டுரூபல் மக்கள்

டுரூபல் (Turrubal) எனப்படுவோர் ஓர் ஆத்திரேலியப் பழங்குடி இனத்தவர். ஐரோப்பியர் ஆத்திரேலியாவிற்கு வருவதற்கு முன் பிரிஸ்பேன் நகரம் தற்போது இருக்கும் பகுதிகளில் வசித்து வந்தனர்.[1] பிரிஸ்பேன் நகரத்தில் ஆரம்ப காலங்களிலிருந்த டாம் பெட்ரி என்பவரின் குறிப்புப்படி டுரூபல் மக்கள் கனிவான குணமும், நம்பகத்தன்மையும் கொண்டவர்களாக அறியப்படுகின்றனர். இந்த மக்கள் மற்றவர்களிடமிருந்து பலவிதத்திலும் கொடுமைகளை சந்தித்தபோதும், மன்னிக்கும் குணம் கொண்டவர்களாக டாம் பெட்ரியின் குறிப்புகள் தெரிவிக்கின்றன.[2] இவர்கள் டுருபல் மொழியைப் பேசினர்.[2] தற்போது இம்மொழி அழிந்துவிட்ட மொழியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

சான்றுகள்தொகு

  1. "Turrubal history". dakibudcha.com. 2018-10-02 அன்று மூலம் (Website) பரணிடப்பட்டது. 2008-02-13 அன்று பார்க்கப்பட்டது.
  2. 2.0 2.1 "Tom Petrie Remeniscence of Early Queensland" (Website). 2009-11-06 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டுரூபல்_மக்கள்&oldid=3556700" இருந்து மீள்விக்கப்பட்டது