தட்சேசுவரர் மகாதேவர் கோயில்

இந்தியவிலுள்ள சிவ ஆலயம்

தட்சேசுவர் மகாதேவர் கோயில் (Daksheswar Mahadev temple) அல்லது தட்ச மகாதேவர் கோயில் (Daksha Mahadev temple) என்பது சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்துக் கோயிலாகும். இது இந்தியாவின் உத்தராகண்டம் மாநிலத்திலுள்ள அரித்துவாரிலிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவிலுள்ள கன்கால் நகரில் அமைந்துள்ளது. இது சதியின் தந்தையான தட்சனின் பெயரால் அழைக்கப்படுகிறது.[1] தட்சன் படைப்பாளி தெய்வங்களான பதினான்கு பிரஜாபதிகளில் ஒருவராவார். இவர்கள் இனப்பெருக்கத்திற்கு தலைமை தாங்குகிறார்கள். மேலும், இந்து புராணங்களில் உயிரைப் பாதுகாப்பவர்களாக நம்பப்படுகின்றனர்.

தட்சேசுவரர் மகாதேவர் கோயில்
தட்சேசுவரர் மகாதேவர் கோயில் is located in உத்தராகண்டம்
தட்சேசுவரர் மகாதேவர் கோயில்
Location within Uttarakhand
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:உத்தராகண்டம்
மாவட்டம்:Haridwar
அமைவு:கன்கால்
ஆள்கூறுகள்:29°55′18.72″N 78°08′45.04″E / 29.9218667°N 78.1458444°E / 29.9218667; 78.1458444
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:Nagara style
வரலாறு
அமைத்தவர்:Queen Dhankaur

தற்போதைய கோவில் 1810-ல் இராணி தன்கவுர் என்பவரல் கட்டப்பட்டது. பின்னர், 1962-ல் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. மகா சிவராத்திரி அன்று சைவ பக்தர்களின் புனித யாத்திரை தளமாக இது இருக்கிறது.[2]

தட்சனின் கதை தொகு

 
சிவலிங்கம் - இது மகா உருத்திரனால் துண்டிக்கப்பட்ட தட்சனின் கழுத்து பகுதி

மகாபாரதத்திலும் இந்து மதத்தின் பிற நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, சிவனின் முதல் மனைவியான சதியின் தந்தையான மன்னர் தட்ச பிரஜாபதி, கோவில் அமைந்துள்ள இடத்தில் ஒரு வேள்வியை நடத்தினார். சதி தனது தந்தை சிவனை இந்த வேளிவிக்கு அழைக்காததால் அவமானப்பட்டதாக உணர்ந்தாலும், அவள் யாகத்தில் கலந்துகொண்டாள். சிவன் தன் தந்தையால் நிராகரிக்கப்படுவதைக் கண்டு அவள் தன்னை வேள்வி குண்டத்திலேயே எரித்துக் கொண்டாள். இதனால் கோபமடைந்த சிவன் தனது பூத கணங்களான வீரபத்திரர், பத்திரகாளி ஆகியோரை சடங்குக்கு அனுப்பினார்.[3] சிவனின் ஆலோசனையின் பேரில், வீரபத்திரர் தட்சனின் கூட்டத்தில் சிவகணங்களுடன் நுழைந்து, அங்கிருந்த தேவர்களுடனும் மனிதர்களுடனும் கடுமையான போரை நடத்தி, தட்சனின் தலையை வெட்டினார். பின்னர் பிரம்மாவின் அருளாலும், பிற கடவுள்களின் விருப்பத்தின் பேரிலும் தட்சனுக்கு ஆட்டின் தலை வழங்கப்பட்டது தட்சனின் அசுவமேத யாகத்தைப் பற்றிய பெரும்பாலான விவரங்கள் வாயு புராணத்தில் காணப்படுகின்றன.

பிற கட்டமைப்புகள் தொகு

 
தட்சேசுவரர் மகாதேவர் கோயில் வளாகத்தில் உள்ள கங்கையின் கோவில்

பிரதான கோயிலுக்குப் பக்கத்தில் பராசக்திக்கு அர்ப்பணிக்கப்பட்ட தச மகா வித்யா கோயில் உள்ளது. நவராத்திரி கொண்டாட்டங்களின் போது தேவியின் பக்தர்கள் சிறப்பு பூசைகளுக்காக கூடும் இடமாக இது உள்ளது. இந்த வளாகத்தில் கங்கைக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலும் உள்ளது. கோயிலுக்கு அடுத்ததாக கங்கையில் தட்சன் படித்துறையும், இதன் அருகில் நீலேசுவரர் மகாதேவர் கோயிலும் அமைந்துள்ளது.

சான்றுகள் தொகு

  1. The Story of Daksh பரணிடப்பட்டது 2018-06-06 at the வந்தவழி இயந்திரம். Sati, the consort of Shiva was the daughter of Daksha...
  2. Daksheswar Mahadev Temple
  3. the Horse-sacrifice of the Prajapati Daksha The Mahabharata translated by Kisari Mohan Ganguli (1883 -1896], Book 12: Santi Parva: Mokshadharma Parva: Section CCLXXXIV. p. 317. "I am known by the name of Virabhadra’’ and I have sprung from the wrath of Rudra. This lady (who is my companion) is called Bhadrakali and hath sprung from the wrath of the goddess."

வெளி இணைப்புகள் தொகு