ஜோர்டைன் சமூகம்
ஜோர்டைன் சமூகம் (Jourdain Society) என்பது ஐக்கிய இராச்சியத்தைத் தளமாகக் கொண்ட ஒரு சர்ச்சைக்குரிய சமூகமாகும். இதன் நோக்கங்கள் 'ஓலஜி அறிவியலின் முன்னேற்றமும் பறவைகளின் முட்டைகளைச் சேகரித்தல் மற்றும் ஆய்வு செய்தலாகும். 1922ஆம் ஆண்டில் பிரித்தானிய ஓலாஜிக்கல் கழகம் நிறுவப்பட்டது. இது 1946ஆம் ஆண்டில் புகழ்பெற்ற பறவையியலாளர் மற்றும் உயிரியலாளர் ரெவரெண்ட் பிரான்சிஸ் ஜோர்டைனின் (1865-1940) நினைவாக இதன் பெயர் ஜோர்டைன் சமூகமாக மாறியது.[1][2][3] இச்சமூகத்தின் உறுப்பினர்கள் சமூகக் கூட்டமாகக் கூடி வழக்கமான விருந்துகளை நடத்தி வந்தனர். இக்கூட்டங்களில் பெண்கள் மற்றும் தொழில்முறை விற்பனையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.[4][5][6]
இவர்கள் பறவைகளில் கூடுகளில் உள்ள முட்டைகளை உள்ளவாறு சேகரித்துத் துளையிட்டு முட்டையின் உள்ளே உள்ள பொருட்களை உறிஞ்சி எடுத்து முட்டையின் ஓட்டினை அப்படியே பாதுகாப்பாக வைத்திருந்தனர். இது பத்தொன்பதாம் மற்றும் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஓய்வு நேரமாகக் கருதப்பட்டது. அக்காலத்தில் பாதுகாப்பு, ஆய்வு மற்றும் வேட்டை ஆகியவற்றின் எதிர் நடவடிக்கைகள் எதுவும் இல்லாமலிருந்தது. இருப்பினும், அரிய வகைப் பறவைகளின் முட்டைகளை எடுத்துக்கொள்வது அவற்றின் அழிவு மற்றும் ஆபத்துக்கு ஒரு முக்கிய காரணியாக அமையும் என்றும், இந்த நடவடிக்கைக்கு உண்மையான அறிவியல் மதிப்பு இல்லை என்றும் பாதுகாப்பாளர்கள் முடிவு செய்தனர், இதனைத் தொடர்ந்து முட்டைகளைச் சேகரிப்பது மிகவும் சர்ச்சைக்குரியதாக மாறியது.[7][8] ஆரம்பக்கால விமர்சனங்களால் புண்படுத்தப்பட்ட இவர்கள் ஜோர்டெய்ன் சமுதாயத்தைத் தொடர்ந்தனர்.[1]
1954ஆம் ஆண்டில், கூடுகளிலிருந்து புதிய முட்டைகள் சேகரிப்பது பறவைகள் பாதுகாப்புச் சட்டத்தால் சட்டவிரோதமானது.[9] இந்த சூழலில் பரவலாக முட்டை எடுப்பவர்கள் மற்றும் அவர்களின் வாடிக்கையாளர்களின் தகவல் பரிமாற்றமாகச் செயல்படும் என்று நம்பப்பட்டது.[10] முட்டைச் சேகரிப்பவர்கள் அமைப்பின் உறுப்பினர்கள் கண்காணிக்கப்பட்டனர். இவர்கள் மீது பல முறை போலீசார் தாக்குதல் நடத்தினர். 1994ஆம் ஆண்டு இச்சமூக இரவு விருந்தின்போது சலீஸ்பரியில் ஆறு உறுப்பினர்கள் மீது தாக்குதலுடன் தொடர்புப்படுத்தி குற்றம் சாட்டப்பட்டனர்.[11][12][13] சேவை நிறுவனமாகக் கருதப்பட்ட இந்த அமைப்பின் மீதான பார்வை நிறுத்தப்பட்டது.[14]
1994ஆம் ஆண்டில் இந்த சமூகம் குற்றம் சாட்டப்பட்ட உறுப்பினர்களை வெளியேற்றியது என்றும் 1998ஆம் ஆண்டில் சமூகம் "இனப்பெருக்கம் பழக்கத்தை கவனமாக கண்காணிக்கும் முதல் தரப் புலம் இயற்கை ஆர்வலர்களால் ஆனது” என்று தெரிவிக்கப்பட்டது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Rubenstein, Julian. "Operation Easter". The New Yorker. பார்க்கப்பட்ட நாள் 23 March 2016.
- ↑ Gosler, Andrew. "Yet Even More Ways To Dress Eggs" (PDF). British Birds. பார்க்கப்பட்ட நாள் 23 March 2016.
- ↑ "Legal Eagle January 2000" (PDF). RSPB. Archived from the original (PDF) on 30 அக்டோபர் 2015. பார்க்கப்பட்ட நாள் 23 March 2016.
- ↑ Gwyther, Matthew (2012). "Eagle Eyes on the Egg Thieves (1998)". In Moss, Stephen (ed.). The Hedgerows Heaped with May: The Telegraph Book of the Countryside. London: Aurum Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781781311011. பார்க்கப்பட்ட நாள் 23 March 2016.
- ↑ John Lister-Kaye (5 March 2015). Gods of the Morning: A Bird's Eye View of a Highland Year. Canongate Books. pp. 145–9. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-78211-416-1.
- ↑ Cole, Edward. "Handle with care: historical geographies and difficult cultural legacies of egg-collecting" (PDF). University of Glasgow (PhD thesis). பார்க்கப்பட்ட நாள் 16 December 2020.
- ↑ "Oology: The criminal history of the fanatical egg collectors". பிபிசி. பார்க்கப்பட்ட நாள் 23 March 2016.
- ↑ David Callahan (14 August 2014). A History of Birdwatching in 100 Objects. A&C Black. pp. 90–1. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4081-8665-7.
- ↑ "Protection of Birds Act 1954". Legislation.gov.uk. Gov.uk. பார்க்கப்பட்ட நாள் 23 March 2016.
- ↑ "Empty Nests (1995)". ITN News. பார்க்கப்பட்ட நாள் 23 March 2016.
"Empty Nests" reports on members of the Jourdain Society, a bird conservation charity, and the illegal snatching of eggs from bird's nests.
- ↑ Braid, Mary. "Egg society denies aiding nest thefts: An obscure group named after a Victorian clergyman is accused of acting as a front for illegal collectors who damage rare species". The Independent. பார்க்கப்பட்ட நாள் 23 March 2016.
- ↑ Ratcliffe, Roger. "Forbidden passions, death and birds eggs". Yorkshire Post. பார்க்கப்பட்ட நாள் 23 March 2016.
- ↑ "Not Birdwatching, bird(crime)watching! (1996)". RSPB. பார்க்கப்பட்ட நாள் 23 March 2016.
And just in case you thought egg collecting had stopped, one of the results of the police raid on the annual meeting of the Jourdain Society was the conviction of John Maylin. He pleaded guilty to the possession of 314 Tree Pipit eggs and was fined £500 with £172 costs. The Jourdain Society is named after the distinguished Reverend who was an egg-collector when few people thought how anti-social it was. The Tree Pipit is a delightful little migrant bird currently declining in Britain. Most British birders will never have seen as many as 314 in their lives!
- ↑ Barkham, Patrick. "The egg snatchers". The Guardian. பார்க்கப்பட்ட நாள் 23 March 2016.