ஜோப்ஸ் சோதனை

ஜோப்ஸ் சோதனை (ஆங்கிலம்:Jobe's test) என்பது எலும்பியல் துறையில் தோள்பட்டை மூட்டுகளின் நிலைத்தன்மையை ஆய்வு செய்யும் சோதனை ஆகும். இது இடம்பெயர்வு சோதனை என்றும் அழைக்கப்படுகிறது.

தேவை தொகு

இடது மற்றும் வலது தோள்பட்டைகளின் நிலைத்தன்மையை ஆராய்ந்து ஒப்பிடுதல் மூலம் தோள்பட்டையின் நிலை இல்லா தன்மையின் அளவை ஆய்வு செய்வதாகும்.[1]

வழிமுறை தொகு

நோயாளி மேசையின் மீது படுக்க வைக்க வேண்டும். நோயாளி தன் தோள்பட்டையை 90° அளவுக்கு பக்கவாட்டில் விரிக்க வேண்டும். முழங்கை 90° அளவுக்கு மடக்க வேண்டும். ஆய்வு செய்பவர் நோயாளியின் பின்புறம் நிற்க வேண்டும். இவர் நோயாளியின் மணிக்கட்டு மூட்டு மற்றும் கையை பிடித்து கொள்ள வேண்டும். ஆய்வாளரின் மற்றொரு கை மேற்கை எலும்பின் தலைப் பகுதியில் வைக்க வேண்டும்.[1][2] ஆய்வாளர் மேற்கை எலும்பு தலைப் பகுதியை பின்புறமாக செல்ல ஒரு விசையை கொடுத்து நோயாளியின் மேற்கையை வெளிப்புறமாக சுற்ற வேண்டும்.

முடிவுகள் தொகு

இந்த ஆய்வில் வலி இன்மை, பயமின்மை மற்றும் மூட்டு அசைவு அதிகமாக இருத்தல் என்றால் அது தோள்பட்டை மூட்டு நிலைத்தன்மை இல்லாமல் இருப்பதாகும்.[1][2][3] மூட்டின் முன்புற வலி என்றால் முன்புற மூட்டு சவ்வுகள் பலவீனமாக உள்ளதாகும். மூட்டின் பின்புற வலி என்றால் பின்புற மூட்டு சவ்வுகள் கிழிவு அல்லது பலவீனமாக உள்ளதாகும்.[2]

வரலாறு தொகு

கிரிஸ்டோபர் ஜோப் என்பவரால் தோள்பட்டை மூட்டு நிலைத்தன்மையை ஆராயும் சோதனை முறையை அறியப்பட்டது.[4]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 Special Test for Orthopedic Examination. SLACK Incorporated. 2006. 
  2. 2.0 2.1 2.2 Orthopedic and Athletic Injury Examination Handbook. F.A. Davis Company. 2015. https://archive.org/details/orthopedicathlet0000star. 
  3. "Clinical Examination". shoulderdoc.co.uk. பார்க்கப்பட்ட நாள் 2019-02-23.
  4. Burkhart, Stephen S.; Parten, Peter M (June 2001). "Dead Arm Syndrome: Torsional SLAP Lesions versus Internal Impingement". Techniques in Shoulder & Elbow Surgery 2 (2). http://journals.lww.com/shoulderelbowsurgery/Abstract/2001/06000/Dead_Arm_Syndrome__Torsional_SLAP_Lesions_versus.2.aspx. பார்த்த நாள்: 2019-02-23. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோப்ஸ்_சோதனை&oldid=3641319" இலிருந்து மீள்விக்கப்பட்டது