தமிழும் சரஸ்வதியும் (தொலைக்காட்சித் தொடர்)

தமிழும் சரஸ்வதியும் என்பது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1][2][3] இந்த தொடர் விகடன் ஒளித்திரை என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க, ச. குமரன் இயக்கத்தில் தீபக் தினகர் மற்றும் நச்சத்திரா ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.[4] இந்த தொடர் சூலை 12, 2021 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 1:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.[5] இதன் அத்தியாயங்கள் ஹாட் ஸ்டார் என்ற ஒடிடி தளத்திலும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

தமிழும் சரஸ்வதியும்
வகைகுடும்பம்
காதல்
நாடகத் தொடர்
உருவாக்கம்S. குமரன்
எழுத்துநந்தன் ஸ்ரீதரன்
S. மருதுசங்கர்
திரைக்கதைவே.கி. அமிர்தராஜ்
C.U. முத்துச்செல்வன்
இயக்கம்S. குமரன்
நடிப்பு
முகப்பு இசைகிரண்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்சீனிவாசன்
விகடன் ஒளித்திரை
படப்பிடிப்பு தளங்கள்தமிழ் நாடு
ஒளிப்பதிவுS.T. மாட்ஸ்
தொகுப்பு
 • B. சந்துரு
படவி அமைப்புபல ஒளிப்படக்கருவி
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்விகடன் ஒளித்திரை
ஒளிபரப்பு
அலைவரிசைவிஜய் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்12 சூலை 2021 (2021-07-12) –
ஒளிபரப்பில்
Chronology
முன்னர்செந்தூரப்பூவே

கதை சுருக்கம்

தொகு

இந்த தொடரின் கதை பணக்காரரான குடும்பத்தை சேர்ந்த தமிழரசன் (தீபக் தினகர்) என்பவன் தனது குடும்ப சூழ்நிலையால் படிப்பை தொடரமுடியாமல் குடும்பத்தொழிலில் ஈடுபட்டு அதில் வெற்றியும் காண்கின்றான் ஆனால் சமூகம் அவனை படிக்காதாவன் என ஏளனம் செய்கின்றது. இதன் நடுவில் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த அழகான மற்றும் வெகுளித்தனமான சரஸ்வதி (நச்சத்திரா) என்ற பெண் தனது 12வது வகுப்பு பரிசையில் தேர்ச்சி செய்வதற்கு பல முறை முயற்சி செய்தும் இவளால் வெற்றி கொள்ள முடியவில்லை இதனால் குடும்பத்தினரால் உசத்தினப்படுத்தப்படுகிறாள். இப்படி வேவ்வேறு குடும்ப பின்னணியில் இருந்து வரும் இருவருக்கும் உள்ள ஒரே பிரச்சனை படிப்பு, அதையும் தாண்டி இருவரும் எப்படி வாழ்வில் ஒன்றே சேரப்போகின்றார்கள் என்பது தான் கதை.

நடிகர்கள்

தொகு

முதன்மை கதாபாத்திரம்

தொகு
 • தீபக் தினகர் - தமிழரசன் 'தமிழ்'
  • மிகவும் பொறுப்பான மற்றும் மரியாதைக்குரிய பையன், அவர் தனது கல்வியை கைவிட்டு, குடும்ப வியாபாரத்தை மிகச் சிறிய வயதில் எடுத்துக் கொண்டு அதிலும் வெற்றி காண்கிறார்.
 • நச்சத்திரா - சரஸ்வதி
  • வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க விரும்பும் ஒரு நடுத்தர குடும்பத்து இளம் பெண். ஆனால் அவளால் 12ஆம் வகுப்பு பரீட்சசையில் தேர்ச்சி பெற முடியாத சூழ்நிலையால் தந்தையால் வெறுக்கப்படுகிறாள்.

சந்திரகலா கதாபாத்திரங்கள்

தொகு
 • ரேகா கிரிஷ்ணப்பா - சந்திரகலா
  • ஒரு பணக்கார தொழிதிபர். தான் நினைத்ததை செய்துமுடிப்பதில் ஆற்றலும் செல்வாக்கும் உடையவர்.
 • தர்ஷ்ணா - வசுந்தரா
  • சந்திரகலாவின் மகள், கார்த்திக்கின் காதலி.
 • சைப் - ஆதி (மகன்)

தமிழரசன் குடும்பத்தினர்

தொகு
 • மீரா கிருஷ்ணன் - கோதை நடேசன்
  • தமிழரசன், கார்த்திக் மற்றும் ராகினியின் தாய், மிகவும் அனுபவர் எல்லோரையும் புரிந்துகொள்ளும் பக்குவம் உடையவர்.
 • ரமணிச்சந்திரன் மகாலிங்கம் - நடேசன்
  • தமிழரசன், கார்த்திக் மற்றும் ராகினி ஆகியோரின் தந்தை மற்றும் கோதையின் கணவன்.
 • நவீன் வெற்றி - கார்த்திக்
  • தமிழரசனனின் தம்பி, அண்ணன் மீது பாசம் கொண்டவன். இவர் ஒரு தொழிற்சாலையில் வேலை செய்கிறார், எல்லா நேரத்திலும் தனது சகோதரனை அதிரிப்பவர் மற்றும் வசுந்தராவின் காதலன்.
 • லாவண்யா மாணிக்கம் - ராகினி
  • தமிழரசனின் ஒரே தங்கை, ஒரு மருத்துவ மாணவி.

