டி. கீனாகுமாரி

இந்திய அரசியல்வாதி

டி. கீனாகுமாரி (T. Geenakumari) என்பவர் ஒரு வழக்கறிஞரும், ஓர் அரசியல்வாதியும் மற்றும் ஒரு எழுத்தாளரும் ஆவார். இதன் காரணமாக இவர் ஒரு பன்முக ஆளுமையாக அறியப்படுகிறார். இவர் கேரள மாநிலத்தின் பெண்ணிய இயக்கத்தின் வளர்ச்சிக்காக சிறப்பாக செயலாற்றினார். மாணவர் இயக்கம் வழியாக சமூகத் துறையில் தீவிரமாகச் செயல்பட்டார்[1]

டி. கீனாகுமாரி
അഡ്വ. ടി. ഗീനാകുമാരി
முன்னாள் தலைவர் கேரளா பல்கலைக்கழகம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு21 மே 1975 (1975-05-21) (அகவை 49)
கல்லாரா, திருவனந்தபுரம் மாவட்டம் , கேரளா
அரசியல் கட்சிஇந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)

வாழ்க்கை மற்றும் கல்வி

தொகு

குமாரி 1975 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி தங்கப்பன் மற்றும் இந்திரா தம்பதியர்களுக்கு மகளாக பிறந்தார். தன் இளங்கலை பட்டப் படிப்பை என்.எசு.எசு. நிலமெல் கல்லூரியில் முடித்தார். மேலும், திருவனந்தபுரத்தில் உள்ள சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார். கொச்சி யில் உள்ள தேசிய சட்ட பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்[2].

அரசியல் வாழ்க்கை

தொகு

இந்திய மாணவர் சங்கத்தின் இணை செயலாளர், மாநில துணைத் தலைவர் ஆகிய பொறுப்புகளில் இருந்தார். மேலும், மத்திய குழு உறுப்பினராகவும் கேரள பல்கலைக் கழகத்தின் தொழிற்சங்கத் தலைவராகவும் பணியாற்றினார்[2]

மேற்கோள்கள்

தொகு

புற இணைப்புகள்

தொகு
  • "498 എ വകുപ്പിനെ ആർക്കാണ് പേടി ?" (in ml). Deshabhimani. http://www.deshabhimani.com/women/news-women-14-02-2018/705721. 
  • "പെൺനീതിക്ക് എളുപ്പവഴികളില്ല". Madhyamam (in மலையாளம்). பார்க்கப்பட்ட நாள் 2018-03-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._கீனாகுமாரி&oldid=3214503" இலிருந்து மீள்விக்கப்பட்டது