தண்டுவட நரம்பு
தண்டுவட நரம்பு என்பது ஒரு கலப்பு நரம்பு ஆகும். இது உடலுக்கும் தண்டுவடத்திற்கும் இடையே இயக்கு, உணர்ச்சி மற்றும் தன்னியக்க சமிக்ஞைகளை எடுத்துச்செல்கின்றன. மனித உடலில் 31 இணை தண்டுவட நரம்புகள் முள்ளந்தண்டு வடத்திலிருந்து பக்கத்திற்கு ஒன்றாக முள்ளந்தண்டு நிரல் ஊடே வெளியேருகின்றன. தண்டுவட நரம்புகள் முள்ளந்தண்டு நிரல்லில் உள்ள எலும்களான கழுத்து முள்ளந்தண்டெலும்புகள், நெஞ்சு முள்ளந்தண்டெலும்புகள், நாரி முள்ளந்தெண்டெலும்புகள், திருவெலும்பு மற்றும் வாலெலும்பு என அவைகளின் பெயர்களினாலேயை அழைக்கப்படுகிறது.[1] இவைகள் முறையே 8 இணை கழுத்து தண்டுவட நரம்புகள், 12 இணை நெஞ்சு தண்டுவட நரம்புகள், 5 இணை நாரி தண்டுவட நரம்புகள், 5 இணை திருவெலும்பு தண்டுவட நரம்புகள் மற்றும் 1 இணை வாலெலும்பு தண்டுவட நரம்பு ஆகும். தண்டுவட நரம்புகள் புற நரம்பு மண்டலத்தின் பகுதிகள் ஆகும்.
தண்டுவட நரம்பு | |
---|---|
வயிற்றுப்புற மற்றும் முதுகுப்புற வேர்களில் இருந்து உருவாகும் தண்டுவட நரம்பு | |
விளக்கங்கள் | |
அடையாளங்காட்டிகள் | |
இலத்தீன் | nervus spinalis |
MeSH | D013127 |
TA98 | A14.2.00.027 |
TA2 | 6143 |
FMA | 5858 |
Anatomical terms of neuroanatomy |
அமைப்பு
தொகுஅணைத்து தண்டுவட நரம்புகளும் கலப்பு நரம்புகள் ஆகும். தண்டுவட நரம்பு வயிற்றுப்புற நரம்பு வேர் மற்றும் முதுகுப்புற நரம்பு வேர் இணைவதன் மூலம் உருவாகிறது. முதுகுப்புற நரம்பு வேர் உட்காவும் நரம்பு இழைகளையும் வயிற்றுப்புற நரம்பு வேர் வெளிக்காவும் நரம்பு இழைகளையும் கொண்டது. எனவே தண்டுவட நரம்புகள் உடலுக்கும் முள்ளந்தண்டு வடத்திற்கும் இடையே சமிக்ஞைகளை கடத்துகிறது. தண்டுவட நரம்புகள் முள்ளந்தண்டு வடத்திலிருந்து அடுத்தடுத்த முள்ளந்தண்டு எலும்புகள் உருவாக்கும் துளை வழியே வெளியேறுகிறது. ஆனால் முதல் இணை தண்டுவட நரம்புகள் சி1 பிடர் எலும்புக்கும் மற்றும் அட்லசுக்கும் இடையேயுள்ள துளை வழியாக வெளியேறுகிறது.
முள்ளந்தண்டு நிரலின் வெளியே தண்டுவட நரம்புகள் இரு கிளைகளாக பிரிகின்றன அவைகள் முறையை முதுகுப்புற கிளை மற்றும் வயிற்றுப்புற கிளை ஆகும். முதுகுப்புற கிளை உடலின் பின்புறத்திற்கு இயக்கு விசை, உணர்வு, தானியக்கு சமிக்ஞைகளை கடத்துகிறது. வயிற்றுப்புற கிளை உடலின் முன்புறம், கை மற்றும் கால் பகுதிகளுக்கு இயக்கு விசை, உணர்வு, தானியக்கு சமிக்ஞைகளை கடத்துகிறது.
சில வயிற்றுப்புற கிளை தண்டுவட நரம்புகள் அடுத்தடுத்த வயிற்றுப்புற கிளைகளுடன் சேர்ந்து தண்டுவட நரம்பு பின்னலகளை உருவாக்கி ஒன்றாக உடல் பாகங்களை கட்டுப்படுத்துகின்றன.
முக்கிய தண்டுவட நரம்பு பின்னல்கள்
தொகுமனித உடலில் உள்ள சில தண்டுவட நரம்பு பின்னல்கள் முறையே கழுத்து, மேற்கை, நாரி மற்றும் திருவெலும்பு தண்டுவட நரம்பு பின்னல்[2][3] ஆகும்.
படங்கள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Spinal Nerves". National Library of Medicine. பார்க்கப்பட்ட நாள் 12 April 2014.
- ↑ 1. Anatomy, descriptive and surgical: Gray's anatomy. Gray, Henry. Philadelphia : Courage Books/Running Press, 1974
- ↑ 2. Clinically Oriented Anatomy. Moore, Keith L. Philadelphia : Wolters Kluwer Health/Lippincott Williams & Wilkins, 2010 (6th ed)