தடச்சி என்பது ஒருவகைத் தாவரமாகும். இதன் ஆங்கிலப் பெயர் பால்சா (Phalsa) மற்றும் தாவரப் பெயர் கிருவியா ஆசியாடோகா வார் வெஸ்டிடா (Grewia asiatoca var vestita) என்பதாகும். உயரமான மலைப்பகுதிகளில் நன்கு வளரும். இந்தியாவில் பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், ஆந்திரப்பிரதேசம் ஆகிய பகுதிகளில் விளைவிக்கப்படுகின்றது. இப்புதர்ச்செடியிலிருந்து நார் எடுத்து கயிறு தயாரிக்க பயன்படுத்துகிறார்கள். இதன் பழங்கள் உண்ணப்படுகின்றன. கருஞ்சிவப்பு கலந்த பழுப்பு நிறப் பழங்கள் மே - ஜூன் மாதங்களில் கிடைக்கின்றன. இப்பழ விதைகள் மூலமாக இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. ஒரு குத்துச்செடியிலிருந்து 5 முதல் 6 கிலோ பழங்கள் கிடைக்கும்.[1][2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. Botanic Gardens Conservation International (BGCI).; IUCN SSC Global Tree Specialist Group (2019). "Grewia asiatica". IUCN Red List of Threatened Species 2019: e.T147027384A147027386. doi:10.2305/IUCN.UK.2019-2.RLTS.T147027384A147027386.en. https://www.iucnredlist.org/species/147027384/147027386. பார்த்த நாள்: 20 November 2021. 
  2. "Grewia asiatica L." Plants of the World Online. Board of Trustees of the Royal Botanic Gardens, Kew. பார்க்கப்பட்ட நாள் 3 June 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தடச்சி&oldid=4099347" இலிருந்து மீள்விக்கப்பட்டது