டவுன் பஸ்

1955ல் வெளியான இந்தியத் திரைப்படம்

டவுன் பஸ் (Town Bus) என்பது 1955 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ் நகைச்சுவைக் காதல் திரைப்படமாகும். கே. சோமு இயக்கிய இப்படத்தை எம். ஏ. வேணு தயாரித்தார். இந்தப் படத்தின் திரைக்கதை, உரையாடலை ஏ. பி. நாகராஜன் எழுதினார். கே. வி. மகாதேவன் இசையமைத்தார். இத்திரைப்படத்தில் என். என். கண்ணப்பா, ஏ. கருணாநிதி மற்றும் பலரும் நடித்திருந்தனர். படத்தின் கதை கோயம்புத்தூரில் உள்ள ஒரு பேருந்து நிறுவனத்தின் பின்னணியில் எழுதப்பட்டது. 1955 நவம்பர் 13 அன்று வெளியான இந்தப் படம், வசூல் ஈட்டியது.

டவுன் பஸ்
இயக்கம்கே. சோமு
தயாரிப்புஎம். ஏ. வேணு
எம். ஏ. வி. பிக்சர்ஸ்
கதைகதை ஏ. பி. நாகராஜன்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஎன். என். கண்ணப்பா
ஏ. கருணாநிதி
டி. கே. ராமச்சந்திரன்
வி. கே. ராமசாமி
அஞ்சலி தேவி
டி. ஆர். முத்துலட்சுமி
எம். என். ராஜம்
தாம்பரம் லலிதா
வெளியீடுநவம்பர் 13, 1955
ஓட்டம்.
நீளம்16172 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நாயகன் வேலு, (கண்ணப்பா) கோயமுத்தூரில் உள்ள ஒரு பேருந்தில் ஓட்டுநரா உள்ளார். அதே பேருந்தில் அமுதா (அஞ்சலிதேவி) நடத்துநராக உள்ளார். ஒரு கட்டத்தில் வேலுவும், அமுதாவும் காதலிக்கின்றனர். அதேசமயம் பேருந்து உரிமையாளரின் மகள் (தாம்பரம் லலிதா) வேலுவைக் காதலிக்கிறாள். ஆனால் அவளுடைய தந்தை, நிறுவனத்தின் மேலாளராக இருக்கும் உறவினரான இராமுவை(டி. கே. இராமச்சந்திரன்) திருமணம் செய்துவிக்க விரும்புகிறார். இராமு பணத்தாசை பிடித்தவன், பெண் மோகம் கொண்டவன்.

வேலுவின் நண்பர் மன்னாரு, பூங்கவம் என்ற மற்றொரு பெண் நடத்துனரை காதலிக்கிறார். மேலாளர் இரு ஓட்டுநர்களையும் பணிநீக்கம் செய்கிறார். அதன் பிறகு வேலு ஒரு ரிக்‌சா ஓட்டுநராக ஆகிறான். விரைவில் அவன் சொந்த நிறுவனத்தை துவக்கி குறுகிய காலத்தில் வெற்றியடைகிறான். அமுதாவை மணந்து, ஒரு குழந்தைக்கு தந்தையாகிறான். பணம் வந்தபிறகு வேலு பாதை மாறுகிறான். அவனுக்கு பங்கஜம் (எம். என். ராஜம்) என்ற நடனக்காரியுடன் தொடர்பு ஏற்படுகிறது.

பங்கஜத்துடன் தன் கணவனுக்கு உள்ள தொடர்பு குறித்து அமுதாவுக்கு தெரிகிறது. இதனால் குடும்பத்தில் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. இவை எல்லாம் எப்படி சரியாகின்றன என்பதே கதை.

