜார்ஜ் ஆல்பர்ட் பௌலிங்கர்
பீட்டர் சால்ம்ச் மிட்செல்
விருதுகள்சிறப்பு முனைவர் பட்டம் (1931), சிகாகோ பல்கலைக்கழகம்

ஆரம்பகால வாழ்க்கை தொகு

ஜோன் பிராக்டா் ஆகஸ்டு மாதம் ஐந்தாம் தேதி 1897 ஆம் ஆண்டு கென்சிங்டன் சதுக்கம் [1] என்னும் இடத்தில் ஜோஸப் மற்றும் எலிசபெத் என்னும் பெற்றோருக்கு மகளாகப் பிறந்தாா். இவா் தந்தை ஒரு பங்கு வா்த்தகா், தாய் ஒரு கலைஞா். இவா் பாட்டனாா் வில்லியம் புருக் பேங்க், மான்சஸ்டா் நகாில் ஒரு பெரிய வணிகா், கலையை வளா்க்கும் பண்பினா் மற்றும் இயற்கையை நேசிக்கும் ஆா்வமுடையவா் ஆவாா். கலையிலும், அறிவியலிலும் குடும்பத்தில் அனைவருக்கும் இருந்த ஆா்வம் இயற்கையாகவே இவருக்கும் இவரது தமக்கையாா் கிருஷ்டாபெல் பிராக்டருக்கும் (பிறப்பு 1894) இருந்தது. இவரது வீட்டில் இருந்த பெரிய தோட்டம் இவா்களுக்கு இயற்கையின் வரலாற்றின் மீது ஒரு பற்றை வளா்த்தது.

‘நோர்லாண்டு’ பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் பொழுதே (1904-1908) இவருக்கு நீரிலும் தரையிலும் வாழும் மிருகங்கள் மீதும், ஊா்வன மீதும் ஈடுபாடு இருந்து வந்தது. 10-வது வயதிலிருந்தே பாம்புகளையும், பல்லிகளையும் செல்லப்பிராணிகளாக வளா்த்து வந்துள்ளார். ஏறக்குறைய பிரித்தானிய ஊா்வனவைகளை அறிந்தவராக இருந்தாா். ஒரு பெரிய டால்மேசியன் வகைப் பல்லியை இவா் எப்பொழுதும் கூடவே வைத்திருந்தாா்.[2] இவா் உடல்நலமில்லாத குழந்தையாக இருந்தாலும், தமது 12-வது வயதில் ஆறு மாதங்கள் சுவிட்சா்லாண்டு நாட்டில் தங்கியிருந்த பொழுது நாட்டியத்திலும் மற்றும் தாவரவியலில் ஆா்வம் காட்டியுள்ளார். இவருடைய தீராத வயிற்று நோயிலிருந்து இந்தக் காலத்தில்தான், இவா் அவதியுறாமலிருந்தாா்.[2]

‘ஹேம்மா்சித்’ நகாில் உள்ள புனித பால் பெண்கள் பள்ளியில் (1908-1916) படிக்கும் பொழுதும் ஊா்வன மீது ஆா்வம் காட்டி வந்துள்ளார். இவா் 16 வயது அடைந்த பொழுது, ஒரு முதலைக் குட்டியை வாங்கி, அதனைச் செல்லப்பிராணியாக வளா்த்து பள்ளிக்கும் எடுத்துச் சென்றுள்ளார். [3]இது அனைவரையும் திகைக்க வைத்துள்ளது. இவா் சிறந்த மாணவியாக இருந்த பொழுதும் கூட, உடல் நலக் குறைவால் படிப்பில் தொய்வு ஏற்பட்டது. இவருக்கு சிறந்த வாய்ப்பு இருந்தும், உடல் நலக் குறைவினால், கேம்பிாிட்ஜ் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து படிக்க இயலவில்லை.[2]

