தஞ்சாவூர் கரும்பேசுவரர் திருக்கோயில்
இக்கட்டுரையுடன் (அல்லது இதன் பகுதியுடன்) திருக்கானூர் செம்மேனிநாதர் கோயில் கட்டுரையை இணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடுக) |
கரும்பேசுவரர் திருக்கோயில் தஞ்சாவூர் மாவட்டம், திருக்கானூர் எனும் ஊரில் அமைந்துள்ளது.இவ்வூர் தஞ்சாவூருக்கு வடமேற்கே 40 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
தல வரலாறுதொகு
ஒரு சமயம், இவ்வூரில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.அப்போது கோயில் முழுவதும் மூழ்கிய நிலையில், ஒரு கரும்பு மட்டுமே அங்கு முளைத்திருக்க அங்கு தோண்டியபோது மணலில் கோயில் கண்டுபிடிக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது.அம்பிகை சிவயோகநாயகி எனும் பெயரில் அருள்பாலிக்கிறாள்.இறைவனை நோக்கி தவமிருந்ததால் அப்பெயர் பெற்றாள்.
அமைப்புதொகு
கிழக்கு நோக்கிய மூன்று நிலை இராஜகோபுரமும் ஒரு பிரகாரமும் கொண்ட கோயில். கருவறை விமானம் உருண்டை வடிவிலான ஏகதளம் கொண்டது.அம்பாள் திருமேனி சாளக்கிராமக் கல்லினால் ஆனது. பாடல் பெற்ற தலம் இதுவாகும்.
நடைத் திறக்கும் நேரம்தொகு
காலை 7 மணி முதல் 12 மணி வரை மாலை 4 மணி முதல் 8 மணி வரை.
உசாத்துணைதொகு
தஞ்சாவூர் மாவட்டம், திருக்கோயில்கள் வழிகாட்டி, இந்து சமய அறநிலையத்துறை வெளியீடு 2014.