தண்ணாடி

தண்ணாடி (sun glasses). பிரகாசமான பகல் நேரங்களில் பாதுகாப்பான நல்ல பார்வையினையும் பாதுகாப்பாகவும் அமையும் வகையில் வடிவமைக்கப்பட்டது. கண்ணிற்கு குளிர்ச்சியினை அளிக்கவல்லது. உயர் நிலை புறஊதா கதிர்களில் இருந்து எவ்வித சேதமுமின்றி ஒருவருடைய கண்களை நன்கு பாதுகாக்கும் தன்மையுடையது. வழக்கமான கண்ணாடிகள் இருட்டறைகளிலும் ஒளிச்செறிவு மிக்க இடங்களிலும், கண்களுக்கு கூச்சம் ஏற்படுத்தும் மேலும் பாதுகாப்பற்றவை அதனால் இவற்றை விட அதிக சிறப்புமிக்கவை தண்ணாடி (sun glasses). பெரும்பாலான தண்ணாடிகள் சரியான திறனுள்ள ஒளிவில்லைகளை (corrected power lenes) பயன்படுத்தப்படுவதில்லை. எனவே மருத்துவரது ஆலோசனையின் பேரில் சரியான திறனுடைய தண்ணாடிகளை அணிவது சாலச் சிறந்தது. சிறப்பு தண்ணாடிகள் திட்பக்காட்சிக் கருவியமைவு முறையினையும் அல்லது முப்பரிமாண திரைப்படங்களையோ காண உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சில சமயங்களில் வெறுமனே அழகியலுக்காவும் இவை பயன்படுத்தப்படுகின்றன. மிகச்சரியான திறனுடைய நல்ல விலையுயர்ந்த தண்ணாடிகளும், நெகிழிகளாலும் சாதாரண கம்பிசட்டகத்துடனும் மற்றும் பிற பொருட்கள் மூலம் தயாரித்து விலைகுறைவாகவும் தயாரிக்கப்படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தண்ணாடி&oldid=2722247" இருந்து மீள்விக்கப்பட்டது