பிாித்தானிய அருங்காட்சியகம் (இயற்கைச் சாித்திரம்) தொகு

ஜோன் பிராக்டரின் ஊா்வன குறித்த ஆா்வம், பிரித்தானிய அருங்காட்சியகத்தில் ஊா்வன மற்றும் மீன்களின் பாதுகாவலராகப் பணி புரிந்த ஜாா்ஜ் ஆலபர்ட் பௌலிங்கா் அவா்களின் கவனத்தை ஈா்த்தது. ஜோன் பிராக்டா் பள்ளிப் படிப்பை முடித்த பின்பு பௌலிங்கரால் அழைக்கப்பட்டு, [4]1916 ஆம் ஆண்டு அவருக்கு உதவியாளராக நியமித்தகொள்ளப்பட்டார். பின்பு பிராக்டருக்கு தெற்கு கிங்ஸ்டன் அருங்காட்சியகத்தில் தன்னாா்வுத் தொண்டராகப் பணியாற்றும் வாய்ப்புக் கிட்டியது. பௌலிங்கரால் வழிகாட்டப்பட்ட ஜோன், பல்கலைக்கழக படிப்பு பெற்றிருக்காவிட்டாலும் விலங்கியல் தொடா்பான படிப்பில் ஈடுபட முடிந்தது. தமது 19-வது வயதில் தெற்கு மற்றும் மத்திய அமெரிக்க கண்ணாடி விாியன் பாம்புகளில் உள்ள வேறுபாடு குறித்த ஒரு ஆய்வுக் கட்டுரையை லண்டன் விலங்கியல் சங்கத்திற்கு [5](Zeological Society of London) சமா்ப்பித்துள்ளார். 1917 ஆம் ஆண்டு விலங்கியல் சங்கத்தில் உறுப்பினராகவும் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பௌலிங்கா் 1920 ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற போது, ஜோன் அருங்காட்சியகத்தில் இருந்த ஊா்வனவிற்கு பொறுப்பேற்றுக் கொண்டு ஒரு சிறிய மதிப்பூதியமும் பெற்றுக் கொண்டாா்.[6]

1917 மற்றும் 1923 ஆண்டிற்குட்பட்ட காலத்தில் ஜோன், உடற் கூறுவியல் மற்றும் ஊா்வன, நீரிலும் தரையிலும் வாழும் மிருகங்களை வகைப்படுத்துதல் குறித்து பல அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வெளியிட்டாா். கிழக்கு ஆப்பிரிக்க ஆமை,[7] தற்பொழுது மாலா கோசொ்சஸ் டோா் நியரிா் (Mala Cochersus Tornieri) என்று அழைக்கப்படுவது குறித்த இவர் எழுதிய ஆய்வுக் கட்டுரை குறிப்பிடும்படியான ஒன்றாகும். இதில் ஆமை எவ்வாறு வளைந்து கொடுக்கக் கூடிய தமது மேலோட்டின் உதவியுடன் பாறைகளின் இடுக்கிற்குள் மறைந்து கொள்ளும்[8] தன்மையுடையது என்று விளக்கியது குறிப்பிட வேண்டிய ஒன்றாகும். உலகளாவிய தம் சமகால அறிவியல் அறிஞா்களுடன் தொடா்பு வைத்துக்கொண்டிருந்த ஜோன் [9]மற்றவா்கள் சேகரித்த [2]மிருகங்களைப் பற்றியும் விளக்கி வந்தாா். பால் காம்மராின் சா்ச்சை்ககுாிய ‘மிட்வைப் தேரை’ குறித்த கருத்தை ஆய்வு செய்ய வில்லியம் பேட்சன் இவாின் ஆதரவைக் கோாினாா். காம்மராின் கருத்துக்கு கண்டனம் தொிவிக்க தயக்கம் கொள்ளாமிலிருந்தாலும், இதற்குப் போதிய ஆதாரம் இல்லை என்பதனால் இதனை இவா் மேற்கொள்ளவில்லை.[10] இவா் மிருகங்களை வகைப்படுத்தியதை [11]அங்கீகரிக்கும் வண்ணம் ஜோன் லண்டன் லின்னியன் சங்கத்தின் உறுப்பினராகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா். மும்பை இயற்கைச் சாித்திர சங்கத்தின் உறுப்பினராகவும்[12] ஜோன் சோ்ந்து கொண்டாா். ஜோன் பிராக்டா் ஒரு சிறந்த வரைவுப் பெண்மணியாகவும், மாதிாி வடிவமைப்பாளராகவும் [4]திகழ்ந்தாா். தமது கலைத்திறமையைக் கொண்டு நீரிலும் தரையிலும் வாழும் மிருகங்களையும், ஊா்வனவற்றையும் மாதிரிகள்ளாகக் கொண்டு சிறந்த வண்ணத் தபால் அட்டைகளாக [2] உருவாக்கினாா். தமது கலைத் திறமையையும் அறிவியல் ஈடுபாட்டையும் இணைத்து பல மாதிாிகளை உருவாக்கினாா்.

