தஞ்சாவூர்ப் பெருவழிகள்

தஞ்சாவூர்ப் பெருவழிகள் என்பவை பழந்தமிழகத்தில் தஞ்சாவூர் நகரைத் தொலைவிலுள்ள நகரங்களோடு இணைத்த வழிகளாகும்.

கல்வெட்டுக் குறிப்புகள்

தொகு

குரங்காடுதுறை கோயில்

தொகு

தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர்-மயிலாடுதுறை சாலையில் உள்ள ஆடுதுறை என்னும் திருக்குரங்காடுதுறை மகாதேவற்குத் திருவிளக்குகள் வைக்கக் குலோத்துங்க சோழனின் 14ஆம் ஆட்சியாண்டில், அம்பர் நாட்டவர் சிலரால் நன்கொடையாக வழங்கப்பெற்ற நிலத்தின் நான்கெல்லையைப் பற்றிக்கூறும்போது பெருவழி பற்றிய கல்வெட்டுக்குறிப்பு காணப்படுகிறது. [1]

இதே கோயிலில் காணப்பெறும் மற்றொரு துண்டுக்கல்லில் 'தஞ்சாவூர்ப் பெருவழி வடக்கும்' என்ற குறிப்பு உள்ளது. [1]

முனியூர் சிவன் கோயில்

தொகு

தஞ்சாவூர் மாவட்டம் அவளிவணல்லூர்க்கு அருகிலுள்ள முனியூர் சிவன் கோயிலுள்ள மூன்றாம் இராசராசசோழனின் நான்காம் ஆண்டுக் கல்வெட்டில் மற்றொரு தஞ்சாவூர்ப் பெருவழி பற்றிய குறிப்பு உள்ளது. [1]

மேற்கோள்கள்

தொகு

<references>

  1. 1.0 1.1 1.2 குடவாயில் பாலசுப்பிரமணியன், தஞ்சாவூர், அஞ்சனா பதிப்பகம், தஞ்சாவூர், 1997
"https://ta.wikipedia.org/w/index.php?title=தஞ்சாவூர்ப்_பெருவழிகள்&oldid=1981197" இலிருந்து மீள்விக்கப்பட்டது