டெரோயிசு மைல்சு

டெரோயிசு மைல்சு
பொதுவான சிங்கமீன்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
இசுகார்பினிடே
குடும்பம்:
இசுகார்பானிபார்மிசு
பேரினம்:
இனம்:
டெ. மைல்சு
இருசொற் பெயரீடு
டெரோயிசு மைல்சு
பென்னெட், 1828

டெரோயிசு மைல்சு (Pterois miles) என்பது பிசாசு தீ மீன் என்றும் சிங்க மீன் எனவும் அழைக்கப்படுகிறது. இது மேற்கு இந்தோ-பசிபிக் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்ட அக்டினோட்டெரிகியை மீனின் ஒரு சிற்றினமாகும். இது இதன் நெருங்கிய உறவினரான சிவப்பு சிங்கமீனுடன் (டெரோயிசு வோல்டான்சு) உடன் அடிக்கடி இனம் காணலில் குழப்பமடைகிறது. இதனுடைய விலங்கியல் பெயரான, டெரான், கிரேக்க மொழியில் இறக்கை என்றும் மைல்சு என்பசு இலத்தீன் மொழியில் படைவீரர் என்றும் பொருள்படும்.

விளக்கம்

தொகு

பொதுவான இந்த சிங்கமீன் 35 cm (14 அங்) நீளம் வரை வளரக்கூடியது. இதனுடைய முதுகுபுற துடுப்பு 13 நீண்ட, வலுவான முள்ளெலும்புகளையும் 9 முதல் 11 வரையிலான மென்மையான ஆரங்களையும் கொண்டுள்ளது. குத துடுப்பு மூன்று நீண்ட முள்ளெலும்புகளுடன் ஆறு அல்லது ஏழு மென்மையான ஆரங்களைக் கொண்டுள்ளது. முதுகுத் துடுப்பு இறகு போல் தோற்றமளிக்கின்றது. தோள் துடுப்புகள் தனித்த அகலமான, மென்மையான கதிர்களைக் கொண்டு இறக்கை போன்று காணப்படும். இந்த மீன்கள் சிவப்பு நிறத்திலிருந்து பழுப்பு அல்லது சாம்பல் நிறம் வரை வேறுபடுகின்றன. இவற்றின் தலை மற்றும் உடல்களில் ஏராளமான மெல்லிய, அடர், செங்குத்து பட்டைகள் காணப்படுகின்றன.[2] இதன் தலை டெ. வொலிட்டன்களைக் காட்டிலும் குறைவான கோணத்தில் அமைந்துள்ளது.

நடத்தை

தொகு

பொதுவான சிங்கமீன்கள் இரவாடி வகையினைச் சார்ந்தது, பகல் நேரத்தில் வாழிடத்தில் உள்ள பாறை விரிசல்களில் மறைந்து வாழ்கிறது. மீன் மற்றும் சிறிய ஓட்டுமீன்களை உணவாக உட்கொள்கிறது. ஒரு சில மீன்கள் தன்னுடைய விச முள்ளெலும்புகளைப் பயன்படுத்தி வேட்டையாடி உண்ணுகின்றன. ஆனால் பெரிய சிங்கமீன்கள் சிறிய மீன்களை இறையாக உண்ணுகின்றன. அஞ்சாலை மீன்களை இதன் விசமுள்ளெலும்புகளால் ஏதும் செய்ய இயலவில்லை. மேலும் சிங்க மீன்கள் அஞ்சாலை மீனின் உணவில் சேர்க்கப்பட்டுள்ளன. ஊதாப்புள்ளி கார்னெட்மீன் (ஃபிசுதுலாரியா காமர்சோனி) இதனை பகாமாவில் உள்ள களவாய் மீன்களைப் போலவே உண்ணுகின்றன.[3]