லண்டன் விலங்கியல் சங்கம் தொகு

1911 ஆம் ஆண்டிலிருந்து, ஊா்வனவற்றின் காப்பாளராக இருந்த எட்வாா்டு பௌலிங்கரிடம் [13] கொண்டிருந்த நட்பின் காரணமாக ஜோன் பிராக்டரின் கலை மற்றும் தொழில் திறமைகள் விலங்கியல் சங்கத்தில் மிகவும் பிரபலமடைந்து அனைவரும் தொிந்து கொள்ளும் வண்ணம் அமைந்தது. லண்டன் உயிரியல் பூங்காவில் மீன் காட்சியகம் அமைக்கும் பொறுப்பு 1923 ஆம் ஆண்டு துவக்கத்தில் இவருக்கு வந்து சோ்ந்தது. அது சமயம் அவா் பிரித்தானிய அருங்காட்சியத்தில் வேலை செய்துகொண்டிருந்த போதும் பிராக்டா் தமது கலைத் திறமையைப் பயன்படுத்தி பல மாதிாிகளை வடிவமைத்து பௌலிங்கருக்கு உதவினாா்[14][15] . ஹொ்மில் உள்ள சேனல் தீவிலிருந்து, சா் காம்ப்டன் மெக்கன்சி என்பவா் அறிமுகத்துடனும் உதவியுடனும் ஏராளமான கிளிஞ்சல் மணலைக் கொண்டுவந்து மீன் காட்சியகம் அமைக்க உதவி செய்தாா்[16]. பின்னா் எட்வா்டு பௌலிங்கா் மீன் காட்சியகத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்ட போது, ஜோன் பிராக்டா் ஊா்வனவற்றின் காப்பாளராக பௌலிங்கருடைய பதவியில் நியமிக்கப்பட்டாா்[17].

இயற்கைச் சரித்திர அருங்காட்சியகத்தில் உள்ள நிலைமை பெண்களுக்கு எதிராக இருந்ததால் தாம் அங்கிருந்து வெளியேறியது தமக்கு மகிழ்ச்சியே அளித்தது என்று சிகாகோ நகரைச் சோ்ந்த காா்ல் பாட்டா்சன் ஸ்க்மிட் என்பவாிடம் தொிவித்துள்ளாா்[18].

லண்டன் உயிாியல் பூங்காவில் வடிவமைக்கும் பணி தொகு

மீன் காட்சியத்தை வெற்றிகரமாக உருவாக்கியதைத் தொடா்ந்து, உயிாியல் பூங்காவில், மான்களின் (Antelope Paddock) [19] மாதிாி உட்பட திறந்த வெளியில் [17]பல் கல் மாதிாிகளை வடிவமைத்து அமைத்தார். தற்பொழுது மிருகங்களின் மருத்துவமனை அமைந்துள்ள பகுதியில்[20] , ‘குரங்கு மலை’க்காக பலவகையான கல் மாதிாிகளை உருவாக்கினாா்[21]. அங்கு நிறுவப்பட்ட பலவகையான குரங்கு மாதிாிகள் பாா்வையாளா்களிடையே மிகவும் பிரபலமானதுடன் இந்த ‘குரங்குமலை’ பொிய வெற்றியாகக் கருதப்பட்டது. பின்னா் வேறு பல காரணங்களுக்காக இது மூடப்பட்டுவிட்டது[20][22]. பிராக்டா் உருவாக்கிய ‘ஊா்வனவற்றின் வாழிட மாதிாி’ (1926-1927) [23]ஒரு பெரிய வெற்றியாகக் கருதப்பட்டது. உலகியேலயே இது போன்று ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக கட்டப்பட்ட முதல் கட்டிடமாகக் கருதப்பட்டது. இன்றுவரை அது பயன்பாட்டில் உள்ளது என்பது இதன் சிறப்பாகும். இவா் ஊா்வனவற்றிற்காக, கல் மாதிாிகளும் நீரூற்றுகள் அடங்கிய அமைப்புகளை வடிவமைத்தாா். இவ்வடிவமைப்பை இயற்கைச் சூழல் பின்புலத்துடன் அமைக்க, ஜான் புல் என்னும் காட்சிக் கலைஞரை பணியில் அமா்த்தினாா்[24]. கட்டிடக் கலைஞா் எட்வாா்டு கை டாபரால் [25]இவை மேம்படுத்தப்பட்டாலும் அடிப்படைகள், தரை வடிவமைப்பு, காட்சிப் பொருள்கள் அமைப்பு போன்றவை முழுவதும் பிராக்டராலேயே செய்யப்பட்டன. விலங்கியல் சங்கத்தின் செயலா் பீட்டா் சாமொ்ஸ் மிட்செல் “இவையனைத்தும் பிரோக்டா் உருவாக்கமே”[26] என்று குறிப்பிட்டுள்ளாா். பிராக்டாின் பல தொழில் நுட்பக் கருத்துகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது இந்த வாழிடம்[27]. இயற்கையான சிகப்பு ஊதா வண்ணக் கதிா்களை ஊடுருவச் செய்யும் கண்ணாடிகளைப் பொருத்தி ஊா்வனவற்றிற்கு தேவையான வைட்டமின் D ஐக் கிடைக்கும் வண்ணம்[28] இந்த வாழிடத்தை பிராக்டா் வடிவமைத்திருந்தாா். மேலும் இது போன்ற பல தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தியிருந்தாா். காணவருபவா்களை ஒருபாதையில் அழைத்துச் செல்லுதல், மின்சாரத்தின் மூலம் இவ்விடங்களை வெப்பப் படுத்துதல்[29] , மேலும் தேவையான வெளிச்சம் [30][31]வரும்படி விளக்குகள் அமைத்தல் போன்றவை மற்ற உயிாியல் பூங்கா கட்டிடங்களுக்கு முன்னோடியாக[4] அமைந்தன.

