டார்வினியசு மசில்லே

டார்வினியசு மசில்லே
Darwinius masillae
புதைப்படிவ காலம்:இயோசீன், 47 Ma
Slab (specimen PMO 214.214) and counter-slab (specimen WDC-MG-210 reversed for comparison) of the Darwinius masillae holotype fossil
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்குகள்
தொகுதி: முதுகெலும்பிகள்
வகுப்பு: பாலூட்டிகள்
வரிசை: முதனிகள்
குடும்பம்: Notharctidae
துணைக்குடும்பம்: Cercamoniinae
பேரினம்: டார்வினியசு
இனம்: டா. மசில்லே
D. masillae
இருசொற் பெயரீடு
டார்வினியசு மசில்லே
Darwinius masillae

ஃவிரான்சென் முதலானோர், 2009
Franzen et al., 2009

டார்வினியசு மசில்லே என்பது முதனிகள் வரிசையில் 47 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இருந்த இயோசீன் ஊழிக் காலத்தில் வாழ்ந்திருந்த தொல் அடிக்கிளை (basal, stem group) இனம். இவ் விலங்கின் தொல்லுயிர் எச்சப் படிவை 2009 ஆம் ஆண்டு பெயர் சூட்டினர். 2009 ஆண்டு சார்லசு டார்வினின் 200 ஆவது பிறந்த ஆண்டு நிறைவு என்பதால் அவர் பெயரைச் சூட்டியும், செருமனியில், மெசெல் குழி (Messel Pit) என்னும் இடத்தில் கண்டு பிடிக்கப்பட்டதால், அதனையும் சேர்த்து இதன் அறிவியற் பெயர் டார்வினியசு மசில்லே என சூட்டப்பட்டது. இவ்விலங்கின் தொல்லுயிர் எச்சம் ஒன்றே ஒன்று மட்டும்தான் கண்டுபிடிக்கப்பட்டது. 1983 இல் கண்டு பிடித்த இத் தொல்லுயிர் எச்சம்மிகவும் நல்ல நிலையில் இருக்கின்றது. இதனை இடா அல்லது ஐடா (Ida) என பெயரிட்டு அழைக்கிறார்கள்[1]. இத் தொல்லுயிர் எச்சத்தின் பகுதிகள் விற்கப்பட்டு இருந்ததன. இவற்றை 2006 இல்தான் மீண்டும் பொருத்தி முழு உரு ஆக்கினார்கள்.

தொல்லுயிர் எச்சத்தின் புதிர்க்கதிர் அல்லது X-கதிர் படம்

மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும் தொகு

  1. "Deal in Hamburg bar led scientist to Ida fossil, the 'eighth wonder of the world'". The Guardian. May 20, 2009. பார்க்கப்பட்ட நாள் 2009-05-20.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=டார்வினியசு_மசில்லே&oldid=3539166" இலிருந்து மீள்விக்கப்பட்டது