பரவலும் வாழிடமும்

தொகு

டெ. மைல்சு இந்தியப் பெருங்கடலில், செங்கடலிலிருந்து,[4] தென்னாப்பிரிக்காவிற்கும், இந்தோனேசியாவிற்கும் சொந்தமானது. இது சமீபத்தில் கிழக்கு மற்றும் மத்திய மத்திய தரைக்கடலில், சைப்ரசுக்கு அருகிலுள்ள, மால்டாவில்,[5] வடக்கே ஈஜியன் கடலில் இஸ்மிர் வரை பதிவாகியுள்ளது. இம்மீன் இப்போது அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையிலும் கரீபியன் கடலிலும் காணப்படுகிறது. அங்கு இம்மீன் ஆக்கிரமிப்பு இனமாக்க கருதப்படுகிறது.[3] இது டெ.வொலிட்டான்களின் தோற்றத்தினை மிகவும் ஒத்திருக்கிறது. டெ.வொலிட்டான் செங்கடலில் காணப்படுவதில்லை. பி. மைல்சு பொதுவாகப் பாறை இடுக்குகள் அல்லது உப்பங்கழிகளில் காணப்படுகின்றன. பெரும்பாலும் பவளப்பாறைகளின் வெளிப்புற சரிவுகளில் காணப்படும்.[6] மோரே விலாங்கு மீனின் வாழிடமான செங்கடலில் டெ. மைல்களை வேட்டையாடுவது கண்டுபிடிக்கப்பட்டது.[7] சில களவாய் மீன்களும், பவளப்பாறைச் சுறாக்களும் சிங்க மீன்களை வேட்டையாடுகின்றன.

ஆபத்துகள்

தொகு

இதன் துடுப்பு முள்ளெலும்புகள் மிகவும் விசத்தன்மை வாய்ந்தவை. சில அறிக்கைகளின் படி இந்த விசம் மனிதர்களுக்கு மரணத்தை ஏற்படுத்தியுள்ளன. ஆயினும்கூட, மீன் கொட்டுவதால் தீவிர வலி, வாந்தி, வலிப்பு, சிறு பக்கவாதம் மற்றும் சுவாச சிரமங்களை ஏற்படும். எனவே, உடனடி அவசர மருத்துவச் சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. ஆரோக்கியமான பெரியவர்களுக்குக் கூட, விசம் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் விசத்தின் அறிகுறிகளும் எதிர்விளைவுகளும் நபருக்கு நபர் வேறுபடுகின்றன.[2]

படங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Motomura, H.; Matsuura, K.; Khan, M. (2017). "Pterois miles". International Union for Conservation of Nature. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T190475A54145413.en. https://www.iucnredlist.org/species/190475/54145413. 
  2. 2.0 2.1 "Pterois miles, Devil firefish". Fishbase.org. 2012-07-03. பார்க்கப்பட்ட நாள் 2013-04-08.
  3. 3.0 3.1 Schofield, P J; Morris, J A Jr; Langston, J N; Fuller, P L (2012-09-18). "Lionfish: Pterois volitans/miles". Nonindigenous Aquatic Species. USGS. பார்க்கப்பட்ட நாள் 2013-12-20.
  4. Bos A.R.; J.R. Grubich; A.M. Sanad (2018). "Growth, site fidelity and grouper interactions of the Red Sea Lionfish, Pterois miles (Scorpaenidae) in its native habitat". Marine Biology 165 (10): 175. doi:10.1007/s00227-018-3436-6. 
  5. "University Research Discovers New Alien Species In Maltese Waters". Malta Today. 2016.
  6. Siliotti, A. (2002) fishes of the red sea Verona, Geodia பன்னாட்டுத் தரப்புத்தக எண் 88-87177-42-2
  7. Bos A.R.; Sanad A.M.; Elsayed K. (2017). "Gymnothorax spp. (Muraenidae) as natural predators of the lionfish Pterois miles in its native biogeographical range". Environmental Biology of Fishes 100 (6): 745–748. doi:10.1007/s10641-017-0600-7. https://www.researchgate.net/publication/322571037. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=டெரோயிசு_மைல்சு&oldid=3307128" இலிருந்து மீள்விக்கப்பட்டது