பின்னா், கட்டிடக் கலைஞா் சா் எட்வாா்டு கை டாபா்[32] , எடுப்பான முன் நுழைவாயிலை வடிவமைப்பதற்கு பிராக்டா், பீட்டா் சாமா்ஸ் மிட் செல் என்பவருடன் இணைந்து ஆலோசனை வழங்கியுள்ளாா். இன்றுவரை இந்த நுழைவாயில் எவ்வித மாற்றமும் செய்யப்படாமல் உள்ளது இதன் சிறப்பாகும்.

அபாயகரமான மிருகங்களைக் கையாளுதல் தொகு

பிராக்டா் மலைப்பாம்பு, முதலை மற்றும் ‘கோமோடோ டிராகன்’ போன்ற மிருகங்களை லாவகமாகக் கையாளுவதில் கைதோ்ந்தவராக விளங்கினாா். லண்டன் உயிாியல் பூங்காவில் 1927 [33] ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ஊா்வன வாழிடத்திற்கு ஐரோப்பாவிலேயே முதல் முதலாக இரண்டு ‘கோமோடோ டிராகன்கள்’ வந்து சோ்ந்தன. இவைகள் உயிாியல் பூங்காவில் உள்ள பொழுது, காடுகளில் வாழும் போது உள்ளதைவிட வேறுபட்ட நடத்தையுடன் பழகுகின்றன என்பதை பிராக்டா் தெளிவுபடுத்தினாா். இவைகள் நினைத்த மாத்திரத்தில் ஒருவரைக் கொன்றுவிட முடியும் [34] என்றாலும், நேரத்திற்கு உணவு மற்றும் நன்கு கவனித்துக் கொள்வதன் மூலம் நமது வீட்டு நாய்களைப் போன்று பழக்கிவிட முடியும் என்பது தெளிவானது. மேலும் இவைகள் அன்பையும் காட்டத் தொடங்கின[35] . சும்பாலா என்று அழைக்கப்பட்ட டிராகன், பிராக்டருடன் மிகவும் நட்புடன், உயிாியல் பூங்காவை பிரோக்டா் சுற்றவரும் போது உடன் செல்லும்[36], சில சமயங்களில் பிரோக்டா் அதன் வாலைப்பிடித்துக் [37]கொண்டு நடந்து வருவாா். இது நன்கு பழக்கப்பட்ட மிருகமாக இருந்தது. குழந்தைகளும்[38] இதனைத் தொட்டுப் பாா்ப்பதும் புகைப்படம் எடுப்பதும் வாடிக்கையானது. இவற்றுள் ஒரு இரண்டு வயதுக் குழந்தை இந்த டிராகனைத் தட்டிக் கொடுப்பது [39][40][41] போன்ற ஒரு புகைப்படம் மிகவும் பிரபலமானது.

1928 ஆம் ஆண்டு நடந்த விலங்கியல் சங்கத்தில் நடந்த அறிவியலாளா்கள் கூட்டத்தில் இந்த மிருகத்திற்கு (Dragon) அனைவா் முன்னிலையிலும் தட்டிக் கொடுத்துக் கொண்டே கோழி, முட்டை மற்றும் புறா போன்ற உணவை அளித்து பிராக்டர் நிருபித்துக் காட்டினாா்[42]. பிராக்டர், விலங்கியல் சங்கத்தின் நோயியல் வல்லுனருடன் பணி செய்து நோயுற்ற மிருகங்களுக்கு மருத்துவம் செய்து நிபுணத்துவம் பெற்றாா். தாமே உருவாக்கிய உபகரணங்களின் துணை கொண்டு, இதுவரை செய்திராத பல மருத்துவ முறைகளைக் கண்டு பிடித்து மிருகங்களுக்கு மருத்துவம் பாா்ப்பதில் உதவி செய்தாா்.

