தமிழவேள் விருது

தமிழவேள் விருது சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியத்துறையின் ஒரு முக்கிய விருதாகக் கருதப்படுகிறது. இவ்விருது சிங்கப்பூரில் தமிழ் வளர்ச்சிக்குப் பெரிதும் பாடுபட்ட தமிழவேள் கோ. சாரங்கபாணி அவர்களின் பெயரால் வழங்கப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் முத்தமிழ் விழாவின் போது தமிழ்த் தொண்டாற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்த ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு இவ்விருதின் மூலம் சிறப்பிக்கப்படுகிறார். 1988ஆம் ஆண்டு முதல் இவ்விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

விருது பெற்றவர்கள் பட்டியல் தொகு

வருடம் விருது பெற்றவர்
1989 கவிஞர் சிங்கை முகிலன்
1989 கவிவாணர் ஐ. உலகநாதன்
1989 அ. நா. மொய்தீன்
1996 சே.வெ. சண்முகம்
1997 கவிஞர் ந. பழநிவேலு
1998 தமிழறிஞர் மெ. சிதம்பரம்
1998 பி. கிருஷ்ணன்
1999 மா. இளங்கண்ணன்
2000 கவிஞர் க.து.மு. இக்பால்
2001 ஜே. எம். சாலி
2001 கவிஞர் முரசு. நெடுமாறன் (வெள்ளி விழா)
2002 முனைவர் வீரமணி
2003 இராம. கண்ணபிரான்
2004 பாத்தென்றல் முருகடியான்
2005 வை. திருநாவுக்கரசு
2006 கவிஞரேறு அமலதாசன்
2007 பாத்தேறல் இளமாறன்
2008 பாத்தூரல் முத்துமாணிக்கம்
2009 வெண்பாச் சிற்பி இக்குவனம்
2010 பார்வதி பூபாலன்
2010 முனைவர் சுப. திண்ணப்பன் (பவள விழா)
2011 கவிஞர் திரு. பெ. திருவேங்கடம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழவேள்_விருது&oldid=1177654" இலிருந்து மீள்விக்கப்பட்டது