தமிழ்நாடு அரசின் ஊனமுற்றோருக்கான திருமணத் திட்டங்கள்

தமிழ்நாடு அரசு ஊனமுற்றவர்களைத் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

கை, கால் ஊனமுற்றவர்

தொகு

ஒரு கை அல்லது ஒரு கால் இழந்தோரைத் திருமணம் செய்து கொள்பவருக்கு நிதியுதவி அளிக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

உதவிக்கான தகுதிகள்

தொகு
  1. தம்பதிகளில் ஒருவர் கை, கால் ஊனமுற்றவராக இருத்தல் வேண்டும்.
  2. பிறவியிலேயே ஊனமுற்றவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
  3. குடும்பத்தின் ஆண்டு வருமானம் 24,000க்குக் குறைவாக இருக்க வேண்டும்.

உதவித்தொகை

தொகு
  • ரூபாய் 5000 வழங்கப்படும். இதில் ரூபாய் 3000 தேசிய சேமிப்புப் பத்திரமாகவும், ரூபாய் 2000 காசோலையாகவும் வழங்கப்படும்.

பார்வையற்றவர்

தொகு

பார்வையற்றவரைத் திருமணம் செய்து கொள்பவருக்கு நிதியுதவி அளிக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

உதவிக்கான தகுதிகள்

தொகு
  1. தம்பதிகளில் ஒருவர் பார்வையற்றவராக இருத்தல் வேண்டும்.
  2. பார்வையற்றவரைத் திருமணம் செய்து கொள்ளும் பார்வையுடையவரின் ஆண்டு வருமானம் 24,000க்குக் குறைவாக இருக்க வேண்டும்.

உதவித்தொகை

தொகு
  • ரூபாய் 10000 வழங்கப்படும். இதில் ரூபாய் 7000 தேசிய சேமிப்புப் பத்திரமாகவும், ரூபாய் 3000 ரொக்கமாகவும் வழங்கப்படும்.

பேசும் திறனற்ற காது கேளாதவர்

தொகு

பேசும்திறனற்ற காது கேளாதவர்களைத் திருமணம் செய்து கொள்பவருக்கு நிதியுதவி அளிக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

உதவிக்கான தகுதிகள்

தொகு
  1. திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளில் ஒருவர் 100 சதவிகிதம் பேசும் திறனற்று காதுகேளாதவராக இருத்தல் வேண்டும்.
  2. 35 வயதுக்கு மேற்படாதவர்களுக்கு வருமான வரம்பு எதுவுமில்லை.

உதவித்தொகை

தொகு
  • ரூபாய் 5000 வழங்கப்படும். இதில் ரூபாய் 3000 தேசிய சேமிப்புப் பத்திரமாகவும், ரூபாய் 2000 ரொக்கமாகவும் வழங்கப்படும்.

விண்ணப்பிக்க

தொகு

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட மறுவாழ்வு அலுவலர் அலுவலகத்தில் தேவையான விண்ணப்பப் படிவங்களைப் பெற்று நிரப்பி, தேவையான இணைப்புகளைச் செய்து விண்ணப்பிக்க வேண்டும். மாவட்ட மறுவாழ்வு அலுவலர் இந்த விண்ணப்பப் படிவங்களை ஆய்வு செய்து குறிப்பிட்ட உதவித்தொகைகளை வழங்குகிறார்.