டி.ஐ.
டி.ஐ. (T.I.), பிறப்பு க்லிஃபர்ட் ஜோசஃப் ஹாரிஸ் ஜூனியர் (Clifford Joseph Harris, Jr., செப்டம்பர் 25, 1980) ஓர் அமெரிக்க ராப் இசைக் கலைஞர் ஆவார்.[1][2][3]
T.I. டி.ஐ. | |
---|---|
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | க்லிஃபர்ட் ஜோசஃப் ஹாரிஸ் ஜூனியர் |
பிற பெயர்கள் | டி.ஐ.பி. |
பிறப்பு | செப்டம்பர் 25, 1980 |
பிறப்பிடம் | அட்லான்டா, ஜோர்ஜியா, ஐக்கிய அமெரிக்கா |
இசை வடிவங்கள் | ராப் இசை |
தொழில்(கள்) | ராப்பர், இசையமைப்பாளர், நடிகர், தொழிலதிபர் |
இசைத்துறையில் | 2001–இன்று |
வெளியீட்டு நிறுவனங்கள் | கிராண்ட் ஹசில் ரெக்கர்ட்ஸ்/அட்லான்டிக் |
இணையதளம் | TrapMuzik.com |
அட்லான்டாவின் பேங்க்ஹெட் பகுதியில் பிறந்து வளந்த டி.ஐ. 2001இல் முதலாம் இசைத்தொகுப்பு "ஐம் சீரியஸ்" (I'm Serious) வெளியிட்டுள்ளார். இந்த இசைத்தொகுப்பு சரியாக விற்பனை செய்யப்படாமல் அப்பொழுது இருந்த இசை தயாரிப்பு நிறுவனம் அரிஸ்டா ரெக்கர்ட்ஸை விட்டு கிராண்ட் ஹசில் ரெக்கர்ஸ் நிறுவனத்தை உருவாக்கினார். இன்று வரை இந்நிறுவனத்தின் அதிபராக இருக்கிறார்.
2003இல் இவரின் இரண்டாம் இசைத்தொகுப்பு ட்ராப் மியூசிக் "Trap Muzik" வெளிவந்து ராப் உலகில் புகழுக்கு வந்தார். இதற்கு பிறகு இன்னும் நான்கு இசைத்தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.
ராப் இசை தவிர திரைப்பட உலகிலும் 2006இல் நுழைந்தார். ஏடிஎல், அமெரிக்கன் கேங்ஸ்டர் போன்ற திரைப்படங்களில் இன்று வரை நடித்துள்ளார். 2008இல் கிராண்ட் ஹசில் ஃபில்ம்ஸ் என்ற தனி திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கினார்.
டி.ஐ. 7 முறையாக பெருங் குற்ற வழக்குகளில் குற்றவாளி என்று தீர்ப்பு கூறப்பட்டுள்ளார். 2007இல் சட்டவிறோதமாக துப்பாக்கிகளை வாங்கியது காரணமாக ஒரு ஆண்டுக்கு சிறையில் இருக்கனும் என்று தீர்ப்பு செய்யப்பட்டார்.
இசைதொகுப்புகள்
தொகு- ஐம் சீரியஸ் (I'm Serious) (2001)
- ட்ராப் மியூசிக் (Trap Muzik) (2003)
- அர்பன் லெஜென்ட் (Urban Legend) (2004)
- கிங் (King) (2006)
- T.I. vs. T.I.P. (T.I. vs. T.I.P.) (2007)
- பேப்பர் டிரெய்ல் (Paper Trail) (2008)
மேற்கோள்கள்
தொகு- ↑ "T.I." AllMusic. பார்க்கப்பட்ட நாள் April 19, 2017.
- ↑ "Jason Geter Interview: On Managing T.I. & Career Journey – DJBooth". Djbooth. February 13, 2020. https://djbooth.net/features/2020-02-13-jason-geter-interview-ti-manager-heavy-sound-labs.
- ↑ Lee, Christina (August 13, 2015). "Trap kings: how the hip-hop sub-genre dominated the decade". The Guardian. https://www.theguardian.com/music/2015/aug/13/trap-kings-how-hip-hop-sub-genre-dominated-decade.