மும்மெத்தில் ஆர்த்தோபார்மேட்டு

(டிரைமீத்தைல் ஆர்த்தோபார்மேட்டு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மும்மெத்தில் ஆர்த்தோபார்மேட்டு ( Trimethyl orthoformate ) என்பது ஒரு எளிய ஆர்த்தோயெசுத்தர் ஆகும். கரிமத் தொகுப்பு வினைகளில் இது முகவராக பயன்படுத்தப்படுகிறது. இவ்வகைக் கரிமத் தொகுப்பு வினையில் இச்சேர்மம் ஆல்டிகைடுகளுக்குரிய பாதுகாப்பு குழுவை அறிமுகம் செய்கிறது. ஆல்டிகைடும் மும்மெத்தில் ஆர்த்தோபார்மேட்டும் வினைபுரிவதால் அசிட்டால் விளைகிறது. பொதுவான வினைகளில் இந்த அசிட்டால்களை தொடர்ந்து அசிட்டால்களாகவே பாதுகாக்காமல் ஐதரோகுளோரிக் அமிலத்தைப் பயன்படுத்தி மீண்டும் ஆல்டிகைடுகளாக மாற்றிக்கொள்ள இயலும்.

மும்மெத்தில் ஆர்த்தோபார்மேட்டு[1]
Ball-and-stick model
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
டிரைமீத்தாக்சிமீத்தேன்
வேறு பெயர்கள்
2-மீத்தாக்சிஅசிட்டால்டிகைடு டைமீத்தைல் அசிட்டால்; மீத்தாக்சிமீத்தைலால்; மீத்தைல் ஆர்த்தோபார்மேட்டு
இனங்காட்டிகள்
149-73-5 N
ChemSpider 8655
InChI
  • InChI=1S/C4H10O3/c1-5-4(6-2)7-3/h4H,1-3H3
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 9005
SMILES
  • O(C)C(OC)OC
தீங்குகள்
R-சொற்றொடர்கள் R11 R36
S-சொற்றொடர்கள் S9 S16 S26
தீப்பற்றும் வெப்பநிலை 13 °C (55 °F; 286 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

ஐதரசன் சயனைடு மற்றும் மெத்தனால் வினைபுரிவதன் மூலம் மும்மெத்தில் ஆர்த்தோபார்மேட்டு தயாரிக்கும் தொகுப்பு முறை தொழிற் சாலைகளில் பின்பற்றப்படுகிறது[2].

மீத்தாக்சிமெத்திலீன் தொகுதிகளை உருவாக்கும் பயனுள்ள அடிப்படைப் பொருளாகவும் பல்லினவகை வளையங்களை உருவாக்கவும் மும்மெத்தில் ஆர்த்தோபார்மேட் பயனுள்ளதாக உள்ளது. மின்னணு அடிமூலக்கூறுடன் ஒரு பார்மைல் தொகுதியை அறிமுகப்படுத்தவும் இச்சேர்மம் உபயோகமாகிறது. உதாரணமாகப் பல தொடர்வினைகளில் பங்கேற்கும் R-NH-CHO என்ற ஆல்டிகைடு உருவாக RNH2 வை அறிமுகப்படுத்துகிறது. பூசணக்கொல்லிகள் அசோசைசிடிரோபின் மற்றும் பைகோசிடிரோபின், சிலவகை புளோஆக்சின் வகை பாக்டீரியா எதிர்ப்பு மருந்துகள், பலவகை மருந்துவகை இடைநிலைப் பொருட்கள் தயாரிக்கவும் மும்மெத்தில் ஆர்த்தோபார்மேட் உதவுகிறது[2].

மேற்கோள்கள் தொகு

  1. Trimethyl orthoformate at Sigma-Aldrich
  2. 2.0 2.1 Ashford's Dictionary of Industrial Chemicals, Third edition, 2011, ISBN 978-0-9522674-3-0, page 9388

இவற்றையும் காண்க தொகு

பின்னெர் வினை