டேவிட் ஈ. வெசுட்டன்

இங்கிலாந்து இயற்பியலாளர்

டேவிட் ஈ. வெசுட்டன் (David E. Weston) இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஓர் இயற்பியலாளராவார். 1929 ஆம் ஆண்டு சனவரி மாதம் 19 அன்று இவர் பிறந்தார். இங்கிலாந்தின் கடற்படை தலைமையக ஆராய்ச்சி நிறுவனத்தில் வெசுட்டன் பணிபுரிந்தார். ஆரம்ப கால வாழ்க்கையின் போது நீரடி ஒலியியல் ஆராய்ச்சி முன்னோடியான ஏ பி வூட் உடன் வெசுட்டன் பணிபுரிந்தார். பின்னர் நீருக்கடியில் ஒலியியல் ஆராய்ச்சி பங்களிப்புகளுக்காக மிகவும் பிரபலமானவர்.

அமெரிக்க ஒலியியல் சங்கத்தின் செய்தி இதழில் வெளியிடப்பட்ட 32 ஆராய்ச்சிக் கட்டுரைகள் உட்பட வெசுட்டன் 65 ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வெளியிட்டுள்ளார். 1970 ஆம் ஆண்டு ஒலியியல் நிறுவனம் வெசுட்டனுக்கு ரேலே பதக்கத்தையும், 1998 ஆம் ஆண்டு அமெரிக்க ஒலியியல் சங்கம் வெள்ளிப் பதக்கத்தையும் வழங்கி சிறப்பித்தன.

வெசுடன் 1982 மற்றும் 1984 ஆம் ஆண்டுகளுக்கிடையில் இங்கிலாந்து ஒலியியல் நிறுவனத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்தார்.[1]

2001 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16 ஆம் நாள் வெசுட்டன் காலமானார்.

மேற்கோள்கள் தொகு

  1. Ainslie, Michael A.. "Obituaries: David E. Weston 1929-2001". J. Acoust. Soc. Am. 110 (2): 647. doi:10.1121/1.1385896. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=டேவிட்_ஈ._வெசுட்டன்&oldid=3858036" இலிருந்து மீள்விக்கப்பட்டது