தமிழறியும் பெருமாள்

டி. ஆர். ரகுநாத் இயக்கத்தில் 1942 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

தமிழறியும் பெருமாள் 1942 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். உமா பிக்சர்ஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. ஏ. செல்லப்பா, எம். ஜி. ஆர் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

தமிழறியும் பெருமாள்
விளம்பர சுவரொட்டி
தயாரிப்புஉமா பிக்சர்ஸ்
கதைதிரைக்கதை டி. ஆர். ரகுநாத்
கதை இளங்கோவன்
நடிப்புவி. ஏ. செல்லப்பா
டி. எஸ். துரைராஜ்
எம். ஜி. ஆர்
ஆர். பாலசுப்பிரமணியம்
எம். ஆர். சந்தானலட்சுமி
எம். எஸ். தேவசேனா
டி. எஸ். ஜெயா
சி. டி. ராஜகாந்தம்
வெளியீடுஏப்ரல் 30, 1942
நீளம்16000 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைச்சுருக்கம்

தொகு

சமஸ்க்ருத கவிஞரும், நாடக ஆசிரியருமான காளிதாசனின் கதையை அடிப்டையாகக் கொண்டு எடுக்கப்பட்டத் திரைப்படமாகும்.

நடிகர்கள்

தொகு

இப்படத்தின் பாடலாசிரியர் உடுமலை நாராயணகவி ஆவார். இசை அமைப்பாளரின் பெயர் இப்படத்தில் குறிப்பிடப்படவில்லை. சரஸ்வதி ஸ்டோர்ஸ் என்ற இசைக்குழு பாடல்களுக்கு இசை வாசித்தது. வி. ஏ. செல்லப்பா பாடிய "கல்வியை போல்" என்ற பாடல் பிரபலமான பாடலாகும்.

வரவேற்பு

தொகு

ஒளிப்பதிவும் ஒலிப்பதிவும் நன்றாக அமைந்திருந்தாலும், இப்படம் வணிகரீதியாக வெற்றிபெறவில்லை.

உசாத்துணை

தொகு

வெளி-இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழறியும்_பெருமாள்&oldid=3958578" இலிருந்து மீள்விக்கப்பட்டது