டி. டி. வி. தினகரன்

இந்திய அரசியல்வாதி

டி. டி. வி. தினகரன் (T. T. V. Dhinakaran,பிறப்பு: 13 திசம்பர், 1963) தமிழ்நாட்டு அரசியல்வாதியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னாள் பொருளாளரும் ஆவார்.[5] இவர் வி. கே. சசிகலாவின் மறைந்த அக்காளான வனிதாமணியின் மூன்று மகன்களில் மூத்தவர் ஆவார்.[6][7]

டி.டி.வி.தினகரன்
தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்[1]
பதவியில்
24 டிசம்பர் 2017 – 06 மே 2021
முன்னவர் ஜெ. ஜெயலலிதா
பின்வந்தவர் ஜே. ஜே. எபினேசர்
தொகுதி ஆர்.கே.நகர்
இந்திய மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில்
2004–2010
தொகுதி தமிழ்நாடு
இந்திய மக்களவை உறுப்பினர்[2]
பதவியில்
1999–2004
முன்னவர் சேடபட்டி இரா. முத்தையா
பின்வந்தவர் ஜே. எம். ஆரூண்ரஷீத்
தொகுதி பெரியகுளம்
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர்
பதவியில்
20 ஜூலை 2006 – 28 ஆகத்து 2007
நியமித்தவர் ஜெ. ஜெயலலிதா
முன்னவர் திண்டுக்கல் சீனிவாசன்
பின்வந்தவர் ஓ. பன்னீர்செல்வம்
தனிநபர் தகவல்
பிறப்பு 13 திசம்பர் 1963 (1963-12-13) (அகவை 59)
திருத்துறைப்பூண்டி, திருவாரூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
அரசியல் கட்சி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (2018 முதல்)
பிற அரசியல்
சார்புகள்
அஇஅதிமுக (2017 வரை)

சுயேச்சை (2017-2018)

வாழ்க்கை துணைவர்(கள்) அனுராதா
பிள்ளைகள் ஜெயஹரினி[3]
இருப்பிடம் அடையாறு, சென்னை, தமிழ்நாடு, இந்தியா[4]
பணி அரசியல்வாதி

டி. டி. வி. தினகரன் 1999 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலில், இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கு (1999–2004) பெரியகுளம் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். பின்னர் 2004- (2004–2010)இல் இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[8] அன்னியச் செலாவணி வழக்கில் தான் சிங்கப்பூர் நாட்டின் குடிமகன் என தினகரன் அறிவித்தார்.[9]

ஜெயலலிதாவால், டிசம்பர் 2011-இல் டி. டி. வி. தினகரன் உள்ளிட்ட வி. கே. சசிகலாவின் 12 குடும்ப உறுப்பினர்கள் நிரந்தரமாக விலக்கி வைக்கப்பட்டனர்.[10] பிறகு மன்னிப்பு கடிதம் கொடுத்ததால் சசிகலாவை மட்டும் ஜெயலலிதா சேர்த்துக்கொண்டார்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இடைக்கால பொதுச்செயலாளாராகப் பதவி ஏற்றுக் கொண்ட வி. கே. சசிகலா, டி. டி. வி. தினகரனை, பிப்ரவரி 2017-இல் துணைப் பொதுச் செயலாளராக நியமித்தார்.[11][12]

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் தமிழ்நாட்டில் அதிமுகவின் எடப்பாடி க. பழனிசாமி தலைமையிலான அரசை 18 பிப்ரவரி 2017-இல் சட்டமன்றத்தில் வெற்றி பெறச் செய்ததில் டி. டி. வி. தினகரன் பெரும்பங்காற்றியவர். இராதா கிருட்டிணன் நகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக (அம்மா) அணியின் வேட்பாளராக போட்டியிட்டார்.[13] இத்தொகுதி வாக்காளர்களுக்கு பணம் பட்டுவடா செய்ததாக எழுந்த புகாரில், இந்தியத் தேர்தல் ஆணையம் இத்தொகுதியின் இடைத்தேர்தலை ரத்து செய்தது.[14]

23.11.17 அன்று தேர்தல் ஆணையம் வெளியிட்ட தீர்ப்பின் அடிப்படையில் அஇஅதிமுக கட்சி மற்றும் இரட்டை இலை சின்னம் இவரிடம் இருந்தது பரிக்கப்பட்டது அதில் இருந்து இது வரை சின்னம் இல்லாத கட்சி தலைவராக இருந்து வருகிறார்.[15]

21 திசம்பர், 2017 அன்று நடைபெற்ற டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு 89,063 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.[16]

பின்பு மார்ச்சு 15, 2018 அன்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்னும் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார். அதிமுக மற்றும் இரட்டை இலைச் சின்னம் மீட்கப்படும் வரை தனக்கென ஒரு அடையாளம் வேண்டும் என்பதால் இக்கட்சியைத் தொடங்கினேன் என்று கூறினார்.[17]

