டி. பி. எஸ். ஜெயராஜ்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
டேவிட் ஜெயராஜ் (David Jeyaraj, பிறப்பு: மே 21,1954) கனடாவில் வசிக்கின்ற அரசியல் சார்பில்லாத ஒர் ஆங்கில ஊடகவியலாளர் ஆவார். ஆரம்பத்தில் இலங்கையில் வீரகேசரியில் பணியாற்றியவர். இவருடைய கட்டுரைகள் D.B.S Jeyaraj எனும் பெயரில் வெளிவருகின்றன. இலங்கைத் தமிழரான இவருடைய கட்டுரைகள் சண்டே லீடர், இந்து, புரொண்ட்லைன் ஆகிய பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. தற்போது Transcurrents எனும் ஒரு வலைப்பதிவையும் பேணிவருகின்றார். பிபிசி மற்றும் கனேடிய வானொலி என்பவற்றில் இலங்கை தொடர்பான அரசியல் அலசல்களில் பங்குபற்றி வருகின்றார். தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழியிலும் புலமை பெற்ற மிகச் சொற்பமான இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர்களில் இவரும் ஒருவர்.
டி. பி. எஸ். ஜெயராஜ் David Jeyaraj | |
---|---|
பிறப்பு | David Buell Jeyaraj மே 21, 1954 |
தேசியம் | கனடா |
இனம் | இலங்கைத் தமிழர் |
பணி | ஊடகவியலாளர் |
சமயம் | கிறித்தவர் |