தமிழர் மதம் (நூல்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தமிழர் மதம் எனும் இந்நூலானது 1972 ஆம் ஆண்டில் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரால் எழுதப்பட்டது. இந்நூலிலே பழந்தமிழர் மதம், பின்பற்றிய கொள்கைகள், வணங்கிய தெய்வங்கள் என பலவற்றை இலக்கிய சான்றுகளுடன் தருகிறார் பாவாணர்.
இந்நூலின் முன்னுரையிலே மதம், சமயம் ஆகியன தென்சொல்லே (தமிழ் வேர் கொண்ட சொல்) என நிறுவும் தேவநேயர், மதம் தோன்றிய வகை, மூவகை மதம், குமரிநாட்டு மதநிலை ஆகியவற்றையும் தொட்டுச் செல்கிறார்.
பின்னர், நூலிலே மிக விரிவாக குமரி நிலையியல், இடைநிலையியல், நிகழ்நிலையியல், வருநிலையியல், முடிபுரையியல் எனும் ஐந்து தலைப்புக்களில் பண்டைக்கால வழக்கங்கள் குன்றி, வேறு பல செல்வாக்குகள் விரவினமையையும், நிகழ்காலத்தில் தமிழர் பண்பாடு பேண வேண்டிய கட்டாயத்தையும் விளக்குகின்றார்.