டோக்கியோ பல் மருத்துவக் கல்லூரி

சப்பானின் தனியார் பல்கலைக்கழகம்

டோக்கியோ பல் மருத்துவக் கல்லூரி (Tokyo Dental College) சப்பான் நாட்டின் டோக்கியோவின் சியோதா-கூ நகரில் அமைந்துள்ளது. தனியார் பல்கலைக்கழகமான இது முன்னோடி கல்லூரியாக 1890 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. 1946 ஆம் ஆண்டில் ஒரு பல்கலைக்கழகமாக பட்டயப்படுத்தப்பட்டது.

டோக்கியோ பல் மருத்துவக் கல்லூரி
Tokyo Dental College
東京歯科大学;
Tōkyō Shika Daigaku
வகைதனியார் பல்கலைக்கழகம்
உருவாக்கம்1890
அமைவிடம்
சியோதா-கூ, டோக்கியோ
, ,
இணையதளம்Official website

சப்பான் முழுவதும் பல் மருத்துவம் கற்பிப்பதில் பிரத்தியேகமாக நிபுணத்துவம் பெற்ற ஒரே நிறுவனம் டோக்கியோ பல் மருத்துவக் கல்லூரியாகும்.

கல்லூரியின் பாடநெறி திட்ட்டம் ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது. இங்கு மாணவர்கள் ஆண்டுக்கு பத்து மாதங்கள் படிக்கின்றனர். வேதியியல் மற்றும் இயற்பியல், உடற்கூறியல் மற்றும் திசு அமைப்பியல் (பொது மற்றும் பல் மருத்துவம்) மற்றும் உடலியல் போன்ற பாடங்களை புதிய மாணவர்கள் படிக்கின்றனர். இளைய மாணவர்கள் நோயியல் (பொது மற்றும் பல் மருத்துவம்), பாக்டீரியாவியல், உலோகவியல், செயற்கை பல் மருத்துவம் மற்றும் பிற பாடங்களில் கவனம் செலுத்துகிறார்கள். மூத்த மாணவர்கள் ஆய்வு, வாய்வழி அறுவை சிகிச்சை, பற்சீரமைப்பு, அறுவை சிகிச்சை பல் மருத்துவம், செயற்கைப் பல், பல்லின் வெளிப்படும் பரப்பை வலுப்படுத்துதல், காணமல் போன பற்களை மாற்றுதல் தொடர்பான ஆய்வு மற்றும் பயிற்சிகளை மேற்கொள்கின்றனர்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. Daigaku, Tōkyō Shika (1905). Tokyo Dental College (in ஆங்கிலம்). Tokyo Dental College.