அமிழ் தண்டூர்தி
அமிழ் தண்டூர்தி (அல்லது டிராம், Tram) எனப்படுபவை சாதாரண நகர வீதிகளில், ஏனைய போக்குவரத்து வாகனங்களுடன் இணைந்து இயங்கும் பொது போக்குவரத்துச் சேவைகளில் ஒன்றாகும். இவை வீதியில் அமிழ்ந்துள்ள தண்டவாளங்களில் இயக்குவிக்கப்படும். இவை தொடர்வண்டிகள், இலகு தொடருந்துகள் என்பவற்றைவிட ஆற்றல், வேகம் குறைந்தவையாக இருக்கும்.
துவக்கம் தொகு
சென்னையில் இந்த வாகன சேவை 1895ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம் தேதி துவக்கி வைக்கப்பட்டது.[1]
படங்கள் தொகு
-
வியன்னாவில் இயங்கும் அமிழ் தண்டூர்தி சேவை. உலகின் மிகப்பெரிய வலையமைப்பாக உள்ளது
-
பின்லாந்து ஹெல்சின்கி நகரில் உள்ள அமிழ் தண்டூர்தி சேவை
-
இந்தியாவில் கல்கத்தாவில் பண்டைய காலத்தில் இருந்த குதிரையால் இழுக்கப்படும் அமிழ் தண்டூர்தி
-
குயின்ஸ்லாந்தில் ரொக்ஹம்ப்டன் இல் நீராவியில் இயங்கிய அமிழ் தண்டூர்தி. வாகனத்தின் முன் பகுதியில் நீராவியை உருவாக்கத் தேவையான கொதிகலனைக் காணலாம்