தமிழகத்தில் சுற்றுலா வளர்ச்சி

“யாதும் ஊரே யாவரும் கேளிர்”

“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்பது கணியன் பூங்குன்றனாரின் பொன்மொழியாகும். இக்கூற்று சுற்றுலா உணர்வுக்கும், உலகமெங்கும் வளர்ந்து வரும் சுற்றுலாத் துறைக்கும் பொருந்தும். சுற்றுலா செல்லுதல் 19 - ஆம் நூற்றாண்டில் மலர்ச்சியுற்றது. இன்பப் பயணம், கனவுகளின் காட்சிகளை நேரில் கண்டு களித்தல், பணம் செலவு செய்தல், ஓரிடத்தில் குறிப்பிட்ட காலம் தங்குதல் போன்றவை இதனுள் அடங்கும்.

“தமிழகம் காண வருவோரைப் பயணிகளாக வரவேற்றுப் பாசம் மிகுந்த நண்பராக வழியனுப்புவோம்” என்பது தமிழக அரசின் குறிக்கோளாகும்[1] .

சுற்றுலா வளர்ச்சிக் கழகம் தொகு

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் 1968 - இல் ஆரம்பிக்கப் பெற்றது. 1.7.1971 வரை அது வணிக நோக்கோடு செயல்பட்டது. இக்கழகம் தொடங்கும் பொழுது ஆரம்ப மூலதனம் ரூ.50 இலட்சமாகவும், தற்பொழுது ரூ.100 இலட்சமாகவும் உயர்ந்து உள்ளது.

மாவட்ட சுற்றுலா மையங்கள் தொகு

தமிழ்நாடு அரசு 40 இடங்களை மாவட்டச் சுற்றுலா மையங்களாகத் தேர்ந்தெடுத்துள்ளது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ளுர்ச் சுற்றுலாப் பயணிகளுக்காக இரண்டு சுற்றுலா மையங்கள் தேர்ந்தெடுக்கப் பெற்று அவற்றின் வளர்ச்சிக்கான திட்டங்கள் தீட்டப்பெற்றுள்ளன.

தமிழகத்தின் சிறப்பு தொகு

இயற்கைச் செல்வம், தொன்மை சிறப்பு, பண்பாட்டு முதிர்ச்சி, கலைவளம், மொழிவளம், மலைநகர்கள், வனங்கள், காடுகள், வனவிலங்குகள், பறவைகள், பசுமை நிறைந்த சமவெளிகள், வளம் பெருக்கும் ஆறுகள், அருவிகள், நீண்ட வெண்மணற்கடற்கரைகள், உப்பங்கழிகள், கால்வாய்கள், வானுயர்ந்த கோபுரங்கள் கொண்ட கோயில்கள், வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள், அற்புதக் கைவினைப் பொருள்கள், பார்க்கப் பார்க்கப் பரவசமூட்டும் பரதம், கேட்கக் கேட்கத் தெவிட்டாத இசை, கிராமியக்கலைகள் போன்ற பல்வேறு வளங்கள் தமிழகத்தில் இருக்கின்றன. இச்சிறப்பினைச்

“செல்வம் எத்தனை உண்டு புவிமீதே
அவையாவும் படைத்த தமிழ்நாடு”

என்று பாரதியும் பாடியுள்ளார்.

கோயில்கள் தொகு

தமிழ்நாட்டைக் “கோயில்கள் நாடு” எனலாம். தமிழ்நாடு அவ்வளவு மிகுதியான கோயில்களைக் கொண்டுள்ளது. “கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்பது தமிழ்நாட்டுப் பழமொழியாகும். இக்கருத்தை அனைவரும் ஏற்றுள்ளனர். தமிழ்நாட்டுக் கோயில்கள் தமிழ்நாட்டின் பண்பாடு> மரபு> நாகரிகம்> போன்றவற்றைப் பாதுகாக்கும் இடங்களாகத் திகழ்கின்றன. கோயில்கள் பழந்தமிழரின் நாகரிகச் சின்னமாகும். கோயில்கள் மக்களின் வாழ்க்கையில் மிகுந்த பங்கெடுக்கின்றன. தமிழகத்தில் உள்ள சுற்றுலா தளங்கள்

சென்னை தொகு

  • மெரீனா கடற்கரை
  • புனித ஜார்ஜ் கோட்டை
  • அருங்காட்சியகம்
  • துறைமுகம்
  • காமராசர் நினைவாலயம்
  • அண்ணா சதுக்கம்
  • இராஜாஜி மாளிகை
  • கிய+பிட்போ என்ற போர் நினைவகம்
  • எலியட்ஸ் கடற்கரை
  • அஷ்டலட்சுமி கோயில்
  • அடையாறு
  • பிரம்ம ஞான சபை
  • நூலகம்
  • ரிப்பன் கட்டிடம்
  • வள்ளுவர் கோட்டம் போன்றவை சிறப்பு வாய்ந்தவை.

மேலும் மாங்காடு, மயிலை கபாலிசுவரர், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, கந்த கோட்டத்திலுள்ள முருகன், நங்கநல்லூர் ஆஞ்சநேயர் போன்றவையும் உள்ளன.

