டீக் அருங்காட்சியகம்

டீக் அருங்காட்சியகம் இந்திய மாநிலமான இராசசுத்தானில் உள்ள பரத்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கே டீக் அரசரும் அவரது குடும்பத்தினரும் பயன்படுத்திய பொருட்கள், தளவாடங்கள் என்பன வைக்கப்பட்டுள்ளன. தற்போது இங்கே 547 ஆவணப்படுத்தப்பட்ட பொருட்கள் உள்ளன. இவற்றுள் சிறந்தவை டீக் அரண்மனையில் உள்ள கோபால் பவன், கிசான் பவன் ஆகியவற்றில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

அருங்காட்சியகத்தின் பெரும் பகுதி கோபால் பவனில் உள்ளது. டீக் அரண்மனைத் தொகுதிக்கும் அமைக்கப்பட்ட கட்டிடங்களுள் கோபால் பவனே பெரியதும் கம்பீரமானதும் ஆகும். கோபால் பவனையும், கிசான் பவனையும் சுராச்மல் அரசர் 1756-63 காலப்பகுதியில் கட்டுவித்தார். இவற்றில் அமைந்துள்ள தலைமைக் கூடம், மான் சிங் கூடம், ஆங்கிலப் பாணி மற்றும் இந்தியப் பாணி சாப்பாட்டு அறைகள், அரசரின் படுக்கையறை, அரசரின் அறை, அரசியின் பகுதிகள் என்பன பொதுமக்கள் பார்வைக்கு விடப்பட்டுள்ளன.

இவற்றையும் பார்க்கவும் தொகு

வெளியிணைப்புக்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=டீக்_அருங்காட்சியகம்&oldid=3247009" இலிருந்து மீள்விக்கப்பட்டது