நடிப்பு

தொகு

நடிகர்கள்[1]

நடிகைகள்[1]

தயாரிப்பு

தொகு

டவுன் பஸ் படத்தை கே. சோமு இயக்கினார், எம். ஏ. வி. பிக்சர்ஸ் பதாகையில் எம். ஏ. வேணு தயாரித்தார்.[2] இந்தப் படத்துக்கான திரைக்கதை உரையாடலை ஏ. பி. நாகராஜன் எழுதினார்.[3] வி. கே. கோபால் ஒளிப்பதிவு செய்தார். படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் கோயம்புத்தூரில் நடந்தது.[2]

இப்படத்திற்கு கே. வி. மகாதேவன் இசையமைத்தார். பாடல் வரிகளை கா. மு. ஷெரீப் எழுதினார்.[1][4] "சிட்டுக்குருவி சிட்டுக்குருவி" (அஞ்சலிதேவி பாடுவதாக) போன்ற பாடல்களும், "லேடா லேடி அருகினில் வாடா ஆடிப் பாடலாம்" என்ற நடனமும் பிரபலமடைந்தன.[2]

பாடல் பாடகர் நீளம்
"சிட்டுக்குருவி சிட்டுக்குருவி" (மகிழ்ச்சி) எம். எஸ். ராஜேஸ்வரி 02:21
"சிட்டுக்குருவி சிட்டுக்குருவி" (சோகம்) எம். எஸ். ராஜேஸ்வரி 03:11
"சிட்டுக்குருவி சிட்டுக்குருவி" (துண்டு) எம். எஸ். ராஜேஸ்வரி 00:46
"லேடா லேடி அருகினில்" எஸ். சி. கிருஷ்ணன், சீர்காழி கோவிந்தராஜன், யு. ஆர். சந்திரா 03:09
"வடக்கத்தி கள்ளனடா.... தில்லாலங்கா தில்லாலங்கா" டி. எம். சௌந்தரராஜன் 01:10
"பொன்னான வாழ்வு மண்ணாகி போமா" திருச்சி லோகநாதன், எம். எஸ். ராஜேஸ்வரி, ராதா ஜெயலட்சுமி 05:46
"பணம் படைத்த செல்வர் முதல்"
"உத்தமரை....தோற்றத்தைக் கண்டும்" டி. எம். சௌந்தரராஜன் 02:53
"Nenjam Urugudhe" ராதா ஜெயலட்சுமி 03:11
"பூங்கவனமே நீ புரிஞ்சி" எஸ். சி. கிருஷ்ணன், யு. ஆர். சந்திரா

வெளியீடும் வரவேற்பும்

தொகு

டவுன் பஸ் 1955 நவம்பர் 13 அன்று வெளியானது.[5] இந்தியன் எக்ஸ்பிரசின் விமர்சனத்தில், "அஞ்சலி தேவி எந்த வகையான வேடத்திற்கும் ஏற்றவராகத் தோன்றுகிறார், மேலும் அவர் ஒரு பேருந்து நடத்துநராக உண்மையிலேயே குறிப்பிடத்தக்க நபராக தோன்றுகிறார்" என்றது.[6] வரலாற்றாசிரியர் ராண்டார் கையின் கூற்றுப்படி, இந்த படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றது, இதன் வெற்றிக்கு இசை ஒரு முக்கிய காரணமாக இருந்தது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 டவுன் பஸ் (PDF) (song book). M. A. V. Pictures. 1955. Retrieved 5 October 2022 – via Internet Archive.
  2. 2.0 2.1 2.2 2.3 Randor Guy (18 August 2012). "Blast from the Past: Town Bus 1953". The Hindu இம் மூலத்தில் இருந்து 14 January 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170114134226/http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/town-bus-1953/article3793478.ece. 
  3. Mohan Raman (14 April 2012). "Master of mythological cinema". தி இந்து இம் மூலத்தில் இருந்து 23 May 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130523032809/http://www.thehindu.com/features/cinema/master-of-mythological-cinema/article3314719.ece. 
  4. "Town Bus". JioSaavn. 31 December 1955. Archived from the original on 5 October 2022. Retrieved 5 October 2022.
  5. "1955 – டவுன்பஸ் – எம்.ஏ.வி.பிக்சர்ஸ்" [1955 – Town Bus – M.A.V. Pictures]. Lakshman Sruthi (in Tamil). Archived from the original on 19 April 2018. Retrieved 19 April 2018.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  6. "Town Bus". The Indian Express: pp. 8. 25 November 1955. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19551125&printsec=frontpage&hl=en. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=டவுன்_பஸ்&oldid=4256851" இலிருந்து மீள்விக்கப்பட்டது