டி. எம். நல்லசாமி
தோட்டக்குறிச்சி முத்துசாமி நல்லசாமி (Thottakurichi Muthuswamy Nallaswamy) (2 செப்டம்பர் 1924 - 30 செப்டம்பர் 2005) டி. எம். என் என்று அழைக்கப்படுபவர் ஒரு இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்றத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். முன்னதாக சென்னை மாகாண சட்டமன்றம் என்றும் பின்னர் தமிழ்நாடு சட்டப்பேரவை என அழைக்கப்பட்டு வரும் மன்றத்தின் இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது சட்டப்பேரவைகளுக்கு இந்திய தேசிய காங்கிரசு சார்பில் கரூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் போட்டியிட்டு வென்ற தேர்தல்களாவன: 1957, 1962 and 1967 ஆகியவை ஆகும்.[1]
1950கள் மற்றும் 1960களில் கரூர் தொகுதியில் பல விவசாய நீர்ப்பாசனம் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்தியதற்காகவும், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் முதன்முறையாக ஏராளமான அரசுப் பள்ளிகளை நிறுவுவதற்கான அனுமதியைப் பெற்றதற்காகவும் டிஎம்என் நினைவுகூரப்படுகிறார். இவர் தனது தொகுதியின் விவசாய வளர்ச்சியில் பெரும் முன்முயற்சியை மேற்கொண்டார், விவசாயிகளின் நலனுக்கான முன் முயற்சிகளே இவரது பொது வாழ்வின் முக்கிய நோக்கமாக இருந்தது.
தொடக்க கால வாழ்க்கை
தொகுநல்லசுவாமி 1924 ஆம் ஆண்டு இந்தியாவின் தமிழ்நாடு, கரூர் அருகே உள்ள தோட்டக்குறிச்சி கிராமத்தில் (அப்போதைய மெட்ராஸ் மாகாணம்) ஒரு விவசாய குடும்பத்தில் எம். முத்துசாமி கவுண்டர் மற்றும் மனைவி ராசாயி அம்மாள் ஆகியோருக்கு இரண்டாவது குழந்தையாக பிறந்தார். இவரது தந்தை வழி தாத்தா மலையண்ண கவுண்டர் ஆவார். 1940 ஆம் ஆண்டில் கரூரில் உள்ள நகர்மன்ற உயர்நிலைப் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார், பின்னர் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் சேர்ந்து படித்த இவர் தனது படிப்பை குடும்ப சூழ்நிலையால் முடிக்க முடியாமல் திருச்சிக்கு சென்றார்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ - சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1957
- சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962
- சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967 - ↑ Fact confirmed by T.N.Sivadevan the eldest son of T.M.Nallaswamy