டி. வி. கோபாலகிருஷ்ணன்
திருப்புனித்துறை விசுவநாத கோபாலகிருஷ்ணன் (Tirupanithurai Viswanatha Gopalakrishnan, பரவலாக TVG, பிறப்பு: கேரளத்தின் திருப்புனித்துறையில் சூன் 11, 1932) சென்னையைச் சேர்ந்த ஒரு கருநாடக இசை மற்றும் இந்துத்தானி இசைக் கலைஞர்.[1]
டி.வி. கோபாலகிருஷ்ணன் | |
---|---|
பின்னணித் தகவல்கள் | |
பிறப்பு | சூன் 11, 1932 |
பிறப்பிடம் | கேரளா, இந்தியா |
இசை வடிவங்கள் | திரைப்படப் பாடல் |
தொழில்(கள்) | பாடகர், கருநாடக இசைக்கலைஞர் |
வாழ்க்கையும் பணிவாழ்வும்
தொகுகோபாலகிருஷ்ணன் இரண்டு நூற்றாண்டுகளாக இசைத்துறையில் ஈடுபட்ட கலைக்குடும்பதைச் சேர்ந்தவர்.[2] இவரது தந்தை டி. ஜி. விசுவநாத பாகவதர், கொச்சி மகாராசா அவையில் இசைக்கலைஞராக இருந்தவர்.[3] இவர் ஒரு வாய்ப்பாட்டுக்காரர் மட்டுமல்லாது வயலின் மற்றும் மிருதங்கம் வாசிப்பதிலும் தேர்ந்தவர்.[4] மிருதங்கத்தை தமது நான்காவது அகவையிலேயே வாசிக்கத் துவங்கி ஆறாம் அகவையில் திருப்புனித்துறை கொச்சி அரண்மனையில் அரங்கேற்றம் கண்டார்.[5] இவர் தமது கருநாடக இசையை செம்பை வைத்தியநாத பாகவதரிடம் பயின்றார்.[5]
கோபாலகிருஷ்ணன் தனது 9 ஆவது வயதில் செம்பை வைத்தியநாத பாகவதருக்கு பக்க வாத்தியம் வாசித்தார்.[6] இதுவே இவரின் முதல் முக்கியமான மேடை நிகழ்ச்சி.
இவரது மாணாக்கர்களாக இளையராஜா, ஏ. ஆர். ரகுமான், ராஜ்குமார் பாரதி, மற்றும் கத்ரி கோபால்நாத் இருந்துள்ளனர்.[5][7] மேற்கத்திய விபுணவிகலைஞரும் இசையமைப்பாளருமான பிராங்க்ளின் கீர்மையருடன் நிகழ்கலை நிகழ்ச்சிகளில் ஒருங்கிணைந்து பங்காற்றியுள்ளார்.[8]
விருதுகள்
தொகு- 1990 சங்கீத நாடக அகாதமி விருது
- 2005 செம்பை வைத்தியநாத பாகவதர் விருது, குருவாயூர் தேவஸ்தானம் [6]
- 2012 பத்ம பூசன் விருது [9]
- 2013 சங்கீத சூடாமணி விருது, 2013; வழங்கியது: ஸ்ரீ கிருஷ்ண கான சபா, சென்னை
- நாத கோவிதா பட்டம், 2014; வழங்கியது: நாதபிரம்மம் இசை இதழ் [10]
- சங்கீத கலாநிதி விருது, 2014; வழங்கியது: மியூசிக் அகாதமி, சென்னை
மேற்கோள்கள்
தொகு- ↑ Massey, Reginald (1999). India's kathak dance, past present, future. Abhinav Publications. pp. 113. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8170173744. பார்க்கப்பட்ட நாள் 2009-07-28.
{{cite book}}
: Unknown parameter|coauthors=
ignored (help) - ↑ Kumar, Raj (2003). Essays on Indian Music. Discovery Publishing House. p. 205. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8171417191.
- ↑ "Profiles of Artistes, Composers, Musicologists". Indian heritage. பார்க்கப்பட்ட நாள் 2009-07-28.
- ↑ "Chembai award for T.V. Gopalakrishnan". தி இந்து. 17 August 2005 இம் மூலத்தில் இருந்து 2006-09-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060919080333/http://www.hindu.com/2005/08/17/stories/2005081709750400.htm. பார்த்த நாள்: 2009-07-28.
- ↑ 5.0 5.1 5.2 Jayakumar, G. (2 September 2005). "A maestro's music". தி இந்து இம் மூலத்தில் இருந்து 2006-11-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20061118071503/http://www.hinduonnet.com/thehindu/fr/2005/09/02/stories/2005090201460200.htm. பார்த்த நாள்: 2009-07-28.
- ↑ 6.0 6.1 'குருவின் ஆசி' - ரமா ஈச்வரன் எழுதிய கட்டுரை, வெளியீடு: தினமணி - இசை விழா மலர் (2011 - 2012)
- ↑ Rajan, Anjana (12 January 2007). "A time to every purpose". தி இந்து இம் மூலத்தில் இருந்து 2012-11-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121105052411/http://www.hindu.com/fr/2007/01/12/stories/2007011201040200.htm. பார்த்த நாள்: 2009-07-28.
- ↑ "Pop and Jazz Guide". நியூ யார்க் டைம்சு. 21 May 2004. http://www.nytimes.com/2004/05/21/movies/pop-and-jazz-guide-668117.html?pagewanted=2. பார்த்த நாள்: 2009-07-28.
- ↑ தமிழகத்தில் 7 பேருக்கு பத்ம விருதுகள் புதுவை விவசாயிக்கு பத்மஸ்ரீ[தொடர்பிழந்த இணைப்பு] தினமணி, சனவரி 26,2012
- ↑ ‘Naada Kovida’ title for T.V. Gopalakrishnan, தி இந்து, டிசம்பர் 15,2014