தன்னிபூர்

உத்திரப்பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமம்

தன்னிப்பூர் (Dhannipur), இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் அயோத்தி மாவட்டத்தில் உள்ள சோகாவல் வருவாய் வட்டத்தில் தன்னிபூர் கிராமம் உள்ளது. இது அயோத்திக்கு தென்மேற்கே 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. தன்னிப்பூர் கிராமத்தில், இடிக்கப்பட்ட பாபர் மசூதிக்கு பதிலாக புதிய தன்னிபூர் மசூதி டிசம்பர் 2020 முதல் கட்டப்பட்டு வருகிறது.[1][2][3] தன்னிபூரில் ஒரே நேரத்தில் 2000 பேர் தொழுகை நடத்தும் வகையில் கட்டப்படும் தன்னிபூர் மசூதி வளாகத்தில், 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை, நூலகம், இசுலாமிய ஆய்வுக் கூடம், மற்றும் உணவுக் கூடம் கட்டுவதற்கு, பிப்ரவரி 2020ல் உத்தரப் பிரதேச அரசு 5 ஏக்கர் வேளாண்மை நிலத்தை சன்னி வக்பு வாரியத்திற்கு ஒதுக்கியது.[2][4][5] தன்னிப்பூர் அயோத்தி மசூதி டிசம்பர் 2023ல் முடிவடையும் என எதிர்பார்க்கபடுகிறது.[6]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Map of Dhannipur Village in Sohawal Tehsil, Ayodhya, Uttar Pradesh". www.mapsofindia.com.
  2. 2.0 2.1 Khan, Arshad Afzaal (7 February 2020). "Uttar Pradesh: Obscure Dhannipur village basks in its mosque glory". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. https://timesofindia.indiatimes.com/city/lucknow/obscure-dhannipur-village-basks-in-its-mosque-glory/articleshow/73994916.cms. 
  3. Sharma, Ritwik (14 February 2020). "The mood in Dhannipur, a village in Ayodhya, chosen for the 'Babri Masjid'". பிசினஸ் ஸ்டாண்டர்ட். https://www.business-standard.com/article/current-affairs/the-mood-in-dhannipur-a-village-in-ayodhya-chosen-for-the-babri-masjid-120021401728_1.html. 
  4. அயோத்தி மசூதி கட்டுமான பணி 2023ல் முடிவடையும்
  5. "Where is Dhannipur? All about the site allotted to Sunni Waqf Board for a mosque". இந்தியா டுடே. 5 February 2020. https://www.indiatoday.in/india/story/30-km-from-where-babri-masjid-stood-here-s-all-you-need-to-know-about-dhannipur-1643583-2020-02-05. 
  6. Construction of Ayodhya mosque likely to be completed by December 2023


"https://ta.wikipedia.org/w/index.php?title=தன்னிபூர்&oldid=3743656" இலிருந்து மீள்விக்கப்பட்டது