ஞா. குருசாமி


ஞா. குருசாமி விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வட்டத்தில் உள்ள அக்கனாபுரம் கிராமத்தில் 15.05.1983 இல் பிறந்தார். தைலாபுரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரையிலும், அதே ஊரில் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரையிலும் சுந்தரபாண்டியம் அரசு மேனிலைப்பள்ளியில் பதினொன்று, பன்னிரண்டாம் வகுப்பும் படித்தார். மதுரை செந்தமிழ்க் கல்லூரியில் 2005 ஆம் ஆண்டு இளம் இலக்கியம் (பி.லிட்) முடித்தார். மதுரைக் கல்லூரியில் 2007 ஆம் ஆண்டு முதுகலைத் தமிழ் (எம்.ஏ) முடித்தார். 2008 ஆம் ஆண்டு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இளமுனைவர் பட்டமும் 2014 ஆம் ஆண்டு முனைவர் பட்டமும் பெற்றார். 2012 ஆம் ஆண்டு முதல் மதுரை மாவட்டம், கருமாத்தூரில் உள்ள அருள் ஆனந்தர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார் [1],[சான்று தேவை]

நூல்கள்:

தொகு

தொல்காப்பியத்தில் பொருளியல் பெறும் இடம், தமிழ் இலக்கிய வரலாறு (பல புதிய குறிப்புகளுடன் 1970 முதல்)[1] அவதூறுகளும் புனிதப்படுத்தல்களும் - நீர் - நிலம் - சாதி - சாஸ்திரம், தமிழ் இலக்கணப் புறனடைகள் <ref>{{Cite web |url=https://www.youtube.com/watch?v=tUN9TjtYxxk |title=ஞா. குருசாமி எழுதிய 'தமிழ் இலக்கணப் புறனடைகள்' நூல் வெளியீட்டு விழா | மதுரை புத்தகத் திருவிழா - 2023 என்னும் நூல்களை எழுதியிருக்கிறார். இவரின் பல கட்டுரைகள் தமிழின் முன்னணி இதழ்களில் வெளிவந்துந்துள்ளன. இணையத்திலும் வாசிக்கக் கிடைக்கின்றன. தலித் இலக்கியம், தலித் அரசியல், தலித் பண்பாடு என்னும் ஓர்மையில் இயங்கும் இவர் இந்தியச் சமூகத்தில் சாதி உருவாக்கம் பற்றி ஆராய்ந்து வருகிறார். <ref>{{Cite web |url=https://theneelam.com/dalit-politics-of-dalit-autobiographical-novels-g-gurusamy-article/ தமிழக நாட்டார் வழக்காற்றில் பெளத்தக் கூறுகளை இனம் காண்பதிலும் ஆர்வங்கொண்டுச் செயல்பட்டு வருகிறார்.[சான்று தேவை]

மேற்கோள்கள்

தொகு
  1. பிட்டப்பா. "ஞா.குருசாமியின் தனித் தடமாகியிருக்கும் 'தமிழ் இலக்கிய வரலாறு'". www.keetru.com. பார்க்கப்பட்ட நாள் 2023-01-05.

2. https://theneelam.com/dalit-politics-of-dalit-autobiographical-novels-g-gurusamy-article/ 3. https://www.udumalai.com/tamil-elakkanap-puranadaigal.htm 4. https://www.hindutamil.in/news/opinion/columns/911336-reading.html 5. https://www.kalachuvadu.com/magazines/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81/issues/276/articles/10-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D 6. http://gurusamyaac.blogspot.com/ 7. https://www.youtube.com/watch?v=DP5x0KOk0JM 8. https://www.youtube.com/watch?v=IyIEIXUhlYg 9. https://theneelam.com/m-raghavayangars-article-on-castes-in-senthamil-magazine-and-reactions-to-it-j-guruswamy-article/ 10. https://www.hindutamil.in/news/opinion/columns/1133884-vallalar-200-completed.html 11. https://www.hindutamil.in/news/opinion/columns/1125715-caste-in-food.html 12. https://www.hindutamil.in/news/opinion/columns/1094403-scheduled-caste-panchayat-leaders-and-national-flag.html 13. https://www.hindutamil.in/news/opinion/columns/936214-mangalappanars-are-singers.html

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஞா._குருசாமி&oldid=3815335" இலிருந்து மீள்விக்கப்பட்டது