தக்சசீலா

(தட்சசீலம் (பண்டைய நகரம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தட்சசீலம் (சமசுகிருதம்- तक्षशिला) ,(உருது - ٹیکسلا) அல்லது தக்சீலா பாக்கிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் அமைந்துள்ள ஓர் முக்கிய தொல்லியல் சார்ந்த இடமாகும். தக்சீலா இசுலாமாபாத் தலைநகரப் பகுதி மற்றும் ராவல்பிண்டியின் வடமேற்கே 32 km (20 mi) தொலைவில் பெரும் தலைநெடுஞ்சாலையினை அடுத்து உள்ளது. தக்சீலா கடல் மட்டத்திலிருந்து 549 மீட்டர்கள் (1,801 அடி) உயரத்தில் உள்ளது. இதனருகில் உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்ட ஜௌலியன் விகாரை உள்ளது.

யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
தக்சசீலா
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்
ஜௌலியன் விகாரையின் விரிபடம் - தொன்மையான பௌத்த மடம், தக்சசீலா
வகைபண்பாடு
ஒப்பளவுiii, vi
உசாத்துணை139
UNESCO regionஆசிய பசிபிக்
பொறிப்பு வரலாறு
பொறிப்பு1980 (4th தொடர்)

இது தொன்மையான காந்தார நாட்டின் தலைநகரமாக விளங்கியது. தக்சசீலா என்றழைக்கப்பட்ட நகரின் அழிவுகளை காண முடிகிறது. இந்து மற்றும் புத்த சமயத்தினருக்கு மிகவும் போற்றப்படும் நகராகும். தக்சசீலா என்ற பெயர் இராமனின் தமையன் பரதனின் மகன் தக்சனின் பெயரையொட்டி வந்ததாகக் கூறப்படுகிறது.[1]

இங்கு உலகின் மிகத் தொன்மையான பல்கலைக்கழகம் இயங்கியதாக வரலாற்றாளர்கள் நம்புகிறார்கள். இது கி.பி 400 வரையும் நீடித்ததாகவும் கூறப்படுகிறது.

வரலாற்றில், தக்சசீலா மூன்று முதன்மை வணிக வழிகளின் சந்திப்பில் இருந்துள்ளது:

1. உத்தரபாதை, "வடக்குச் சாலை" - பின்னாளில் GT சாலையாக உருமாறிய இராசபாட்டை - காந்தார நாட்டையும் கிழக்கில் கங்கைச் சமவெளியில் அமைந்த மகத நாட்டின் பாடலிபுத்திரத்தையும் இணைத்தது.

2. வடமேற்கு சாலை பாக்ட்ரியா, கபிசா மற்றும் புஷ்கலாவதி வழியே சென்றது.

3. சிந்து பாதை காஷ்மீர் மற்றும் மத்திய ஆசியாவிலிருந்து ஸ்ரீநகர், மனேசெரா,அரிப்பூர் வழியே குஞ்செராப் கணவாய் மூலமாக சீனத்திற்கும் தெற்கே இந்தியப் பெருங்கடலுக்கும் [2] அமைந்திருந்தது. தற்போதைய காரகோரம் நெடுஞ்சாலையை இப்பாதை அன்றே உள்ளடக்கியிருந்தது.

1980ஆம் ஆண்டு, யுனெசுகோ தக்சீலாவை உலக பாரம்பரியக் களம் என அறிவித்தது. [3] பாக்கிஸ்தானில் முதல் இடங்களில் உள்ள சுற்றுலா மையங்களில் தக்சீலா இருப்பதாக த கார்டியன் கணித்துள்ளது.[4]

அலெக்சாண்டரின் படையெடுப்பின் போது

தொகு

கிமு 327ல்பேரரசர் அலெக்சாந்தர் இந்தியாவின் மீது படையெத்த போது முதலில் தக்சசீல நகரத்தை முற்றுகையிட்டார். தக்சசீலா மன்னர் அம்பி, அலெக்சாண்டருக்கு யானைகள், குதிரைகள், காளைகளை அன்பளிப்பாக வழங்கி சமாதானம் செய்து கொண்டார்.[5]

தட்சசீல நகரத் தொல்பொருட்கள்

தொகு
 
தட்சசீல அகழாய்வில் கிடைத்த இந்தோ கிரேக்கர்களின் தொல்பொருள் கலைப்பொருட்கள்

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Joseph Needham (2004), Within the Four Seas: The Dialogue of East and West, Routledge, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-36166-4:

    "When the men of Alexander the Great came to Taxila in இந்தியா in the fourth century BC they found a பல்கலைக்கழகம் there the like of which had not been seen in கிரேக்கம் (நாடு), a university which taught the three வேதம் and the eighteen accomplishments and was still existing when the Chinese pilgrim பாசியான் went there about AD 400."

  2. Thapar, Romila (1997) [1961]. Aśoka and the Decline of the Mauryas. ஆக்சுபோர்டு: ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். p. 237. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-563932-4. {{cite book}}: Check |authorlink= value (help)
  3. UNESCO World Heritage Site. 1980. Taxila: Multiple Locations. Retrieved 13 January 2007.
  4. http://www.guardian.co.uk/travel/2006/oct/17/pakistan?page=all
  5. Jonathan Mark Kenoyer; Kimberly Burton Heuston (1 October 2005), The Ancient South Asian World, Oxford University Press, p. 110, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-522243-2

வெளியிணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Taxila
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தக்சசீலா&oldid=3427045" இலிருந்து மீள்விக்கப்பட்டது