தபால் முகவரி

=தபால் முகவரி=' தபால் முகவரி என்பது எப்பொழுதும் உறுதியான நிலையில் இருக்கும் செய்திகளின் தொகுப்பு ஆகும்.ஒரு கட்டிடத்தின் அமைவிடம், அடுக்குமாடிக் குடியிருப்பு ,வீட்டு மனையின் கட்டமைப்பு, அரசியல் அமைப்பு எல்லைகள் , தெருவின் பெயர், கதவு எண் இவற்றை தபால்குறியீட்டு எண் மூலம் எளிதில் கண்டறியமுடியும்

வரலாறு'தொகு

தபால் முறை நவீனமாக்கப்படும் வரை 18,19 ஆம் நூற்றாண்டுகளில் அதிகமான வீடுகள், கட்டிடங்களுக்கு எண்கள் இல்லாமல் இருந்தன. தெருக்கள் இட அடையாளங்களைக் கொண்டு பெயரிடப்பட்டன. எடுத்துக்காட்டாக சந்தை போன்றவற்றைக் குறிப்பிடலாம். ஆசியாவில் உள்ள நிறைய நகரங்களில் உள்ள சிறிய தெருக்கள் எண்கள் இடப்படாமல் உள்ளன. இந்த நடைமுறை இன்று வரை சப்பான் நாட்டில் உள்ளது. தபால்காரர் உள்ளூரைச் சேர்ந்தவராக இருப்பின் தபால்களை விரைவில் சேர்த்துவிடமுடியும்.எனவே தபால்முறைகள் வளர்ச்சியடையும்போது தபால் பட்டுவாடா எளிதில் செய்ய கட்டிடங்களுக்கு எண்கள் இடப்படுவது தேவையானது ஒன்றாகும்.

முகவரி வடிவமைப்புதொகு

உலகில் பெரும்பாலான இடங்களில் முகவரி தெளிவாக வரையறுக்கப்பட்டவற்றிலிருந்து பொதுவானதுவரையிலான வரிசையில் கீழ்க்கண்டவாறு அமைக்கப்பட்டிருக்கும்.
      இந்தியா(ஊர்ப்புறம்)
       வடிவமைப்பு        
       1.பெயர்         
       2.தெரு எண்,தெருபெயர்
       3.பெயர்
       4,கிராமத்தின் பெயர்
       5. மாவட்டத்தின் பெயர்
       6. தபால் குறியீட்டு எண்
       7.மாநிலம்
      இந்தியா (நகர்ப்புறம்)
       1.பெயர்
       2.தொழில்
       3.மனை எண்,கட்டிட எண்
       4.அமைவிடம்(அல்லது)அருகாமை
       5.நகரம் - தபால் குறியீட்டு எண்
       6.மாநிலம்

நோக்கம்

   மாணவர்கள் தபால்துறை பற்றி அறிந்துகொள்ளுதல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தபால்_முகவரி&oldid=2722248" இருந்து மீள்விக்கப்பட்டது