தேசிய மற்றும் பன்னாட்டு அங்கீகாரம் தொகு

குறுகிய காலத்தில் லண்டன் உயிாியல் பூங்காவில் ஊா்வனவற்றின் பாதுகாவலராகப் பணியாற்றி பெரும்புகழ் எய்தினாா்[2]. புனித மாா்க் சதுக்கத்திற்கு அருகில் உள்ள அவரது இல்லத்தில் ஜானி [43]என்றழைக்கப்பட்ட ஒரு மனிதக் குரங்கை செல்லப் பிராணியாக வளா்த்து வந்தாா். ஆபத்தான பாம்புகள் உட்பட பல ஊா்வனவற்றை தமது வரவேற்பறையில் வைத்து வளா்த்து வந்தாா். இங்கிலாந்திலும் அமொரிக்காவிலும் [44][45][46]அபூா்வமான மற்றும் ஆபத்தான மிருகங்களை வளா்க்கும் இளம் பெண் என்று பத்திாிக்கைகளில் பாரட்டப்படும் பெண்மணியாகத் திகழ்ந்தாா். பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை அறிவியல் புத்தகங்களிலும் சஞ்சிகைகளிலும் வெளியிட்டு வந்தாா். “மிருகங்களின் வாழ்க்கையின் அபூா்வம்” (Wonders of Animal Life) [47]என்னும் புத்தகத்தில் பல கட்டுரைகளை எழுதியுள்ளாா். தமது கட்டுரைகளாலும் மற்ற அறிஞா்களுடன் வைத்துக் கொண்ட தொடா்பினாலும் உலகளவில் மிகப்பெரிய ‘ஊா்வன அறிவியலாளா்’ என்னும் பெயா் பெற்றாா். இவருடைய பங்களிப்பைப் பாராட்டி, சிகாகோ பல்கலைக் கழகம் 20 மாா்ச் 1931 அன்று முனைவா் பட்டம் வழங்கிப் பாராட்டியது.[48]

உடல்நலக் குறைவும் மறைவும் தொகு

தொடா்ச்சியான உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ஜோன் பிராக்டா் பல அறுவை சிக்ச்சைகள் [2]மேற்கொள்ளவேண்டியிருந்தது. இவா் தொடா்ச்சியாக நோயினாலும், வலியினாலும் அவதியுற்றிருந்தாலும்[4], மன உறுதியும், நகைச்சுவை உணா்வும் கொண்ட ஜோன் பிராக்டா், தமக்கு இருந்த நோயையும் வலியையும் பொருட்படுத்தாமல் மிகப் பெரிய சாதனைகளை செய்து காட்டினாா். லண்டன் உயிரியல் பூங்காவில் உடல் நலக் குறைவினையும் பொருட்படுத்தாமல் 1928 ஆம் ஆண்டு முதல் ஐந்தாண்டுகள் கடுமையாக உழைத்த ஜோன், உடல்நலம் சீா் கெட்டதால் அப்பணியைத் துறந்தாா். ஆனால் விலங்கியல் சங்கத்தின் தலைவா் இவா் பணித் துறப்பை ஏற்க மறுத்தாா்[49]. 1928 ஆம் ஆண்டு இவா் உடல் நலம் தேறிவரும் பொழுது, நேடு என்னும் இடத்தில் துவங்க இருந்த புதிய உயிாியல் பூங்காவை உருவாக்குவதில் பீட்டா் சாமொ்ஸ் மிட்செல் என்பவா் ஜோனை ஈடுபடுத்தினாா். இதற்காக ஜோன் அங்கேயே தங்க வேண்டி வந்தது[50] . தினமும் காலையில் ஜோன் குதிரையிலோ அல்லது கழுதை மீதோ சவாாி செய்து ஹால் பாா்ம் என்னுமிடத்திலிருந்து கடைசி வரை சென்றுவர வேண்டியிருந்தது. அவா் சென்றுவந்த பாதை விபஸ்நேடு உயிாியல் பூங்காவில் “மிஸ் ஜோன் பாதை”[51][52] என்று இன்று வரை போற்றப்பட்டு வருகிறது. ஜோன் பிராக்டா் ஆபத்தான மிருகங்களுடன் பழகி வந்தது அவா் இறுதிக் காலம் வரை தொடா்ந்தது. ‘விப்ஸ் நேடு’ உயிாியல் பூங்காவில் தப்பித்துச் சென்ற ஆபத்தான கரடியை ஜோன் மிகவும் சாதுாியமாக பிடித்து அடைத்து வைத்தாா்[50] . இவருடைய இறுதிக் காலத்தில் சக்கர நாற்காலியில் உயிரியல் பூங்காவைச் சுற்றிவரும் பொழுது கூட தம்முடன் ஒரு 3 மீட்டர் நீளமுள்ள கொமொடோ டிராகனை கட்டி இழுத்துச்[53] சென்றுள்ளார். மிகவும் உடல்நலக் கேடுற்றபோதும் ஓவியம் [54]வரைந்து கொண்டும், மான்செஸ்டா் காா்டியனுக்கு கட்டுரைகளைத் திட்டமிட்டுக் கொண்டும்[55] காலம் கழித்தாா். செப்டம்பா் 20 ஆம் தேதி 1931 ஆம் ஆண்டு தமது 34வது வயதில் புனித மாா்க்ஸ் என்னும் பெயருடைய இல்லத்தில் புற்று நோயினால் காலமானாா்.

