டெலிகோம் கோபுரம்

கோலாலம்பூர், லெம்பா பந்தாய் புறநகரில் உள்ள 55-அடுக்கு வானளாவிய கட்டிடம்

டெலிகோம் கோபுரம் (மலாய்; Menara Telekom; ஆங்கிலம்: Telekom Tower) (TM Tower) என்பது மலேசியா, கோலாலம்பூர் மேற்குப் பகுதியில், லெம்பா பந்தாய் புறநகரில், 310.0 மீ (1,017 அடி) உயரத்தில் உள்ள 55-அடுக்கு வானளாவிய கட்டிடமாகும்.[1][2]

டெலிகோம் கோபுரம்
Menara Telekom
Telekom Tower

டெலிகோம் கோபுரம் (2019)
Map
பொதுவான தகவல்கள்
நிலைமைமுடிக்கப்பட்டது
வகைவணிக அலுவலகங்கள்
இடம்கோலாலம்பூர், மலேசியா
ஆள்கூற்று3°09′29″N 101°42′47″E / 3.1580°N 101.7130°E / 3.1580; 101.7130
கட்டுமான ஆரம்பம்1998
நிறைவுற்றது2001
உயரம்
முனை311.1 m (1,021 அடி)
கூரை310 m (1,020 அடி)
மேல் தளம்243 m (797 அடி)
தொழில்நுட்ப விபரங்கள்
தள எண்ணிக்கை55
தளப்பரப்பு1,600,000 sq ft (150,000 m2)
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)இஜாஸ் கஸ்தூரி அசோசியேட்ஸ்
Hijjas Kasturi Associates
அமைப்புப் பொறியாளர்தோர்ன்டன் தோமசெட்டி
சேவைகள் பொறியாளர்எஸ்எம் பொறியாளர்கள்

இந்தக் கோபுரம் 2023-ஆம் ஆண்டு வரை, மலேசிய தொலைத்தொடர்புத் துறை நிறுவனமான டெலிகோம் மலேசியாவின் தலைமையகமாக இருந்தது.

முறுக்கப்பட்ட நிலையிலான உயர்க் கட்டிடங்களில் (Tallest Twisted Building), இந்தக் கோபுரம் உலகின் 4-ஆவது நிலையில் உள்ளது. இது மலேசியாவின் ஐந்தாவது உயரமான கட்டிடமாகும். மேலும் இது ஒரு முளைக்கும் மூங்கில் தளிரைக் குறிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பொது

தொகு

இந்தக் கோபுரம் உலகின் முதல் முறுக்கப்பட்ட நிலையிலான வானளாவிய கட்டிடமாகவும் கருதப்படுகிறது. இது இஜாஸ் கஸ்தூரி அசோசியேட்ஸ் கட்டிடக்கலை நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டது; மற்றும் 1998 மற்றும் 2001-ஆம் ஆண்டுகளுக்கு க்கு இடையில் டேவூ கட்டுமான நிறுவனத்தால் (Daewoo Construction) கட்டப்பட்டது.

நான்காவது பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது அவர்களால், 11 பிப்ரவரி 2003 அன்று இந்தக் கட்டிடம் திறக்கப்பட்டது.

அமைப்பு

தொகு

கட்டிடத்தைச் சுற்றிலும் ஏறுமுகத்தில் தொங்கும் தோட்டங்கள் உள்ளன. இதைக் கட்டுவதற்கு அமெரிக்க டாலர் $160 மில்லியன் செலவானது.

ஆற்றல் சேமிப்பை ஊக்குவிப்பதற்காக, இந்தக் கோபுரத்தின் சாளரங்கள், சுற்றுச் சூழல் குளிரூட்டும் அமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளன.[3]

விரைவு மின்தூக்கிகள்

தொகு

இந்தக் கோபுரத்தில் 2,500 பார்வையாளர்கள் அமரக்கூடிய ஓர் அரங்கம்; ஒரு பெரிய தொழுகைக் கூடம் (Surau) மற்றும் விளையாட்டு அரங்கம் ஆகியவை உள்ளன. கோபுரத்தின் ஒரு தனிச்சிறப்பு அதன் 22 திறந்த வான தோட்டங்கள் ஆகும். ஒவ்வொரு மூன்று மாடிகளுக்கும் ஒரு வான தோட்டம் அமைக்கப்பட்டு உள்ளது.

அலுவலகத் தளங்கள், வடக்கு தெற்குப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, இரட்டை அடுக்கு விரைவு மின்தூக்கிகள் (Double-deck Elevators) மூலமாகச் சேவை செய்யப்படுகின்றன.

டெலிகோம் மலேசியா

தொகு

டெலிகோம் மலேசியா என்பது 1984-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஒரு மலேசிய தொலைத்தொடர்பு நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் வானொலி ஒலிபரப்பு மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவைகளுக்கான தேசிய தொலைத்தொடர்பு அமைப்பாகத் தொடக்கப் பட்டது.

டெலிகோம் மலேசியா நிறுவனம், இன்றைய காலத்தில் அகன்ற அலைவரிசை சேவைகள், கட்டணத் தொலைக்காட்சி மற்றும் இணையச் சேவைகள் போன்றவற்றில் நாட்டின் மிகப்பெரிய சேவையாளராக உருவாகியுள்ளது.

போகுவரத்து

தொகு

டெலிகோம் கோபுரம்,  கிளானா ஜெயா  வழித்தடத்தில் உள்ள  KJ18  கெரிஞ்சி எல்ஆர்டி நிலையத்திற்கு நடந்து செல்லும் தூரத்தில் உள்ளது

மேலும் இந்தக் கோபுரம், கோலாலம்பூர்-கிள்ளான் நெடுஞ்சாலைப் பகுதியில் அமைந்துள்ளது. அத்துடன் அந்த இடத்தில்தான் இசுபிரிண்ட் விரைவுச்சாலையும், கோலாலம்பூர்-கிள்ளான் நெடுஞ்சாலையும் இணைகின்றன.

காட்சியகம்

தொகு

டெலிகோம் கோபுரத்தின் 2019-ஆம் ஆண்டு காட்சிப் படங்கள்:

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Menara Telekom is a majestic 55 storey state of the art modern architectural building located along the Federal Highway and Jalan Pantai Baharu". Kl-office.com. பார்க்கப்பட்ட நாள் 27 November 2024.
  2. Alexander Wong (10 May 2023). "Menara TM no longer TM’s headquarters, TM Campus is their new home". Soya Cincau. https://soyacincau.com/2023/05/10/tm-launch-tm-campus-new-hq-cyberjaya/. பார்த்த நாள்: 18 May 2023. 
  3. "6 of Kuala Lumpur's best modern buildings | WorldBuild365". web.archive.org. 28 December 2017. பார்க்கப்பட்ட நாள் 27 November 2024.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=டெலிகோம்_கோபுரம்&oldid=4150777" இலிருந்து மீள்விக்கப்பட்டது