வழக்குகள்

1996-ஆம் ஆண்டில் இவர் மீதான அந்நிய செலாவனி மோசடி வழக்கில் 2016-இல் அமலாக்கத் துறை 28 கோடி ரூபாய் அபராதம் விதித்தது.[18][19]

செயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் ஐந்தாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட டி. டி. வி. தினகரன் பின்னர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.[20]

முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தைத் தங்கள் அணிக்குப் பெறத் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்குக் கையூட்டு கொடுக்க முயன்றார் என தில்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.[21] பின்பு போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

மேற்கோள்கள்

 1. "Dhinakaran wins RK Nagar bypoll, creates history in Tamil Nadu". Pradeep Kumar (தி டைம்ஸ் ஆஃப் இந்தியா). 24 December 2017. https://timesofindia.indiatimes.com/city/chennai/rk-nagar-byelection-dhinakaran-wins-rk-nagar-bypoll-creates-history-in-tamil-nadu/articleshow/62231256.cms. பார்த்த நாள்: 24 December 2017. 
 2. "Dhinakaran, Shri T. T. V. Lok Sabha Profile". மக்களவை (இந்தியா). http://164.100.47.194/Loksabha/Members/MemberBioprofile.aspx?mpsno=112&lastls=13. பார்த்த நாள்: 25 August 2017. 
 3. "குலதெய்வ கோவில் சபதம்...ஆட்சியை கவிழ்க்க தனி ஒருவனாக களமிறங்கும் தினகரன்". https://tamil.oneindia.com/news/tamilnadu/will-dinakran-bring-down-the-curtains-on-admk-govt-307775.html. ஒன் இந்தியா (சனவரி 8, 2018)
 4. "Shri LED. T. V. Dhinakaran CMRajya Sabha profile". Rajya Sabha இம் மூலத்தில் இருந்து 27 மார்ச் 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190327221824/http://164.100.47.5/newmembers/Website/Main.aspx. பார்த்த நாள்: 25 August 2017. 
 5. "பொருளாளர் பதவி...அலறும் அதிமுகவின் இரண்டாம்கட்டத்தலைவர்கள்!". 2016-03-18. https://www.vikatan.com/news/coverstory/60800-admk-cardres-fear-about-treasurer-post.html. பார்த்த நாள்: 1 சனவரி 2018. 
 6. "டி.டி.வி. தினகரனின் பின்னணி" இம் மூலத்தில் இருந்து 2017-02-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170217144652/http://tv.puthiyathalaimurai.com/detailpage/news/tamilnadu/112/80353/ttv-dinakaran-background. 
 7. எம்.ஜி.ஆரின் அ.தி.மு.க.வை வழிநடத்தப்போகும் டி.டி.வி. தினகரனின் "தகுதி" என்ன தெரியுமா?
 8. http://research.omicsgroup.org/index.php/Rajya_Sabha_members_from_Tamil_Nadu[தொடர்பிழந்த இணைப்பு]
 9. TTV Dinakaran: The nephew Sasikala believes in
 10. Jayalalithaa expels TTV Dinakaran
 11. VK Sasikala Placed Nephew In Charge Of Party. It Can't Get Enough Of Him
 12. Life and times of TTV Dinakaran — Sasikala's new pawn in TN's political battle
 13. RK Nagar bypoll: Dinakaran is AIADMK candidate
 14. பணப்பட்டுவாடா புகார் எதிரொலி: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து- தேர்தல் ஆணையம் நடவடிக்கை
 15. "இரட்டை இலை சின்னம் தீர்ப்பு". http://www.dinamalar.com/news_detail.asp?id=1903562. 
 16. https://tamil.oneindia.com/news/tamilnadu/rk-nagar-counting-election-result-live-306109.html
 17. "அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்': கட்சிப் பெயரை அறிவித்தார் டிடிவி தினகரன்; கொடியும் அறிமுகம்". http://tamil.thehindu.com/tamilnadu/article23250890.ece. 
 18. "அன்னிய செலாவணி மோசடி வழக்கு: டி.டி.வி.தினகரனுக்கு ரூ.28 கோடி அபராதம்" இம் மூலத்தில் இருந்து 2017-01-08 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170108204847/http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=270708. தினகரன்
 19. டிடிவி தினகரன் திவாலானவரா? நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை வாதம்
 20. How TTV Dinakaran got relief from Jayalalithaa wealth case
 21. "AIADMK's TTV Dinakaran Arrested At Midnight After 4 Days Of Questioning". என்டிடிவி. http://www.ndtv.com/india-news/aiadmk-leader-ttv-dinakaran-arrested-in-cash-for-symbol-case-1685967. பார்த்த நாள்: 25 ஏப்ரல் 2017. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._டி._வி._தினகரன்&oldid=3779429" இருந்து மீள்விக்கப்பட்டது