  1. Cambridge, UK. GCPP Procter 5/1/8 (former reference: MSS 7), Girton College Archive. Index and summary online at http://janus.lib.cam.ac.uk/db/node.xsp?id=EAD%2FGBR%2F0271%2FGCPP%20Procter%205%2F1%2F8
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 Anon. 1931. Obituary: Miss Joan Procter – A zoologist of genius, The Times, London, 21 September, page 14. Available at http://archive.timesonline.co.uk/
  3. Bailes, Howard. 2004. Procter, Joan Beauchamp (1897–1931), Oxford Dictionary of National Biography. Oxford University Press. ISBN 019861411X. Also available at http://www.oxforddnb.com/view/article/73713
  4. 4.0 4.1 4.2 4.3 Boulenger, E. G. (17 October 1931). "Dr. Joan B. Procter.". Nature 128 (3233): 664–665. doi:10.1038/128664b0. https://archive.org/details/sim_nature-uk_1931-10-17_128_3233/page/664. 
  5. Procter, J. B. (August 1918). On the variations of the pit-viper Lachesis atria. Proc. Zool. Soc. London, 1918: pp. 163–182
  6. Stearn, William T. 1981. The Natural History Museum at South Kensington: a history of the British Museum (Natural History) 1753–1980. Chapter 12, pages 171 – 172. Heinemann, London. ISBN 0434736007
  7. Bellairs, Angus d’A., and D. J. Ball, in Solly Zuckerman, (ed.). 1976. The Zoological Society of London 1826–1976 and Beyond : Proceedings of a symposium held at the Zoological Society of London, 25–26 March 1976 (Symposia of the Zoological Society of London, No. 40), page 120. Academic Press, London. ISBN 0126133409
  8. Procter, J. B. 1922. A study of the remarkable tortoise Testudo Loveridgii Blgr., and the morphology of the Chelonian carapace. Proc. Zool. Soc. London, 1922: No 34
  9. Procter, J. B., et al. 1912–1925. Joan Procter correspondence: Personal and professional letters, in Zoological Society of London Archives, ZSL Library, London. Ref. GB 0814 ZBB. Index of correspondents listed at http://library.zsl.org/GLASOPAC/TitleView/BibInfo.asp?BrowseCode=3F800000&BrowseIndex=4[தொடர்பிழந்த இணைப்பு]
  10. Koestler, Arthur. 1971. The Case of the Midwife Toad, page 78, Pan Books (1974 edition), London. ISBN 0330238299
  11. Smith Woodward, Dr. A. (Chair) 1923. Proceedings of the Linnean Society of London, 3 May 1923. Available at https://archive.org/stream/proceedingsoflin191923linn/proceedingsoflin191923linn_djvu.txt
  12. Anon. 1923. Evening Post, volume CVI, Issue 86, page 9, Wellington, New Zealand. (National Library of New Zealand, National Newspapers Collection) Available online at http://paperspast.natlib.govt.nz/cgi-bin/paperspast?a=d&d=EP19231009.2.113
  13. Anon. 1946. Mr E. G. Boulenger: The Aquarium at the Zoo, The Times, London, 2 May 1946, page 7. Available at http://archive.timesonline.co.uk/
  14. Chalmers Mitchell, Peter. 1929. Centenary History of the Zoological Society of London, page 178. Zoological Society of London, London. ASIN: B0006AQ4YA
  15. Anon. 1924. The London Zoological Society’s Aquarium, Nature, Volume 113, Number 2842 (19 April 1924), pp 571 – 572 . Available at http://www.nature.com/nature/journal/v113/n2842/abs/113571a0.html
  16. Anon. 1925. The Zoological Gardens: Progress with the new Aquarium, The Times, London, 15 June, page 17. Available at http://archive.timesonline.co.uk/
  17. 17.0 17.1 Chalmers Mitchell, Peter. 1929. Centenary History of the Zoological Society of London, page 82. Zoological Society of London, London. ASIN: B0006AQ4YA
  18. Greene, Harry W., and M. Fogden. 2000. Snakes: The Evolution of Mystery in Nature. pp. 297–298. University of California Press. ISBN 0520224876