வேலூர் தொகு

அழகிய அழகுடன் கூடிய கோட்டை> ஜலகண்டேசுவரர் ஆலயம்> முத்துமண்டபம் இலங்கை தமிழ் மன்னன் ஸ்ரீவிக்கிரம ராஜசிங்காவின் நினைவு மண்டபம் மிகவும் பழமையான மண்டபமாகும்.

காஞ்சிபுரம் தொகு

வைகுந்தப்பெருமாள்> காமாட்சியம்மன்> கைலாசநாதர் வரதராஜப்பெருமாள் கோயில்> திருப்பத்திக் குன்றம் ஜைன கோயில்> ஓவியங்கள் காலத்தால் புகழ் பெற்றவையாகும்.

திருவண்ணாமலை தொகு

நெருப்புஸ்தலம், வல்லாள மகாராஜனால் கட்டப்பட்ட சிவன் கோயில் - “127” உயர கோபுரம். அருணகிரிநாதருக்கு இறைவன் அருளாசி வழங்கி திருப்புகழ் படைத்தத் தலம் - திருக்கார்த்திகை திருநாளை வெகுச்சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர்.

தஞ்சாவூர் தொகு

சரசுவதி மகால் நூலகம்> தஞ்சாவூர்த்தட்டு> தலையாட்டிப் பொம்மை> தமிழ்ப் பல்கலைக்கழகம்> பிரகதீஸ்வரர் ஆலயம் என்றும் அழியாப் புகழ்பெற்றவையாக விளங்குகின்றன.

பாண்டிச்சேரி தொகு

புரட்சிக்கவி பாரதிதாசன் வாழ்ந்த மண்> ரொமெய்ன் ரோலண்ப் நூலகம்> அரவிந்தர் ஆசிரமம்> புதுவை மையப் பல்கலைக்கழகம் இங்கிருந்து 20 கி.மீ. தொலைவில் அரிக்கமேடு என்ற ரோமானியருடன் தொடர்புடைய வர்த்தக நகரம் தொல்லியல் துறையினரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது என்பது முக்கியமானவை.

மதுரை தொகு

மாரியம்மன் தெப்பகுளம்> கூடலழகர் கோயில்கள் திருமோகூர்> மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்களிலுள்ள இறைவனை வணங்கும்போது நமக்கு இம்மையில் நன்மை தருவார் என வாக்கும் நிகழ்கின்றன.

சேலம் (ஏற்காடு) தொகு

கோடை வாசல் இடமாகும். இவ்விடம் ஏழைகளின் ஊட்டி என வழங்குவர். கடல் மட்டத்திலிருந்து 4330 அடி உயரம் 1820 - இல் கேப்ரன் என்ற ஆங்கிலேயர் அங்கு “கிராஞ்ச்” என்னும் கட்டிடத்தைக் கட்டிக் குடியேறினார். சீமாட்டி மேடை> ஆடவர் மேடை கிள்ளிய+ர் நீர்வீழ்ச்சி ஆகியன குறிப்பிடத் தகுந்த இடங்களாகும்.

தமிழக பறவைகள் சரணாலயம் தொகு

பழவேற்காடு> சென்னைக்கருகில் உள்ளது. மழைக் காலத்தில் பறவைகள் வருகை காரணமாகப் பறவைகள் சரணாலயம் விளங்குகிறது மற்றும் வேடந்தாங்கல் சென்னையிலிருந்து 85 கி. மீ. தொலைவில் உள்ளது வேடந்தாங்கல் ஏரி. இது 74 ஏக்கர் பரப்புள்ள ஏரியாகும். அக்டோபர் முதல் பறவைகள் வருகின்றன. பன்னாட்டு பறவைகள் சரணாலயமாக விளங்குகின்றன.

நாமக்கல் மாவட்டம் தொகு

விசேட ஆஞ்சநேயர் தலம்> இது ஒரே கல்லால் செய்யப்பட்டதே சிறப்பாகும். திருச்செங்கொடு உலக அளவில் பிரசித்தி பெற்ற அர்த்தனாரீஸ்வரர் கோயில் ஆண்பாதி> பெண்பாதி அமைந்த சிவன்> பார்வதி முழுமுதற்கடவுன் சிறப்பு> கைவினைப் பொருட்களின் வளர்ச்சி இங்குதான் காணப்பட்டது.

முடிவுரை தொகு

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தலைவராய் இருந்த ஏ.வி.பி ஆசைத்தம்பியும் மற்றும் இரண்டு மூத்த அதிகாரிகளும் சிங்கப்பர், மலேசியா சென்று பல சுற்றுலாத் திட்டங்களைப் பற்றிக் கண்டு வந்தனர். இன்று தமிழகக் கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் “சுற்றுலாவியல்” பாடமாக அமைந்துள்ளது. இதுவே தமிழ்நாட்டின் சுற்றுலா வளர்ச்சிக்கு சிறந்தசான்று ஆகும்.

குறிப்புகள் தொகு

புற இணைப்புகள் தொகு