டோரிக் டெட்ராபோலிஸ்
நான்கு கிரேக்க நகரங்களின் வரலாற்றுப் பகுதி
டோரிக் டெட்ராபோலிஸ் (Doric Tetrapolis, கிரேக்கம்: Δωρική Τετράπολις ) என்பது பண்டைய கிரேக்கத்தில் டோரிஸ் பகுதியில் பாயும் பிண்டஸ் ஆற்றுப் பள்ளத்தாக்கில் நெருக்கமாக அமைந்துள்ள நான்கு நகரங்களின் தொகுப்பு ஆகும். அந்த நான்கு நகரங்கள் எரினியஸ், போயம், சிட்டினியம், பிண்டஸ் ஆகியவை ஆகும். ( இசுட்ராபோ எக்ஸ்பி 427. )