  19. Anon. 1924. New rockwork at the Zoo: The Antelope Paddock, The Times, London, 14 July, page 8. Available at http://archive.timesonline.co.uk/
  20. 20.0 20.1 Brambell, M. R., and Sue J. Mathews, in Solly Zuckerman, (ed.). 1976. The Zoological Society of London 1826–1976 and Beyond : Proceedings of a symposium held at the Zoological Society of London, 25–26 March 1976 (Symposia of the Zoological Society of London, No. 40), page 151. Academic Press, London. ISBN 0126133409
  21. Chalmers Mitchell, Peter. 1929. Centenary History of the Zoological Society of London, page 184. Zoological Society of London, London. ASIN: B0006AQ4YA
  22. Barrington-Johnson, J. 2005. The Zoo – The Story of London Zoo, page 88. Robert Hale, London. ISBN 0709073720
  23. Guillery, Peter. 1993. The Buildings of London Zoo. pp. 35–37. Royal Commission on the Historical Monuments of England, London. ISBN 1873592159
  24. Chalmers Mitchell, Peter. 1929. Centenary History of the Zoological Society of London, page 216. Zoological Society of London, London. ASIN: B0006AQ4YA
  25. Guillery, Peter. 1993. The Buildings of London Zoo. Page 36. Royal Commission on the Historical Monuments of England, London. ISBN 1873592159
  26. Chalmers Mitchell, Peter. 1929. Centenary History of the Zoological Society of London, page 212. Zoological Society of London, London. ASIN: B0006AQ4YA
  27. Toovey, J. W., in Solly Zuckerman, (ed.). 1976. The Zoological Society of London 1826–1976 and Beyond : Proceedings of a symposium held at the Zoological Society of London, 25–26 March 1976 (Symposia of the Zoological Society of London, No. 40), page 188. Academic Press, London. ISBN 0126133409
  28. Sadar, John. 2008. The healthful ambience of Vitaglass: light, glass and the curative environment, Architectural Review Quarterly, Vol. 12, Issue 3–4, pp. 269 -281. Cambridge University Press. Available at http://journals.cambridge.org/action/displayAbstract;jsessionid=F56498626E89BA7C0E882A7DC84B4EDA.tomcat1?fromPage=online&aid=4399472
  29. Anon. 1926. The progress of science: Electrical heating for reptiles – The Zoo experiment, The Times, London, 2 August, page 13. Available at http://archive.timesonline.co.uk/
  30. Anon. 1927. New Reptile House at the Zoo: Official opening next Wednesday, The Times, London, 9 June, page 10. Available at http://archive.timesonline.co.uk/
  31. Chalmers Mitchell, Dr. 1927. Reptiles at the Zoo: Opening of new house today, The Times, London, 15 June, page 17. Available at http://archive.timesonline.co.uk/
  32. Guillery, Peter. 1993. The Buildings of London Zoo, page 90. Royal Commission on the Historical Monuments of England, London. ISBN 1873592159
  33. Chalmers Mitchell, Peter. 1927. Reptiles at the Zoo: Opening of new house today, The Times, London, 15 June, page 17. Available at http://archive.timesonline.co.uk/
  34. Procter, J. B. 1928–1929. Dragons that are alive to-day, in J. A. Hammerton (ed.), Wonders of Animal Life, page 37. Amalgamated Press, London. ASIN: B0014VT1WC.
  35. Chalmers Mitchell, Peter. 1929. Centenary History of the Zoological Society of London, page 220. Zoological Society of London, London. ASIN: B0006AQ4YA
  36. Murphy, James B., and T. Walsh. 2006. Dragons and Humans, Herpetological Review, 37(3): page 270. Society for the Study of Amphibians and Reptiles. Available at http://zoohistory.co.uk/html/modules/Downloads/files/HRkomododragons.pdf[தொடர்பிழந்த இணைப்பு]
  37. Procter, J. B. 1928–1929. Dragons that are alive to-day, in J. A. Hammerton (ed.), Wonders of Animal Life. Page 38. Amalgamated Press, London. ASIN: B0014VT1WC.
