ஞானப்பான என்ற நூலை பூந்தானம் என்பவர் எழுதினார். இவர் கேரளத்தின் மலப்புறம் மாவட்டத்தில் உள்ள பெரிந்தல்மண்ணைக்கு உட்பட்ட கீழாற்றூர் என்னும் ஊரில் பிறந்தார். பூந்தானம் என்பது அவரின் குலப் பெயர் ஆகும். இவர் பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். நீண்ட காலம் கழித்து பிறந்த குழந்தையை இழக்க நேரிட்டபொழுது குருவாயூரப்பனை வேண்டி எழுதியதே ஞானப்பான என்னும் நூல். [1] இந்த நூல் எளிய மலையாள நடையில், சமசுகிருதம் கலக்காமல், உயர்ந்த தத்துவக் கருத்துகளை உள்ளடக்கியவாறு எழுதப்பட்டது. மேல்பத்தூர் நாராயண பட்டதிரி என்னும் புலவர் இந்த நூலில் இலக்கணப் பிழை இருப்பதாகக் குறை கூறியதாகவும், அதனால் இவர் வருந்தி குருவாயூரப்பனை வேண்டியதாகவும், பின்னர், குருவாயூரப்பன் அருளால் இருவரும் நண்பர்களாகினர் எனவும் செவிவழிக் கதைகள் உள்ளன. [2] இது 360 வரிகளைக் கொண்டது. மலையாளத்து பகவத் கீதை என்ற சிறப்புப் பெயரும் இதற்கு உண்டு. 46,660 பேர் கூடி இந்த நூலில் உள்ள பாடல்களைப் பாடியுள்ளனர். இது கின்னஸ் புத்தகத்தில் பதிவாகியிருக்கிறது. [3]

பூந்தானம் நம்பூதிரி

சில வரிகள் தொகு



சான்றுகள் தொகு

  1. "ஞானப்பான". Archived from the original on 2014-05-21. பார்க்கப்பட்ட நாள் 2014-06-21.
  2. தினமலர் செய்தி
  3. "ஞானப்பான சமூகபாராயணம் கின்னஸ் புக்கில்" (in மலையாளம்) (செய்தித்தாள்). மலையாள மனோரமா. 19 ஜூன் 2014 இம் மூலத்தில் இருந்து 2014-06-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140619075017/http://www.manoramaonline.com/cgi-bin/MMOnline.dll/portal/ep/malayalamContentView.do?contentId=17044795&tabId=9&BVID=%E0%A5%B0%E0%A5%B0%E0%A5%B0. பார்த்த நாள்: 19 ஜூன் 2014. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஞானப்பான&oldid=3556389" இலிருந்து மீள்விக்கப்பட்டது