தமிழன் சடுகுடு மன்றம்

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், தாமரன்கோட்டை கிராமத்தில் சுமார் நாற்பது ஆண்டுகளாக இந்த மன்றம் இயங்கி வருகிறது. இதன் முக்கிய பணி தமிழர் திருநாள் பொங்கல்(தை மாதம் முதல் நாள்) அன்று விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளை நடத்துவதாகும். இடைவிடாமல் பல ஆண்டுகளாக தொடர்ந்து இந்த நிகழ்ச்சிகளை நடத்திவருவது இதன் முக்கிய சிறப்பாகும்.


மன்ற அமைப்புதொகு

இம்மன்றத்திற்கு நிரந்தரமான அமைப்போ, பதிவு செய்யப்பட்ட சட்ட முறைகளோ இல்லை. ஆர்வமுள்ள உள்ளூர் இளைஞர்கள் ஒன்றுகூடி ஒவ்வொரு ஆண்டும் நிகழ்ச்சிகளை நடத்துவார்கள்.

முக்கிய போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகள்தொகு

  1. பல பிரிவினருக்கான சடுகுடு போட்டிகள்
  2. பல பிரிவினருக்கான ஓட்ட போட்டிகள்
  3. பெரியோருக்கான மாராத்தான் ஓட்ட போட்டி
  4. பெரியோருக்கான மிதிவண்டி வேக ஓட்ட போட்டி
  5. பெரியோருக்கான மிதிவண்டி மெது ஓட்ட போட்டி
  6. பரிசளிப்பு விழாவும் சிறப்பு சொற்பொழிவும்


நிதி ஆதாரம்தொகு

முற்றிலும் ஆர்வலர்களால் நடத்தப்படும் இம்மன்றம் உள்ளூர் மக்களிடம் மற்றும் கடைகளிலிடம் இருந்தும் நிதி ஆதாரம் பெறுகிறது. இது தவிர போட்டிகளுக்கான நுழைவுக் கட்டணமும் ஒரு முக்கிய நிதி ஆதாரமாகும்