சரஸ்வதி குடும்பத்தினர்

தொகு
 • பிரபாகரன் சந்திரன் - சொக்கலிங்கம்
  • சரஸ்வதியின் தந்தை, ஒரு பள்ளி அதிபர்.
 • அனிதா வெங்கட் - வாசுகி சொக்கலிங்கம்
  • சரஸ்வதியின் தாய், தனது மகள் படிப்பில் வெற்றி பெற தன்னால் முடிந்தவரை உதவி செய்கிறார். கணவன் திட்டில் இருந்து மகளை பாதுகாக்க நினைப்பவர்.
 • மதன் - அருண் (சகோதரன்)
 • சங்கீதா - (சகோதரி)
 • உமா மகேஸ்வரி - (சகோதரி)
 • ரேவதி - (சரஸ்வதியின் பாட்டி)

துணைக் கதாபாத்திரங்கள்

தொகு
 • மதுமிகா - மது (தமிழரசனின் உறவினர்)
 • மெரசி லேயாள் - (மதுவின் தாய்)
 • சுவேதா - (சரஸ்வதியின் தோழி)
 • யோகி - நமச்சிவாயம் (தமிழரசனின் நண்பன்)

தயாரிப்பு

தொகு

விகடன் ஒளித்திரை என்ற தயாரிப்பு நிறுவனம் 20 வருடங்களுக்கு மேலாக சன் தொலைக்காட்சியில் கோலங்கள் (2003-2009), திருமதி செல்வம் (2007-2013), தென்றல் (2009-2015), தெய்வமகள் (2013-2018), நாயகி (2018-2020) போன்ற பல வெற்றி தொடர்களை இயக்கி வந்ததது. 2020 ஆம் ஆண்டு பிற்பகுதியில் அந்த தொலைக்காட்சி நிறுவனத்துடன் ஏற்பட்ட பிரச்சனையால் நாயகி மற்றும் ரன் போன்ற தொடர்களை அவசரமாக முடித்துக் கொண்டு அந்த தொலைக்காட்சியில் இருந்து வெளியேறியது.

2021 ஆம் ஆண்டு முற்பகுதியில் விஜய் தொலைக்காட்சி உடன் இணைந்து ஒரு புதிய தொடரை இயக்குவதாக அறிவிக்கப்பட்டது.[6][7] இந்த தொடருக்கான முதல் முன்னோட்டக் காட்சிகள் மே, 2021 இல் வெளியாக இருந்த தருணத்தில் கொரோனா கிருமி தோற்று நோய் காரணாமாக ஜூன் 24 இல் வெளியானது.[8]

நடிகர்களின் தேர்வு

தொகு

இந்த தொடரில் கதாநாயகனாக நடிகர் தீபக் தினகர் என்பவர் மீண்டும் ஐந்து வருடங்களுக்கு பிறகு நடிக்கின்றார், இவருக்கு ஜோடியாக நச்சத்திரா என்பவர் நடிக்கின்றார்.[9] இருவரும் இதே தயாரிப்பு நிறுவனத்தில் வெவ்வேறு தொடர்களில் நடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மீரா கிருஷ்ணன் மற்றும் ரேகா கிரிஷ்ணப்பா[10][11][12] ஆகியோர் மீண்டும் இதே தயாரிப்பு நிறுவனத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

மதிப்பீடுகள்

தொகு

கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.

ஆண்டு மிகக் குறைந்த மதிப்பீடுகள் மிக உயர்ந்த மதிப்பீடுகள்
2021 0.0% 6.8%
2021 0.0% 0.0%

சர்வதேச ஒளிபரப்பு

தொகு

மேற்கோள்கள்

தொகு
 1. "தமிழும் சரஸ்வதியும் புதிய தொடர்". Dinamalar.{{cite web}}: CS1 maint: url-status (link)
 2. "அட இவ்ளோவா? முன்னணி சேனல்கள் களமிறக்கும் புதிய ஷோக்கள்!". The Indian Express.{{cite web}}: CS1 maint: url-status (link)
 3. "Star Vijay to launch family drama Thamizhum Saraswathiyum". www.exchange4media.com.{{cite web}}: CS1 maint: url-status (link)
 4. "Deepak Dinkar and Nakshathra Nagesh excited about upcoming show Thamizhum Saraswathiyum". The Times of India. 25 June 2021. பார்க்கப்பட்ட நாள் 13 July 2021.
 5. "New TV show Thamizhum Saraswathiyum to premiere on July 12". The Times of India. 6 July 2021. பார்க்கப்பட்ட நாள் 13 July 2021.
 6. "Coronavirus | Film and TV shooting activities to be suspended till May 31, says FEFSI". The Hindu.{{cite web}}: CS1 maint: url-status (link)
 7. "It took almost a month to get my sense of taste and smell back: Navin". The Times of India.{{cite web}}: CS1 maint: url-status (link)
 8. "தமிழும் சரஸ்வதியும்.. விஜய் டிவியில் வருகிறது புது சீரியல்! ப்ரொமோ வீடியோ இதோ". The Times of India.{{cite web}}: CS1 maint: url-status (link)
 9. "விஜய் டிவியின் புதிய சீரியல்.. இணையும் நட்சத்திர ஜோடி." tamil.indianexpress.com.{{cite web}}: CS1 maint: url-status (link)
 10. "Rekha Krishnappa set for her TV comeback; details inside". The Times of India. Archived from the original on 18 April 2021.
 11. "Rekha Krishnappa all excited about her new project 'Thamizhum Saraswathiyum'". The Times of India.
 12. "Rekha Krishnappa turns nostalgic; shares a glimpse of her debut show 'Mayamruga'". The Times of India.
விஜய் தொலைக்காட்சி : திங்கள்-வெள்ளி இரவு 7:30 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி தமிழும் சரஸ்வதியும் அடுத்த நிகழ்ச்சி
செந்தூரப்பூவே பாவம் கணேசன்