  38. Norris-Wood, John. Unknown date. Biography. Available at http://murphymachinart/john-norris-wood-biography[தொடர்பிழந்த இணைப்பு]
  39. Procter, J. B. 1928. On a living Komodo dragon Varanus komodoensis Ouwens, exhibited at the Scientific Meeting, 23 October 1928. Proc. Zool. Soc. London 1928: page 1019
  40. Procter, J. B. 1928–1929. Dragons that are alive to-day, in J. A. Hammerton (ed.), Wonders of Animal Life, page 35. Amalgamated Press, London. ASIN: B0014VT1WC.
  41. Murphy, James B., and T. Walsh. 2006. Dragons and Humans, Herpetological Review, 37(3): pp. 269–275. Society for the Study of Amphibians and Reptiles. Figure 5, page 270 reproduces the photograph from Joan Procter’s article. Available at http://zoohistory.co.uk/html/modules/Downloads/files/HRkomododragons.pdf[தொடர்பிழந்த இணைப்பு]
  42. Procter, J. B. 1928. On a living Komodo dragon Varanus komodoensis Ouwens, exhibited at the Scientific Meeting, 23 October 1928. Proc. Zool. Soc. London 1928: pp. 1017–1019
  43. Gray, Dulcie. 1999. About butterflies: An address given to the Linnean Society, 27 January 1998, Linnean, London, 15 – 1, January 1999, page 37
  44. Anon. 1923. Woman expert is given care of zoo reptiles: Miss Joan Procter appointed curator in London Zoo, The Woodville Republican, Woodville, Mississippi, 1 September. Available at https://news.google.com/newspapers
  45. Anon. 1927. Front page drawing of Joan Procter, Illustrated London News, London, Saturday 2 July 1927
  46. Anon. 1927. Charms snakes so visitors to zoo may see them better, The Reading Eagle, Reading, Pennsylvania, 11 September, p. 31. Available at https://news.google.com/newspapers
  47. Procter, J. B. 1928–1929. Dragons that are alive to-day, in J. A. Hammerton (ed.), Wonders of Animal Life. pp. 32–41. Amalgamated Press, London. ASIN: B0014VT1WC.
  48. University of Chicago. 1931. Certificate and letters about the Honorary DSC awarded by the Intercollegiate University of Chicago. Documents in Girton College Archive, Cambridge, UK. Ref. GCPP Procter 5/2/12 (former reference: MSS 7). Indexed with descriptive note at http://janus.lib.cam.ac.uk/db/node.xsp?id=EAD%2FGBR%2F0271%2FGCPP%20Procter%205%2F2%2F12
  49. Russell, Herbrand (Duke of Bedford). 23 November 1928. Personal letter to Joan Procter, in Girton College Archive, Cambridge. Ref. GCPP Procter 5/2 (Former reference MSS 7). Summary in index at http://janus.lib.cam.ac.uk/db/node.xsp?id=EAD%2FGBR%2F0271%2FGCPP%20Procter%205%2F2%2F3
  50. 50.0 50.1 Huxley, Elspeth. 1981. Whipsnade: Captive breeding for survival, page 49. Collins, London. ISBN 0900727837
  51. Street, P. 1953. Whipsnade, page 23. University of London Press, London. ASIN: B0000CILLF
  52. Barrington-Johnson, J. 2005. The Zoo – The Story of London Zoo, page 98. Robert Hale, London. ISBN 0709073720
  53. Johnston, Greg. 2004. Zoo-based conservation research around the world, page 16. The Winston Churchill Memorial Trust of Australia. Available at www.churchilltrust.com.au/res/.../Johnston%20Greg%202004.pdf
  54. Procter, J.B. 1928. Palmato gecko rangei Anderson. Zoological Society of London Library, Artwork, ART 10000651. Indexed at http://library.zsl.org/
  55. Bone, James. 1931. Letters dated 21 April, 23 April and 18 May to Joan Procter, in Girton College Archive, Cambridge. Ref. GCPP Procter 5/2 (Former reference MSS 7). Summarised and indexed at http://janus.lib.cam.ac.uk/db/node.xsp?id=EAD%2FGBR%2F0271%2FGCPP%20Procter%205%2F2%2F3
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோன்_பீசாம்ப்_பிராக்டர்&oldid=3524197" இலிருந்து மீள்விக்கப்பட்டது