டேவிட் லிவிங்ஸ்ட்டன்

புகழ்பெற்ற நாடாய்வாளர்

டேவிட் லிவிங்ஸ்ட்டன் (David Livingstone) (1813-1873) என்பவர் ஆப்பிரிக்காக் கண்டத்தித்திற்குச் சென்று அதன் பல பகுதிகளைக் கண்டறிந்து பெரும் புகழ்பெற்ற நாடாய்வாளர் ஆவார்.

டேவிட் லிவிங்ஸ்ட்டன்
David Livingstone -1.jpg
பிறப்புமார்ச்சு 19, 1813(1813-03-19)
Blantyre, Scotland
இறப்பு1 மே 1873(1873-05-01) (அகவை 60)
Chief Chitambo's Village, in what is today Zambia
இறப்பிற்கான
காரணம்
Malaria and internal bleeding due to dysentery

பிறப்புதொகு

ஸ்காட்லாந்திலுள்ள சிற்றூரில் 1813 ஆம் ஆண்டு மார்ச் 19ஆம் தேதி டேவிட் லிவிங்ஸ்ட்டன் பிறந்தார்.

கல்விதொகு

எளிய குடும்பத்தில் பிறந்ததால் இவர் தமது பத்தாம் வயதிலேயே ஒரு பஞ்சாலையில் வேலை செய்யத் தொடங்கினார். எனினும் இரவுப் பள்ளிகளில் படித்து வந்தார். பின்பு கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் பயின்று மருத்துவப் பட்டம் பெற்றார். 1838 ஆம் ஆண்டு லண்டன் சமயப் பிரசார சங்கத்தில் இவர் சேர்ந்தார்.

ஆப்பிரிக்கப் பயணம்தொகு

லண்டன் சமயப் பிரசார சங்கத்தினர் கிறிஸ்தவ சமயத்தைப் பரப்ப 1841-ல் இவரை ஆப்பிரிக்காவுக்கு அனுப்பினர். ஆப்பிரிக்காவின் பல பகுதிகளைக் கண்டறிந்தார். 1851 ஆம் ஆண்டு சாம்பசி ஆறு தோன்றும் இடத்தைக் கண்டுபிடித்தார். சாம்பசி ஆறிறில் மிகப் பெரிய நீர்வீழ்ச்சியொன்றைக் கண்டு அதற்கு அந்நாளில் இங்கிலாந்தில் ஆட்சி புரிந்த விக்டோரியா மகாராணியின் பெயரால் ‘விக்டோரியா நீர்விழ்ச்சி’ என்று பெயரிட்டார். 1856 ஆம் ஆண்டில் இவர் இங்கிலாந்து திரும்பினார்.

மத்திய ஆப்பிரிக்கா, கிழக்கு ஆப்பிரிக்கா பயணம்தொகு

சமயப் பிரச்சார சங்கத்தை விட்டு விலகி 1858ஆம் ஆண்டு மத்திய ஆப்பிரிக்காவையும், கிழக்கு ஆப்பிரிக்காவையும் ஆராய்வதற்காகச் சென்றார். செல்லும் வழியிலே அராபியர்கள் ஆப்பிரிக்கர்களை அடிமைகளாக விற்பனை செய்யக் கடத்திச் செல்வதைக் கண்டார். இக்கொடிய முறையை ஒழிக்க இவர் அரும் பாடுபட்டார்.

இறப்புதொகு

1873 ஆம் ஆண்டில் லிவிங்ஸ்ட்டன் காலமானார். இவருடைய உடலை இங்கிலாந்திற்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர்.

மேற்கோள்கள்தொகு

 • "குழந்தைகள் கலைக் களஞ்சியம்",1993, சென்னை:தமிழ் வளர்ச்சிக் கழகம்.

வெளி இணைப்புகள்தொகு

 1. http://livingstone.library.ucla.edu/
 2. http://www.livingstoneonline.ucl.ac.uk/index.html பரணிடப்பட்டது 2008-02-17 at the வந்தவழி இயந்திரம்
 3. http://ssa.nls.uk/film.cfm?fid=0192
 4. https://www.gutenberg.org/author/Livingstone,+David
 5. https://archive.org/search.php?
 6. http://www.tokencoins.com/book/livingstone.htm
 7. http://www.wholesomewords.org/missions/ilivingstone.html பரணிடப்பட்டது 2008-12-10 at the வந்தவழி இயந்திரம்
 8. https://books.google.com/books?id=0CMYAAAAMAAJ&pg=PA225
 9. http://www.pbs.org/wnet/secrets/the-lost-diary-of-dr-livingstone-watch-the-full-episode/1157/
 10. http://www.rhodesia.me.uk/VictoriaFalls.htm பரணிடப்பட்டது 2015-03-09 at the வந்தவழி இயந்திரம்
 11. http://labs.jstor.org/zambezi/?cid=soc_JSTORedu# பரணிடப்பட்டது 2017-04-13 at the வந்தவழி இயந்திரம்